நெல்லை க.சித்திக் / 𑀘𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑁆 Profile picture
தமிழ் | தொல்லியல் ஆர்வலன். 𑀢𑀫𑀺𑀵𑁆 / 𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀬𑀮𑁆 𑀆𑀭𑁆𑀯𑀮𑀷𑁆
முற்றிலும் பூரணன். Profile picture 1 subscribed
Oct 18, 2020 4 tweets 1 min read
பிச்ச்ச்சை எடுத்து படிக்க வைத்தோம் - சபரிமாலா.

பணம் இருந்தால்தான் வெற்றிபெற முடியும். கசபாபான உண்மை. யாருமே.. எவருமே இதை விரும்பவில்லை.

பின் ஏன் ஒருசாரார் மட்டும் நீட்டுக்கு ஆதரவு. அதுதான் சமூகச் சூழ்நிலை. உயர்ந்த சமுகத்தினரின் வெற்றி எண்ணிக்கையைப் பாருங்கள். புரியும். அந்த எண்ணிக்கையைத் தக்க வைக்கவே இவ்வளவு மாய்மாலப் பேச்சுகள். தங்களது எண்ணிக்கையில் ஒன்றுகூடக் குறைந்துவிடக் கூடாது என்ற பேராசை.

அதுபோக 'தகுதி'யான மருத்துவன் என்பதெல்லாம் வஞ்சனைப் பேச்சு. பணத்தால், பதவியால், குறுக்கு வழியால் 'தேர்வு' என்றாகியபின் தகுதி எங்கேயிருந்து வரும்?
Oct 15, 2020 4 tweets 1 min read
கொக்கென்று நினைத்தாயோ!
( கொச்சகக் கலிப்பா)

மருதநில உழவரெல்லாம்
மழைகண்டு இன்பமுற
எருவதனை நிலத்திலிட்டு
ஏரோட்டி விதைவிதைக்க
மருதநிலச் சிறுவரெலாம்
வரப்பினிலே கூடிவர
அருள்வளரும் வேளாண்மை
மகிழ்வோடு நடந்ததுவே! உளைவாழ்ந்த நண்டொன்று
குடுகுடென்று ஓடிவர
வளைபாந்தில் ஏதுமற்று
எலிஉணவு தேடிவர
அளைபோந்த அரவமதும்
ஆசையுடன் ஊர்ந்துவர
கிளைதாண்டி மயிலதுவும்
குதித்தோடி வந்ததுவே!

குழிநண்டைக் கண்டஎலி
கூர்பல்லால் கவ்விவர
வழிகண்டு கட்செவியும்
எலியதனை வவ்விவர
Oct 13, 2020 6 tweets 2 min read
#தமிழ்_வளமை 1
பயனில சொல்லாமை

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பார் தொல்காப்பியர்.

சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தரும் தெளிவு. பொருட்தெளிவு என்பது கண்டவுடன் அறிதல், ஆழ்ந்து ஆய்ந்து அறிதல் எனும் இரு வகைத்தாம். சில தமிழ்ச் சொற்கள் கண்டவுடன் பொருள் தருமாறு தோன்றினாலும் ஆயுங்கால் ஆழ்ந்த பொருள் தரும் என்பது தமிழின் சிறப்பு.

எடுத்துக்காட்டாக,
பலன், பயன் – இரண்டும் ஒத்த சொற்களாகத் தோன்றினாலும்,
மக்கள் வாழ்வில் கொள்ளும் ‘பயன்’ மற்றை உயிரிகளின் வாழ்வில் ‘பலன்’ எனப்படுகிறது.
Oct 8, 2020 17 tweets 5 min read
#தொல்கல்வெட்டெழுத்துகள்
#தஞ்சைப்பெருவுடையார்கோயில்
பாடம் 8

தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிறப்புகள் பல. கல்வெட்டுக் குறிப்புகளும் அவற்றுள் ஒன்று. கல்வெட்டுகள் மூலம் கோயிலைப் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

குறிப்பாக, நாம் காணவிருக்கும் கல்வெட்டானது மண்டபத்தின் வடசுவற்றில் உள்ள பல கல்வெட்டுகளுள் ஒன்று. இவற்றை ‘தளிச்சேரி கல்வெட்டுகள்’ என்பர்.

இக்கோயிலின் மூலவரை ‘ஆடவல்லான்’ என்றே அழைக்கிறது இக் கல்வெட்டு. ஆடவல்லான் திருமுன் ஓயாது நடனம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், 400 நடனமங்கையர் இக்கோயிலுக்காக
Sep 19, 2020 8 tweets 3 min read
#தமிழ்க்கல்வெட்டெழுத்துகள்

பாடம் 3 :
#பள்ளன்கோயில் செப்பேடு

பல்லவர்கள் வடநாட்டினர் என்பதால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் தொடக்கத்தில் எழுதிவந்தனர்.
பல்லவர்களின் தோற்றமாகக் கருதப்படும் குண்டூர்ப் பகுதியில் (1/9 ) மிகப் பரவலாக அறியப்படும் ‘பட்டிப்புரோலு’ புத்த தூபக் கல்வெட்டு உள்ளது. அது பிராகிருதமொழியில் ‘அசோகபிராமி அல்லாத எழுத்தில்’ உள்ளதையும் நாம் பின்னர் காண்போம்.

சோழர்களுக்கு முன்னரே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்துகளில் பொறிக்கத் தொடங்கிவிட்டனர். (2/9)
Feb 22, 2020 7 tweets 1 min read
அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டத்தை உருவாக்கியவர் யாவர்? எப்போது உருவாக்கப்பட்டது? உருவாக்கியதன் பின்னணி என்ன?

60 ஆண்டு வட்டம் (அ) வியாழ வட்டத்தை உருவாக்கியோர் தமிழர். உருவாக்கிய காலம் கலிகாலத்தின் தொடக்கம் எனக் கொள்ளலாம்.

கலிகாலத்தின் தொடக்கம் கிமு 3102 என்பதை மனதில் கொள்க. இரவும் பகலும் நாள் ஆகியது. நிலவின் தேய்தலும் பெருகலும் மாதங்கள் ஆயின.

அதனைப் 12ஆல் பெருக்க ஆண்டுக் கணக்கின் நெருங்கிய நாட்கணக்கு தெரிந்தது. அதனைச் சரிசெய்ய பதினொரு நாட்கள் கூட்டி 365 ஆனது. அதிலும் ஒரு குறை, ¼ நாள். அதற்கு ஒரு தாண்டாண்டு (Leap) தேவைப்பட்டது.