Post Covid Care : thread.,
உயர் பொறுப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவரிடம் நேற்று பேசினேன். நுரையீரல் துறை நிபுணர் அவர். அவர் சொன்ன சில எச்சரிக்கைகளை இங்கே பகிர்கிறேன்.
1. முதலில் நமது சுகாதாரத் துறைச் செயலாளர் பெண்மணி குறிப்பிட்டதைப் போல கோவிட் வைரஸ் ஒரு எளிய ஃப்ளூ ஜுரம் அல்ல.
2. மிக வேகமாக தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் வகையாக உள்ளது. எனவே, தடுப்பூசி வந்தாலும் அதிலும் எல்லோருக்குமான நிரந்தர தீர்வாக அமையுமா என்பது ஐயமே!
3. ஒரு முறை கரோனா பாசிட்டிவ் வந்து குணமாகி கரோனா நெகட்டிவ் ஆனவுடன், அந்த நோய் 'முற்றிலுமாக' நீங்கி, இனி அபாயமில்லை என பொருள் அல்ல.
4. கரோனா வைரஸ் விலகும்போது சிலருக்கு அவரவர் உடல்தன்மையை வைத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன. இதை கவனித்து முன்கூட்டியே கண்டுபிடிக்க நம்மிடம் வழிமுறையும் இல்லை. அதற்கான வசதிகளும் இல்லை.
5. கடந்த வாரத்தில் அவரிடம் வந்த நுரையீரல் தொற்று கேஸ்களில் 7ல் 5 கரோனா குணம்
அடைந்தவர்கள். ஆக, கரோனா ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் அவை என கருதுகிறார்.
6. நுரையீரல் மட்டுமல்லாமல், மூளைக்குச் செல்லும் ரத்தஒட்டம் அடைப்பு வரை பல்வேறு வகையில் அந்த பாதிப்புகள் இருக்கும் என்கிறார்.
7. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவுடன் ஏற்படும் இவ்வகையான பாதிப்புகள்
எதிர்பாராத விதத்தில் தாக்குவதால் கரோனாவை விட அபாயம் மிக அதிகம்.
அவர் கருத்துப்படி கரோனா குணம் அடைந்து நெகட்டிவ் ஆனவர்கள் 3 வாரம் கழித்து CT Scan எடுத்துப் பார்ப்பது நல்லது. நிச்சயம் மருத்துவரையேனும் சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அதை இங்கே பதிவு செய்கிறேன்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
