Yuvaraj Soundararajan Profile picture
【Humans First, 🐶 later】 【Banking 💴】【 Nature ❤️】 【Road Safety🚸】 #CricketAfghan

Sep 20, 2020, 10 tweets

நண்பர்களே, சென்ற வாரம் அரசின் திட்டங்களில் கடன் பெறுவது பற்றி அறிந்து கொண்டோம். இந்த வாரம் வங்கியில் தொழில் செய்ய கடன் பெறுவது எப்படி என பார்க்கலாம்.

இதற்கு பின்வரும் 2 கேள்விகளுக்கும் அதன் துணைக்கேள்விகளுக்கும் சரியான பதில் இருந்தால் வங்கியில் கடன் வாங்குவது சுலபம்

1. கடன் வாங்கி அந்த பணத்தை என்ன செய்வீர்கள்? (End use of funds)
2.அந்த பணத்தை எப்படி திருப்பி அடைப்பீர்கள்? (source of repayment)

இந்த கேள்விகள் பார்க்க மிக சுலபமாக தெரியும். ஆனால் உங்கள் பதிலானது நிறைய துணைக்கேள்விகளை கேட்க வைக்கும். அந்த பதிலில் இருந்தே உங்களுக்கு கடன் தருவது

பற்றி வங்கி முடிவு எடுக்கும்.

எகா. நீங்கள் ஒரு பெட்ரோல் பங்க் நடத்துகிறீர்கள். உங்கள் டேங்கின் கொள்ளளவு 50,000 லிட்டர். யாருக்கும் நீங்கள் கடன் தருவதில்லை, cash and carry business என வைத்துக் கொள்வோம். வருடம் 5 கோடி வியாபாரம் நடக்கிறது.

நீங்கள் அதிகபட்சமாக 1 கோடி(turnover x 20%) வரை overdraft பெற முடியும். ஆனால் உங்களுக்கு அவ்வுளவு தேவைபடாது. 50,000லிட்டர் பெட்ரோல் வாங்க 40லட்சமே போதுமானது. வங்கி உங்களுக்கு ஒரு கோடி கொடுத்தால் உங்கள் கை சும்மா இராது. மீதி கடனை எங்காவது தொழில் சாராத முதலீடு செய்து அதை இழக்கும்

வாய்ப்பு மிக அதிகம். எனவே வங்கி உங்களுக்கு அதிபட்சமாக (உங்கள் பங்களிப்பு 25% போக) 30லட்சமே கடன் தரும். அடுத்து கேள்வி. எப்படி திருப்பி அடைப்பீர்கள்? நீங்கள் கடன் வாங்கி முதலீடு செய்யும் தொழில், பணத்தை / லாபத்தை (cash flow) உருவாக்க வேண்டும்.

அதை ஆண்டுக்கு எத்தனை முறை rotate செய்கிறீர்கள், உங்கள் லாப சதவீதம் என்ன என்பதை பொறுத்து உங்கள் கடனை திருப்பி செலுத்தும் வலிமையை பெறுவீர்கள்.

மீண்டும் அதே பெட்ரோல் பங்க் உதாரணம். வங்கியில் 30லட்சம் கடன் வாங்கி + உங்கள் பணம் 10லட்சத்துடன் பெட்ரோல் ஸ்டாக் வைத்து விற்கிறீர்கள்.

வட்டி 10% ஆண்டுக்கு. அதாவது 3 லட்சம். லிட்டருக்கு 1 ரூபாய் லாபம் (எல்லா செலவும் போக) என வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த 50,000 லிட்டர் பெட்ரோலை வருடத்திற்கு 5 முறை rotate செய்தால் 2.50லட்சம் (50,000லி×1௹×5) மட்டுமே லாபம் கிடைக்கும். வங்கியில் வட்டி கூட கட்ட முடியாது.

அதுவே 30 முறை rotate செய்தால் ஆண்டுக்கு 15 லட்சம் (50,000லி×1௹×30) லாபம் வரும். வங்கிக்கு 3லட்சம் வட்டி போக உங்கள் லாபம் 12லட்சம்!

அடுத்த வாரம் இன்னும் பேசுவோம்.

பின்குறிப்பு, with no offence:
அந்த 2 கேள்விகளுக்கும் சில சமயம் தமாஷான, அதிர்ச்சிகரமான பதில்களை பதில்களை கேட்டுள்ளேன். அதையெல்லாம் பொதுவெளியில் பகிர இயலாது. We have to maintain confidentiality on certain things
🙂🙂🙂

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling