anbeSelva Tamilnadu Profile picture
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

Sep 17, 2020, 7 tweets

1915-16, 17, 18,19-வரை ஈரோடு வியாபார சங்கத் தலைவன்.

தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை உறுப்பினர்.

5-ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவர்.

ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி

பழைய மாணவர் சங்க செக்ரட்டரி

ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி பிறகு தலைவர்
1/N

1914-ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி

10-ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட்

ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட்

பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென்.

ஜில்லா போர்டு மெம்பர்

வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி

பிளேக் கமிட்டி செக்ரட்டரி
2/N

10 ஆண்டு கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி பிறகு 1929-வரை வைஸ்பிரசிடெண்ட், பிரசிடெண்ட்

1918-ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்

1918-ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி
3/N

கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி;

காங்கிரசிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி தலைவர்

காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளர் பின் 5-வருடம் தலைவர்

1940, 42-இல் 2 முறை முதல்வர் வாய்ப்பு

போதும், இவ்வளவு எடுத்துக் காட்டுவகற்கே நான் மிகமிக வெட்கப்படுகிறேன். இருந்தாலும்
4/N

இருந்தாலும், நான் ஏன் "வெட்கம்" என்பதை விட்டு விட்டு இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்த கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவேயாகும்.எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிது கூட குறையாத
5/N

அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். ஒன்றை ஒப்புக் கொள்கிறேன்.

அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும்; பல தவறுகள் செய்திருக்கக் கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும்; பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன்.
6/N

இவை எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ,பெரிய ஆள் ஆகவோ,இழிவை மறைத்து கொள்ளவோ கடுகளவு கூட இருக்காது.
---பெரியார்

இவ்வளவு வசதிகளை துறந்து மக்களுக்காக நின்ற ஒரு மனிதனை பார்க்க முடியாது
N/N

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling