#தினசரி_பூஜை -22
அபிஷேகம் முடிந்த பின் ஆசமனம். ஆவாஹிதாப்யோ தேவாதாப்யோ நமஹ ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி என்று மும்முறை நீர் முன் இருக்கும் கிண்ணத்தில் விட வேண்டும். வஸ்த்ரம், உபவீதம் அணிவிக்க வேண்டும். சிரத்தையுள்ள சிலர் தனியாக பட்டில் தைத்து வைத்திருப்பர். பட்டு
1/9
என்பதால் ஏற்கெனெவே அணிவித்தது என்ற தோஷம் வராது. பட்டாக இல்லாத உடையை நனைத்து காய வைத்து மடியாக எடுத்து வைத்தால்தால் சரிப்படும். இதனால்தான் இந்த விஷயமே வேண்டாம் என்று அக்ஷதையை பயன்படுத்துகிறார்கள்.
ஆவாஹிதாப்யோ தேவாதாப்யோ நமஹ வஸ்தர உத்தரீய, உபவீதார்த்தே அக்ஷதான் சமர்பயாமி.
2/9
குடும்பஸ்தர்கள் ஒரு உடை மட்டும் உடுக்கக்கூடாது. அதாவது ஒரு வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு இருப்பது போல. மேலே ஒரு உடையும் இருக்க வேண்டும்; துண்டு, அங்கவஸ்திரம் போல. அதே போல இறைவனுக்கு உடை அணிவிக்கும்போதும் இரண்டு வஸ்திரங்கள் இருக்க வேண்டும். தினசரி பூஜையில் இப்படி வருவதில்லை.
3/9
பிள்ளையார் சதுர்த்தி, ஸரஸ்வதி பூஜை என்று செய்யும் போது இந்த நிலை வரும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன். நினைவிருக்க வேன்டுமே!
பரமாச்சாரியார் வாத்தியார் சொல்லி வைத்தே பூஜை செய்வார். வாத்தியாரை விட இவருக்கு அதிகம் தெரியும் என்றாலும் அவர் சொல்லச்சொல்லதான் இவர் செய்வார்.
4/9
இது கண் பார்வை சரியாக இல்லாத வாத்யார் தட்டுத்தடுமாறி சொல்ல பொறுமையாக காத்திருந்து இவர் லகுவாக அதை திருப்பிச்சொல்லும் போதுதான் வெளியே தெரியும். ஒரு நாள் மௌனம். வாத்தியார் சொல்லச்சொல்ல பூஜை போய்கொண்டு இருந்தது. வஸ்த்ர யுக்மம் சமர்பயாமி என்ற போது பூஜை நின்று விட்டது. யாருக்கும்
5/9
ஒன்றும் புரியவில்லை. அப்புறம் சிலர் ஊன்றிப்பார்த்து "வஸ்த்ர யுக்மம் என்றால் இரண்டு வஸ்த்ரம் இருக்க வேண்டுமே ஒன்றுதானே இருக்கிறது!" என்று சொல்ல இரண்டாம் துணி வந்த உடன் இரண்டு துணியையும் சமர்பித்து பூஜையை தொடர்ந்தார்.
ஆபரணங்களையும் சிலர் விசேஷமாக செய்து வைத்து அணிவிப்பதுண்டு.
6/9
குறிப்பாக சாக்தர்கள்."ஆபராணி சமர்பயாமி"
அடுத்து "திவ்ய பரிமள கந்தாந்தாரயாமி" என்று சொல்லி சந்தனமிட வேண்டும். வேல் பூஜையில் வைத்து இருந்தால் வேலின் நுனியை மூடும் படி சந்தனம் உருண்டையாக நுனியில் சொருக வேண்டும். இல்லாவிட்டால் தீ விபத்து நிகழும் வாய்ப்பு அதிகம்.
7/9
“கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்பயாமி”என்று சொல்லி குங்குமம் இடுகிறார்கள். சூத்திரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன், இடை செருகலாக வந்து சேர்ந்திருக்கலாம்.
8/9
இந்த சந்தனத்தை அப்புறம் வாயில் போட்டுக்கொள்ள முடியாது என்பது தவிர பிரச்சினை ஒன்றும் இல்லை. செய்வதில் தவறில்லை. சுத்த மஞ்சள் குங்குமமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
9/9
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
