குமார கம்பணன் Profile picture
வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள் !! நான் எழுத.... நீங்கள் படிக்க... No replies....

Sep 15, 2020, 5 tweets

பரட்டைத்தலை என சோஷியல் மீடியாவால் எள்ளி நகையாடப்பட்ட தற்போதைய தெலுங்கானா கவர்னர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றிய பதிவு
**********************************

என்னுடைய லாரியில் முன்பு ஓட்டுனராகப் பணி புரிந்த ஒருவர் கடந்த வாரம் கோவில்பட்டியில் இருந்து தெலுங்கானாவிற்கு PPE Kit ஏற்றிச் சென்றிருக்கிறார். லோடி இறக்கிவிட்டு திரும்பும் வழியில் வாகனம் நிர்மல் காட் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர் படுகாயம்.

உடனே அவரின் உறவினர்கள் எவரோ எவரையோ பிடித்து தமிழிசை அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் உதவிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டு விட்டு தனது கணவர் சவுந்தர் ராஜனை மேலதிக உதவிக்கு நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

அந்த விபத்தில் ஓட்டுனரின் இடது கால் முற்றிலும் சேதமடைந்ததால் செகந்திராபாத் கிம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைந்து அனைத்து உதவிகளும் செய்திருக்கிறார்.

இந்த விபத்துச் செய்தி கேட்டு இன்று அந்த ஓட்டுனரை வீடு சென்று பார்த்த போது அவர் கூறிய தகவல்கள் தான் இவை

ஒரு தமிழர் எனும் முறையில் ஒடி வந்து உதவிய இந்த நல்ல உள்ளத்தைத்தான் இந்த சோஷியல் மீடியா புன்னகை பிரபலங்கள் பரட்டை என எள்ளி நகையாடினர்.

பி.கு. அந்த ஓட்டுனர் பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்தக் கட்சியின் அபிமானி என்பதனை இங்கு தெரிவிப்பது நாகரீகமும் அல்ல 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling