anbeSelva Tamilnadu Profile picture
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
Mar 4 7 tweets 1 min read
கால்டுவெல் கிறிஸ்தவர் என்றால் வில்லியம் ஜோன்சும் கிறிஸ்தவர்தான்,
கால்டுவெல் ஆங்கிலேயர் என்றால் வில்லியம் ஜொன்ஸும் ஆங்கிலேயர்தான் ஆனால் ஆளுநரிலிருந்து எச். ராஜா வரைக்கும் எல்லா சங்கிகளும் கால்டுவெல்லை பார்த்து மட்டும் மண்ணை வாரி தூற்றுவது ஏன்?

ஏனென்றால்
1/N
ஆரிய பார்ப்பனர்களின் கனவை சல்லி சல்லியாக உடைத்தவர் கால்டுவெல். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன என்று எழுதுகிறார் கிருஸ்தவரான வில்லியம் ஜோன்ஸ், அன்றைக்கு ஆங்கிலேயரோடு அதிகாரத்தை பகிர்ந்து கொண்டிருந்த
2/N
May 31, 2021 8 tweets 1 min read
பி.டி.ஆரை கண்டு ஏன் பதறுகிறார்கள்?

தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார். ‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது.
1/N
அரசியலை பொருளாதார வாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும் புது ஒழுக்காறை அவரது விமர்சனம் கொண்டிருக்கிறது. அது அரசியல் விமர்சன மரபில் ஒரு புதுச் சிந்தனைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது.

வானதிக்கு பயன்படுத்திய congenital liar என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
2/N
May 29, 2021 7 tweets 1 min read
திமுகவிற்கு இந்த 5 ஆண்டுகால ஆட்சி என்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆட்சிக் கலைப்பு எனும் மிரட்டல் தொடர்ச்சியாக இருக்கவே போகிறது.

பத்மா சேஷாத்ரி எனும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி நிர்வாகத்தை விசாரணைக்கு உட்படுத்துவதை, தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு
1/N
பார்ப்பனர்களுக்கு எதிரான தாக்குதல் என்றும் அதற்காக ஆட்சியை கலைப்பேன் என்றும் மிரட்டி ஆளுனருக்கு கடிதம் எழுதுகிறான் சு.சாமி. அதுதான் இந்தியாவில் பார்ப்பனியம் கைக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட அதிகாரம்

எல்லாவற்றையும் மக்களிடம் பேசுவது ஒன்றே திமுக இப்போது முதன்மையாக செய்ய வேண்டியது
2/N
May 20, 2021 8 tweets 2 min read
டேய் ஜக்கி @SadhguruJV இங்க வா..
மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார்.

1/N
மொத்தம் 473 பேரில் 471 பேர் ஹிந்துக்கள். கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பட்டியல்

பாரதிய வித்யா பவன். காந்தி கொலைக்குப் பின் RSS மீதான தடையை அகற்ற முக்கிய பங்காற்றிய கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்

2/N
Mar 29, 2021 4 tweets 1 min read
எடப்பாடி ஏன் ஆபத்தானவர் என்றால் அவரிடம் அடிப்படையான மான அபிமானங்கள் எதுவுமே கிடையாது, காரியம் ஆகிறது என்றால் யார் காலிலும் புழுபோல விழுந்து கிடப்பார் பின்பு அவரையே முதுகில் குத்துவார், காரியத்திற்காக தன்னை ஆண்மையற்றவர் என்று சொல்பவரிடமும் பல்லை இளிப்பார், காரியத்திற்காக
1/N
13 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டாலும் டிவி பார்த்து தெரிந்து கொண்டதாக அசால்டா இருப்பார், காரியத்திற்காக "பழனி' என்று முதல் பக்கத்தில் தினமலர் அவமானப்படுத்தினாலும் அமைதியாக இருப்பார், அதே காரியத்திற்காக வேறு அர்த்தம் என தெரிந்தாலும் தன் அம்மாவைகூட அவமானப்படுத்தவும் செய்வார்..

2/N
Jan 14, 2021 4 tweets 1 min read
பொங்கல் கொண்டாட்டத்திற்கு நான்கு சிறப்புகள்.

1. அவரை இவர் கொன்றார், இவரை அவர் கொன்றார், அந்த கடவுள் இறங்கி வந்தார், இந்த கடவுள் ஏறிப் போனார் என அறிவுக்கு ஒவ்வாத டுபாக்கூர் கதைகள் புனையப்படாத நேரடியான மக்களின் கொண்டாட்டம்.

1/N
2. அறிவியலின்படி சூரிய நாட்காட்டியைப் பின்பற்றி கொண்டாடப்படும் வெகு சில பண்டிகைகளில் ஒன்று. சந்திரன், திதி போன்றவற்றைப் பொறுத்து பொங்கல் மாறாது.

3. பிறப்பு, இறப்பு போன்ற எந்த தீட்டுகளாழும் பாதிக்கப்படாத ஒரே திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி.

2/N
Jan 11, 2021 4 tweets 1 min read
பொங்கலுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம், பொங்கல் பரிசு பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடாது -அர்ஜுன் சம்பத்

தமிழர் திருநாளாம் பொங்கல் மத அடையாளமாக மாற்றபட்ட பிறகு, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளாத முஸ்லிம்கள் பொங்கலை பாச்சோறு என்று பெயர் மாற்றிக் கொண்டாடுகின்றனர்.
1/N Image டெல்டா மாவட்ட முஸ்லிம்கள் தங்கள் உழவு நிலங்களில் அறுவடை செய்த புது அரிசியை கொண்டு பாச்சோறு ஆக்கி விருந்து வைப்பது வழக்கம்.

அதை சில முஸ்லிம்கள் அந்த நிகழ்வுக்கு ஆன்மீக தோற்றம் கொடுத்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் நிலங்களில் விளைந்த அரிசியை கொண்டு பாச்சோறு செய்து
2/N
Dec 15, 2020 5 tweets 3 min read
#நிரு: அரிசி ஒகே சார், டிவி மிக்சி, கிரைண்டர் எல்லாம்?

#ஜெ: நீங்க என்னைக்காவது அம்மில சட்னி அரைச்சிருக்கீங்களா?

#நிரு: இல்லை, மிக்சி தான்.

#ஜெ: பகல் பூரா வயல்ல வேலை செஞ்சுட்டு, அரிசியை ஆட்டுக்கல்லில் ஆட்டி, சட்னியை அம்மில அரைக்கமுடியுமா? இல்ல தெரியாமதான் கேட்கிறேன்
1/N
இந்த மாதிரி தேவை இருக்கிற பெண்கள் யாராவது உங்ககிட்ட வந்து வேண்டான்னு சொன்னாங்களா?
******
#நிருபர்: அரிசியை வாங்கி கோழிக்கு போடறாங்களே?

#ஜெயரஞ்சன்: கொடுக்கிற அரிசில சாப்பாடு மட்டும் தான் செஞ்சி சாப்பிடனும், இட்லி, தோசை, பொங்கல் வைத்து சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா?
2/N
Nov 10, 2020 5 tweets 1 min read
காங்கிரசால் மண்ணைக்கவ்வ போகிறது லாலு கட்சி, திமுக உடனடியாக சுதாரிக்க வேண்டிய இடம் இது.

பிஜேபி-யை விட 3 சதவீதம் அதிக ஓட்டுக்கள் வாங்கியும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழக்கிறது RJD.

இத்தனைக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் LJP யை தனியாக நிறுத்தி பாஜக ஏற்படுத்தி இருந்த தடையை தாண்டி
1/N
இந்த அளவு வெற்றியை பெற்றிருக்கிறது RJD ஆனால் காங்கிரஸ் 70 சீட்டுக்களை முழுங்கி 18 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருக்கிறது.

இடதுசாரிகள் அபார வெற்றியை பெற்று இருக்கிற்றார்கள் 29 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
2/N
Oct 6, 2020 15 tweets 2 min read
அன்புள்ள ராகுல் காந்திக்கு
வணக்கம்..

கடந்த வெள்ளிகிழமை நீங்களும் உங்கள் தங்கையும் பாசிசத்தின் கரங்களில் சிக்கியது கண்டு வருந்துகிறோம் , நீதிக்கான உங்கள் சண்டையில் துணை நிற்கிறோம்.

அதற்க்கு முன்

70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம்
சமத்துவம்
1/N
சகோதரத்துவம் என்பதற்கு முற்றிலும் எதிரான ஆட்சியை
வழங்கியவர்களாகவே உங்கள் காங்கிரஸ் அரசும் இருந்து வந்துள்ளது என்பதை முதலில் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் ..

அக்டோபர் 1 உங்கள் சட்டையை பிடித்து இழுத்த அன்றே இந்தியாவை மிக நீண்ட
ஆண்டுகள் ஆண்ட உங்கள் கட்சியில் இருந்து
2/N
Sep 17, 2020 7 tweets 1 min read
1915-16, 17, 18,19-வரை ஈரோடு வியாபார சங்கத் தலைவன்.

தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை உறுப்பினர்.

5-ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவர்.

ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி

பழைய மாணவர் சங்க செக்ரட்டரி

ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி பிறகு தலைவர்
1/N
1914-ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி

10-ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட்

ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட்

பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென்.

ஜில்லா போர்டு மெம்பர்

வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி

பிளேக் கமிட்டி செக்ரட்டரி
2/N
Sep 8, 2020 9 tweets 2 min read
கடந்த தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா?

1/N
கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?

கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா?
2/N
Sep 6, 2020 7 tweets 1 min read
சில வருடங்களுக்கு முன்னாள் நடிகர் சத்யராஜின் மகள் ஒரு புகாரை எழுப்பினார், வெளிநாட்டு மருந்து கம்பெனிகளின் தரமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதற்கு லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள் மறுத்த பிறகு மிரட்டுகிறார்கள் என்றார்.

அனிதா மரணத்தின் போது நடந்த பாஜக அலுவலக முற்றுகை கைதின் போது
1/N
வந்திருந்த தோழர் ஒரு விஷயம் சொன்னார்.

தமிழகம் தெற்காசியாவின் மருத்துவ சுற்றுலா, இந்தியாவிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பு என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம்.

இந்த நீட்டின் மூலமாக அவர்கள் UnEthical மருத்துவர்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் வெறும் 20,000 ரூபாயில்
2/N
Sep 2, 2020 6 tweets 1 min read
ஏன் தமிழகம் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்?

ஒரு சில தரவுகள்.

மருத்துவ கல்லூரிகளில் தமிழ் வழி ( தமிழ் மீடியம் ) பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை.

நீட் தேர்வுக்கு முன் :
2015 - 2016 - 516
2016 - 2017 - 537

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 52
2018 - 2019 - 106

1/N
தனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் இருந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை.

நீட் தேர்வுக்கு முன் :
2014 - 2015 - 798
2015 - 2016 - 657
2016 - 2017 - 1173

நீட் தேர்வுக்கு பின் :
2017 - 2018 - 3

2/N
Aug 19, 2020 8 tweets 1 min read
இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்கள் ஆனால்
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி, மைத்திலி

உபி-யும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலம்தான் ஆனால்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி
1/N
வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி, மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி.

அடுத்ததாக உத்தராகண்ட்டின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி
2/N
Aug 2, 2020 15 tweets 10 min read
50 வருடம் திராவிட ஆட்சியால் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் பரிதாப கதை

#உயர்கல்வி :
பள்ளி முடிந்து உயர் கல்வி சேர்பவர்கள் இந்துயாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்

#தமிழ்நாடு - 49 %

பிஜேபி ஆளும் மாநிலங்கள்

குஜராத்–17.6%
மபி – 17.4%
உபி-16.8%
இந்திய சராசரி : 20.4%

1/12 #கல்வி_நிலையங்களின்_தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அந்த பட்டியலின் படி,

#முதல்_100_சிறந்த_கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில். பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் குஜராத்தில் வெறும் மூன்று
2/12
Apr 29, 2020 6 tweets 1 min read
Waiver க்கும் write-off க்கும் வித்தியாசம் தெரியாமல் புரளி பேசுகிறார்கள் என்று திடீர் பொருளாதார சங்கி அறிஞர்கள் பாடம் நடத்த தொடங்கி விட்டார்கள்

Waiver க்கும் Write-off க்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. Write off என்பது நிறுவனப் படுத்தப்பட்ட கொள்ளை. அதாவது
1/6
ஒரு பெருநிறுவனம் வாங்கிய கடன் திரும்ப செலுத்தாமல் வாராக்கடனாக ஆகும் பட்சத்தில் அது NCLTஎன்ற தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்

NCLTவாராக்கடன்களை வசூலிபதற்கான அமைப்பு என்று கூறிக்கொண்டாலும். உண்மையில் கார்ப்பரெட் நிறுவனம் வாராக்கடனில் சிக்கும்பொழுது அதை காப்பதற்கான அமைப்புதான்
2/6
Mar 4, 2020 12 tweets 2 min read
இடஒதுக்கீடு என்ற வார்த்தையே தவறானது. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் எங்கும் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.
அவர் (REPRESENTATION) என்ற வார்த்தையை மட்டும்தான் பயன்படுத்துகிறார்

இடஒதுக்கீடு-பிரதிநிதித்துவ என்ற இரு வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாடு
1/12 என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்று.

இடஒதுக்கீடு என்பது ஒருவருக்காக ஒரு இடத்தை சலுகையின் அடிப்படையில் ஒதுக்குவது. இது வரலாற்றில் எங்கும் நிகழவில்லை.

இடஒதுக்கீடு என்றால் இலவசமாகக் கொடுப்பது என்பது பொருள். பிரதிநிதித்துவம் என்பது பிறப்புரிமை ஆகும்.
2/12
Feb 29, 2020 8 tweets 2 min read
இது கோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார்னு பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம ஹரீஸ் பட்டேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார்னு பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் சோஹன்லால்.
1/8 இது ஒன்னும் எதேச்சியா நடந்ததில்லை ஒரு 20வருசம் பின்னாடி வாங்க

1997 கோவை கலவரம் பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி சிறு கடைகள் வரை அனைத்து இஸ்லாமியர் கடைகளும் #சங்கிகளால் வேட்டையாடபட்டுச்சு

யாரோ ஓரு டிராபிக் போலீஸ் கொல்லப்பட்டதற்காக யென் எல்லா இஸ்லாமியர்களும் இலக்காக்கபட்டாங்க?
2/8
Dec 17, 2019 8 tweets 6 min read
முஸ்லிம் நாடுகள் எல்லாம் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன இந்தியா மட்டும் மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? என்ற வாதம் பல காலமாக பாஜக சங்கிகளால் வைக்கப்படுகிறது

ஆனால் உண்மையில் எத்தனை முஸ்லிம் நாடுகள் மதம்சார்பற்ற நாடுகளாக இருக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது
1/8
#துருக்கி 96%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது en.m.wikipedia.org/wiki/Religion_…

#இந்தோனேஷியா 90% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 10% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

2/8
Dec 11, 2019 9 tweets 2 min read
அதிமுக இஸ்லாமிய மக்களின் கழுத்தை அறுத்து விட்டது!
பல கோடி முஸ்லீம் மக்களை நாடற்றவர்களாக்கும் குடியுரிமை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் ஆன போது அதன் அறிமுக நிலையிலேயே திமுக எம்.பி டி.ஆர்.பாலு அதை கடுமையாக எதிர்த்தார். அத்தோடு இது போன்ற மாசோதாக்களை வாக்கெடுக்கெடுப்பு நடத்த அவைக்குள் கொண்டு வருவதே ஜனநாயக விரோதம் என்றார். தொடர்ந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தார்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா வாக்கெடுப்பிற்கு வந்த போது வெளிநடப்பு செய்த திமுக அவைக்குள் வந்து மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது. ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள்