அண்ணன் இவ்வளவு சொன்னாரேன்னு அந்த Al Basham எழுதின புத்தகத்தை இன்னொரு முறை புரட்டினேன். History & Doctrines of Ajivakas என்ற புத்தகம் அது. வடநாட்டு மதமான ஆசீவகத்தை விவரித்துக்கொண்டு வரும் பாஷம் ஒரு chapter ஐ தென்னிந்தியாவுக்கு ஒதுக்கியிருக்கிறார். அதில் அவர் என்ன சொல்றார்னா..
ஆசீவகத்துக்கான இலக்கிய ஆதாரமா முதலில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் சொல்றார். சமண, பௌத்த மதங்களோடு இங்கே வந்த ஆசீவகத்தைப் பத்தி சங்கம் மருவிய கால இலக்கியங்களான இவற்றில் சொல்லப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை. அப்புறம் நீலகேசின்ற நூலைப் பத்திப் பேசறார். அதில் என்ன இருக்கு
நீலகேசின்றது சமண நூல். பௌத்த மத நூலான மணிமேகலைக்கு எதிராக எழுதப்பட்ட நூல்னு சொல்றார் பாஷம். தவிர ஆசீவகத்துக்கு எதிரி பௌத்தம்தான்னு தெளிவாச்சொல்றார்.
புத்தமதமே முக்கிய எதிரின்னு சொல்லிட்டு மற்ற மதங்களைப் பத்தி ஏதும் சந்தேகம் இருக்கக்கூடாதுன்னு சங்கர அத்வைதமும் ராமானுஜ விசிஷ்டாத்வைதமும் சைவ பக்தியிக்கமும் பரவலாவதற்கு முன்பே நீலகேசியின் படி ஆசீவகத்தின் தாக்கம் குறைந்துவிட்டதுன்னு சொல்றார்
அடுத்தது அவர் 14ம் நூற்றாண்டு நூலான சிவஞானசித்தியாருக்கு வருகிறார். அங்கே ஆசீவகம் குறிப்பிடப்பட்டிருக்குன்னு சொல்ற அவர், அது திகம்பர சமணர்களைக் குறிப்பதாக இருக்கலாம். அதுவே உண்மை, ஏனெனில் சித்தியார் அவர்கள் தலைமுடியைப் பிடுங்கிக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என்று குறிக்கிறது
ஆக, பாஷத்தின் நூலின் படி சைவமும் ஆசீவகமும் நேருக்கு நேர் மோதியதாக ஆதாரம் எங்கேயும் இல்லை. இதில் கழுவேற்றினார்கள் என்றெல்லாம் கதை. ஏதோ ஒரு புத்தகத்தின் பெயரை அடித்து விட்டால் பயந்து ஓடிவிடுவோம்னு நினைக்கும் ஈவெரா/ தீராவிடப் புரட்டுதான் இது.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
