Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) Profile picture
(மோடியின் குடும்பம்) தேசமே தெய்வம், ஜெய்ஹிந்த், பாரத தாய், மக்கள், பாரம்பரியம், பண்பாடு. இந்தியா என் உயிர். நாட்டு நலனே உயிர் மூச்சு. 🚩🚩🚩🚩🚩

Sep 16, 2020, 7 tweets

நீட் சிக்கல்களுக்கு திமுக மட்டும் அல்ல ஜெயலலிதாவும் காரணம்!

திமுக ஆட்சியில் தான் நீட் சட்ட முன்வடிவு பெற்றது!மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது!

அப்போது திமுக அதற்கு ஆதரவா தான் இருந்தது.ஆனால் நீட் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தமிழகத்தில் ஜெ ஆட்சிக்கு வந்தார்,மத்தியில் காங்கிரஸ் ஆட்சி!நீட் பாடத்திட்டம் தமிழக பாடத்திட்டம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குன்னும், அதனால் தமிழக பாடத்திட்டத்தை நீட் தேர்விற்கு ஏற்றார்போல் மாற்ற ஒரு வருட நீட் விலக்கு வேணும்னு கேட்டாங்க.

காங்கிரஸ் அரசும் கொடுத்தது.

ஆனால் பாடத்திட்டத்தை மாற்றாமல் தொடர்ந்து 3வருடங்கள் ஏதாவது சாக்கு சொல்லி,சொல்லி நீட் விலக்கு பெற்றது.

அப்புறம் தான் பிரச்சனை நீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கு வழங்க முடியாது என உத்தரவிட்டது. நீட்டிற்கு ஆதரவாக வாதாடியவர்

காங்கிரஸ் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம்!உண்மையிலேயே அவரை பாராட்டுகின்றோம்!

நீட் தமிழகத்திற்கு 2017ல் வந்தது!அப்புறம் தான் 2019ல் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நீட்டிற்கு ஏற்றது மாதிரி பாடத்திட்டத்தை அமைத்தார்.தற்போது நம் மாணவர்கள் நீட்டை எதிர்கொள்ளும் பாடத்திட்டத்தை

தான் படிக்கின்றனர்!

திமுக இப்போது பிண அரசியல் செய்து மக்களிடம் பொய்யை பரப்புவது உண்மை தான் ஆனால்!

நீட் இவ்வளவு முக்கிய பிரச்சனைக்கு காரணம் திமுக மட்டும் இல்லை.ஜெயலலிதா தான்.

நான் 2005ல் தடை செய்த மருத்துவ பொது நுழைவு தேர்வை நீட் என்ற மாற்று பெயரில் எப்படி கொண்டு வரலாம் என்ற

அவரின் வறட்டு எண்ணமே கோபத்திற்கு காரணம்.

2013 விலக்கு கேட்ட ஒரு வருடத்தில் பாட திட்டத்தை மாற்றி அடுத்த வருடமே மாணவர்களை நீட்டிற்கு தயார்படுத்தியிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.

தமிழக மாணவர்களும் அதை ஈஸியா கடந்து சென்றிருப்பர்!திமுக வும் இப்படி பிண அரசியல் செய்து மக்களை முட்டாள் ஆக்கியிருக்காது!

டாட்....🚶🚶🚶

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling