Kavin Malar Profile picture
Writer/Journalist

Sep 15, 2020, 16 tweets

A must read
*
2007ஆம் ஆண்டு
தமிழகத்தில்
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு நுழைவுத்தேர்வு தடை செய்யப்பட்டது

நான் 2005ஆம் ஆண்டு
நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவக்கல்விக்குள் நுழைந்தவன்

நாமக்கல் நகரின் பிரபலமான பள்ளியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது

அங்கு பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இரண்டிலும் எங்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக்கு என பிரத்யேக கோச்சிங் வழங்கப்படும்

சனி ஞாயிறு
மாலை நேர வகுப்புகள் என்று நுழைவுத்தேர்வுக்கு நாங்கள் தயார் ஆனோம்

இயற்பியல்
வேதியியல்
உயிரியியல் பாடங்களை கரைத்துக்குடிக்க வேண்டும்.

இதைக்கொண்டு தியரி எக்சாம் எழுத முடியும்.

நுழைவுத்தேர்வுக்கும் சிலபஸ் இந்த புத்தகங்கள் தான் ஆனாலும் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க தனியான பயிற்சி தேவைப்பட்டது

அதை பல ஆயிரம் கேள்விகளை எதிர்கொண்டு கற்றுத்தேர வேண்டும்.

இத்தகைய கோச்சிங் தரும் பள்ளிகள் நாமக்கல் / ஈரோடு

மாவட்டங்களில் இருந்தன.

தியரி மார்க் அத்துடன் எண்ட்ரண்ஸ் மார்க் சேர்த்து மொத்தம் 300க்கு கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும்

நான் இயற்பியலில் 200/200
வேதியியலில் 199/200
உயிரியிலில் 198/200

என்றும்

நுழைவுத்தேர்வில்
உயிரியியலில் 50/50
இயற்பியல்+வேதியியலில் 46.25/50

மொத்த கட்ஆஃப் 295.5/300
வாங்கி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன்

நிற்க..

நான் சேர்ந்த ஆண்டில் இருந்து எண்ட்ரண்ஸ் எக்சாமை ஒழிக்க வேண்டும்.
இது சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது என்ற கருத்து எழத்தொடங்கியது

நானும் இப்போது பலரும் நினைக்கும் படி

எண்ட்ரண்ஸ் எக்சாம் தான் தரமானது

மெடிக்கல் கோர்ஸ் படிக்க
மனப்பாடம் செய்து எழுதுவது போதுமா?
கூடவே ரொம்ப சிந்திக்க வேண்டும்

எனவே கட்டாயம் நுழைவுத்தேர்வு தேவை என்ற எண்ணம் எனக்கும் இருந்தது.

(பிறகு மருத்துவக்கல்லூரியில் இணைந்து வெளி வந்து முதுகலைப்படிப்பு படிக்கும் இப்போது வரை

மருத்துவப்படிப்பு என்பது உள்ளதை உள்ளபடி அப்படியே படிப்பது இதற்கு மனப்பாடம் செய்யும் சக்தி தான் தேவை என்றும்.. இதில் தனியாக சிந்தித்து கதை எழுத முடியாது என்று தெரிந்து கொண்டேன் )

அப்போது சமூக நீதி குறித்த போதிய அறிவு எனக்கு இல்லை.

2007 ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வை தமிழக

அரசு தடை செய்தது.

நான் எனது கல்லூரிப்படிப்பின் இரண்டாம் ஆண்டின் இறுதியில் இருந்தேன்

2007 முதல் 2011 வரை படிக்க சேர்ந்த எனது சகோதர சகோதரிகளைக் கண்டேன்.

திடீரென ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது.

அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மருத்துவ சீட் பெற்று பனிரெண்டாம் வகுப்பு

முடித்த மாத்திரத்தில் நுழைந்தார்கள்

பொருளாதாரத்தில் மிக நலிந்த நிலையில் இருந்து பல சகோதரர்கள் சகோதரிகள் மருத்துவ சீட் பெற்றனர்

மீனவர் மகள்
கயிறு நெய்பவர் மகன்
ஊர் பேர் கூட தெரியாத கிராமத்தில் இருந்தெல்லாம் மருத்துவ சீட் பெற வந்தார்கள் தம்பி தங்கைகள்

முதல் நாள் மருத்துவ

கல்லூரியில் சேர வந்த பல பேருடைய தந்தைமார்கள்
கசங்கிய வேட்டியும்
கலங்கிய கண்களுமாய்
கையில் மஞ்சள் பையும்
ஆசைகள் தேங்கிய மனப்பையும்
கொண்டு நிற்பதைக்கண்டு

ஆடிப்போனேன்

இத்தனை வருடங்கள் இவர்களெல்லாம் எங்கய்யா இருந்தாங்க...

ஒரு ஏழையின் பசி மற்றொரு ஏழை தான் உணர்வான்

ஒரு ஒடுக்கப்பட்டவனின் வலியை மற்றொரு ஒடுக்கப்பட்டவனே உணர்வான்

அன்று நான் உணர்ந்தேன்

தரம் என்பது மாயை
நிச்சயம் அது ஒரு மாயை

சிலரை சில இடங்களுக்கு வரவிடக்கூடாது என்பதற்காக நாமே இட்ட மாய பிம்பம்

நான் அருதியிட்டுக்கூறுவேன்

2007 முதல் 2017 வரை
ஒரு தசாப்த காலம்
மருத்துவராக

ஆன சகோதர சகோதரிகள் அனைவரும்

நிச்சயம் என்னை விடவும்
தரமான மருத்துவக்கல்வியைக் கற்றவர்கள்

என்னை விடவும் சிறப்பான கடமையாளர்கள்

என்னை விடவும் அதிகம் உழைப்பவர்கள்

என்னை விடவும் அறிவாளிகள்

என்னை விடவும் சமூக நீதியை நாடுபவர்கள்

அவர்கள் தான் தமிழகத்தின்

கிராமங்கள் தோறும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போது நிறைந்துள்ளனர்

அவர்கள் தான் தமிழகத்தின் மருத்துவக்கல்லூரிகளில் இப்போது முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர்களாகவும் துணை பேராசிரியர்களாகவும் கொரோனா முன்கள வீரர்களாக நின்று யுத்தம் புரிகின்றனர்

அரசு மருத்துவமனைகளில்

உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் கரங்கள் அவர்களது
உங்களுக்கு பரிந்து பேசி வேண்டியதை செய்யும் மனங்கள் அவர்களது

என்னைப்பொறுத்த வரையில்
2007 முதல் 2017 ஆகிய இந்த பத்து ஆண்டுகள் தமிழக மருத்துவ வரலாற்றில் பொற்காலமென்பேன்

எனது நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும்..
இப்போது

புரிந்திருக்கும் நான் ஏன் நீட்டை எதிர்க்கிறேன் என்று...

சில உணர்வுகள் உள்ளிருந்து எழுபவை
அவற்றுக்கு வடிகாலோ அணையோ இட இயலாது.

நீட் ஆதரவாளர்கள் கடந்து செல்லுங்கள்

🙏

- Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling