திவாண்ணா Profile picture

Sep 17, 2020, 8 tweets

#தினசரி_பூஜை -20
அபிஷேகத்துக்கு சுலபமாக சந்தன நீர், தேன், பால், சுத்த நீர் இவற்றை பயன்படுத்தலாம்.

சந்தன நீர் கொஞ்சம் சந்தனத்தை கரைத்து செய்வதாக இருக்க வேண்டும். அல்லது கடைசியில் நீர்க்க அரைத்து சேமித்துக்கொள்ளலாம். சந்தனம் அரைத்து முடித்த பின் அந்த சந்தன கட்டையையும்
1/8

கல்லையும் கழுவி சேகரிக்கக்கூடாது. அது அஶ்வத்தாமாவுக்கு உரியது.
தேன் ஒரு உத்தரணியில் (ஈரமில்லாமல் இருப்பதை பார்த்துக்கொள்ளுங்கள்) எடுத்தால் மெல்லிய கம்பி போல ஒழுக விட்டு நேரத்தை நீட்டிக்கலாம். விஸ்தாரமாக ருத்ரம், சமகம் என்று சொல்லி அபிஷேகம் செய்வோருக்கு இது சௌகரியம்.
2/8

பால் நிறைய இருந்தாலும் சின்ன வெள்ளி கிண்ணத்தில் எடுத்து செய்வதும் நேரத்தை நீட்டிக்கும். பால் அபிஷேகத்துக்கு தாமிர தட்டு உதவாது என்பது நினைவிருக்கட்டும்.
அதே போல விபூதி சுட்டு விரலையும் சுண்டு விரலையும் நீக்கி மற்ற மூன்றால் விபூதியை வைத்துக்கொண்டு மெதுவாக 'அரைப்பதன்' மூலம்
3/8

சிறுக சிறுக அபிஷேகம் செய்யலாம்.

இதற்கு முன் எல்லா சிலாக்களையும் துடைத்துவிட்டால் இந்த விபூதியை அபிஷேகம் முடிந்த பின் சேகரித்து வைத்துக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள (நீர் சேர்க்காமல் மாலை நேரத்துக்கு இட்டுக்கொள்வது போல) உபயோகிக்கலாம். எல்லாவற்றுக்கும் கடைசியில் நீரால்
4/8

அபிஷேகம் செய்ய சுத்தம் செய்வது எளிதாகும்.

நான் பூஜை ஆரம்பித்தபோது முதலில் அபிஷேகம் செய்த போது இரண்டு தாம்பாளம் நிறைய அபிஷேக 'நீர்' இருந்தது! இதை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக செயலை திருத்தி இப்போது பால் கிண்ணத்திலேயே
5/8

அத்தனையும் சேமித்து கடைசியில் குடித்து விடுகிறேன்!

புருஷ சூக்தம் சொல்லியும் அபிஷேகம் செய்யலாம். வேதம் தெரியாதவர்கள்/ அதிகாரமில்லாதவர்கள் இறைவன் பெயரை சொல்லியே செய்யலாம். சந்தேகமில்லாமல் சரியே! பக்தி மார்கத்தில் மனசு ஊன்றுவதே முக்கியம். இறைவன் நம் சிரத்தையையே பார்க்கிறான்.
6/8

வேறு எதையுமில்லை.

ஐந்து சிலாக்களையும் அபிஷேகம் செய்ய வேண்டும். அதில் நெடு நேரம் நமக்கு இஷ்டமான இறை உருவத்துக்கு செய்யலாம். மற்றதை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சொன்னேன்.
7/8

அபிஷேகம் முடிந்து சுத்தமான மடித்துணியால் எல்லாவற்றையும் துடைத்து பூஜை செய்ய இருக்கும் தட்டில் வைக்க வேண்டும். வைப்பது முன் வைத்த அதே முறையில்தான்.
8/8

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling