நெல்லை க.சித்திக் / 𑀘𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑁆 Profile picture
தமிழ் | தொல்லியல் ஆர்வலன். 𑀢𑀫𑀺𑀵𑁆 / 𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀬𑀮𑁆 𑀆𑀭𑁆𑀯𑀮𑀷𑁆

Sep 19, 2020, 8 tweets

#தமிழ்க்கல்வெட்டெழுத்துகள்

பாடம் 3 :
#பள்ளன்கோயில் செப்பேடு

பல்லவர்கள் வடநாட்டினர் என்பதால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் தொடக்கத்தில் எழுதிவந்தனர்.
பல்லவர்களின் தோற்றமாகக் கருதப்படும் குண்டூர்ப் பகுதியில் (1/9 )

மிகப் பரவலாக அறியப்படும் ‘பட்டிப்புரோலு’ புத்த தூபக் கல்வெட்டு உள்ளது. அது பிராகிருதமொழியில் ‘அசோகபிராமி அல்லாத எழுத்தில்’ உள்ளதையும் நாம் பின்னர் காண்போம்.

சோழர்களுக்கு முன்னரே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்துகளில் பொறிக்கத் தொடங்கிவிட்டனர். (2/9)

தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து 'பள்ளன்கோயில் செப்பேடு' எனச் சொல்லப்படுகிறது.

இச் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும்

(3/9)

சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது.

செப்பேட்டின் வரிகள்:
1.நத்துவிடுதகவென்று நாட்டார்க்குத் திருமுகம் ...
2 … ந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா
3 கை நட(ந்)து கல்லுங்கள்ளியுநாட்டி நாட்டார் விடுத்த
4 அறையோலைப்படிக் கெல்லை கீழ்ப்(பா)

(4/9)

5 லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி
6 ந் மேற்கு மோமைக் கொல்லை எல்லை இன்னு
7 ம் தென்பாலெல்லை வேள்வடுகன் கேணியி
8 ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி …

(தெளிவாக உள்ள இதுவரையிலும் நாமும் படிப்போம்)

6/9

இப்போது நாம் 1,2ஆம் பாடங்களுக்கும் இம் மூன்றாம் பாடத்துக்குமான வேறுபட்ட எழுத்து வடிவங்களை மனதில்கொள்வோம்.

(இணைப்பில் தரப்பட்டுள்ளது).

மேலும், அட்டவணை தயார் செய்தவர்கள் மாற்றத்துக்குரிய எழுத்துகளையும் புதிய எழுத்துகளையும் நிரப்பி வைத்துக் கொள்வோம்.

(7/9)

இதுவரை அறிமுகமான எழுத்துகளைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்து மனதில் கொள்வோம்.

முதல் இரண்டு பாடங்களை வாசிக்காதவர்கள் , இவ்விணைப்பில் சென்று காணுங்கள் :

பாடம் 1 :


பாடம் 2 :


(8/9)

சில வரலாற்றுக் குறிப்புகள் :

பல்லவர் காலத்தில் எழுதப்பட்டவை ‘பல்லவ கிரந்தம்’ எனப்பட்டன. அவற்றுள் சில மெய்யெழுத்தில் புள்ளி வைத்து எழுதப்பட்டன.

பிற்காலச் சோழர்கள் ஏழுதியவை ‘சோழகிரந்தம்’ எனப்பட்டன.

இரண்டும் தமிழ்மொழியில் எழுதப்பெற்றவை. இரண்டுக்கும் ஒற்றுமையுண்டு.

(9/9)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling