#தினசரி_பூஜை -19
சரி, ஸ்வாமி எல்லாரும் வந்தாச்சு. உட்கார்த்தி வைக்க ஆசனம் கொடுப்போம். அக்ஷதைதான் திருப்பியும்.ஆவாஹணம் செய்தது போலவே ஸ்வாமி பெயர் சொல்லி ஆசனம் சமர்ப்பயாமி என்று அக்ஷதை தூவவும்.
“சத்தியமா தேவையான நேரம் இல்லை ஸ்வாமி!” ன்னு துண்டை போட்டு தாண்ட ரெடியா இருக்கிறவங்க
1
தனித்தனியாக ஸ்வாமி பேரை சொல்லாமல் ஆவாஹிதாப்யோ தேவதாப்யோ நமஹ, ஆசனம் சமர்ப்பயாமின்னு சொல்லிக்கொண்டு போகலாம்.
இதே போல பாதயோஹோ பாத்யம் சமர்ப்பயாமி ன்னு ஒரு உத்தரணி நீரை ஸ்வாமி முன்னால் கீழே வைத்திருக்கும் தாம்பாளம் /கிண்ணம்/ டபரா எதிலாவது விடலாம். இது எதுக்குன்னா அப்புறமா
2
தங்கமணி திட்டக்கூடாதில்லையா, அதுக்குத்தான். அத்தோட அப்புறம் வெளியே கொண்டு சேர்கிறது சுலபம்.
பிறகு ஹஸ்தயோஹோ அர்க்யம் சமர்ப்பயாமி –அதே போல.
ஆசமனீயம் சமர்ப்பயாமி- மூன்று முறை நீர் விடவும்.
ஸ்நபயாமி என்று சொல்லி அபிஷேகத்தை ஆரம்பிக்கலாம். அபிஷேகம் செய்யம் அளவு நேரமில்லாதவர்கள்
3/5
ஒவ்வொரு உத்தரணி நீரை ஒவ்வொரு மூர்த்தியின் மீதும் விட்டால் போதுமானது.
எந்த ஸ்வாமிக்கும் அபிஷேகம் செய்ய புருஷ சூக்தம் சொல்லலாம். சிவனுக்கு செய்ய ருத்திரம் சமகம் சொல்லலாம். இதே போல அந்தந்த தேவதைக்கான வேத மந்திரம் என்று தெரிந்ததை சொல்லலாம். அப்படி மந்திரங்கள் தெரியாவிட்டால்4/5
பாதகமில்லை. அந்தந்த ஸ்வாமி பெயரையே உச்சரித்து அபிஷேகம் செய்யலாம்.
எதை எல்லாம் அபிஷேகம் செய்யலாம்?
5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
