#தினசரி_பூஜை -24
ரைட் , அர்ச்சனை முடிந்தது. அடுத்து தூபம். தசாங்கத்தை தணலில் தூவி புகை போடுவது நல்லது. தணலுக்கு இந்த காலத்தில் எங்கே போவது? விசேஷ பூஜைக்கே ஒரு துண்டு கரியை காஸ் அடுப்பில் வத்து தணலாக்கித்தான் கொண்டு வருகிறார்கள்! அதனால ஊதுவத்திதான் புழக்கத்தில் இருக்கிறது.
1/6
மந்திரம்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.
தீபம் என்னது? எப்பவுமே அது ஏத்திதானே இருக்கும்ன்னா, ஆமாம், தீபம் ஒன்று எரியாமல் ஸ்வாமியை வெளியே எடுப்பதில்லை. ஆனாலும் இங்கே சொல்வது நெய் தீபம். சிலர் ஒரு டப்பாவில்
2/6
நெய் ஊற்றி அதில் சின்ன திரிகளை போட்டு ஊற வைப்பார்கள். தேவையான போது அதில் ஒன்றை எடுத்து ஏற்றிவிட்டால் சிறிது நேரம் எரிந்து அணைந்துவிடும்.
மந்திரம்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்
மங்கள் தீபம் தர்சயாமி
3/6
அடுத்து நிவேதனம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடாதே என்பது சாஸ்திரம். நாம் உண்ணப்போவதையே நிவேதனம் செய்யலாம். ஆனால் உப்புபோட்டதை பொதுவாக நிவேதனம் செய்வதில்லை. அன்னத்துடன் பருப்பு போட்டாலும் அதை உப்பு போடாமலே வைத்து பின்னால் சாப்பாட்டுக்கு முன் உப்பு போட்டுக்கொள்வார்கள்.
4/6
விஷயம் தெரியாதவர்கள் "இவ்வளோ நாளா பூஜை செய்யறியே, ஒரு நாளாவது ஒரு பருக்கையாவது உங்க சாமி சாப்டாரா" என்று கிண்டல் செய்கிறார்கள். நிவேதனம் என்பது அறிவிப்பது, காட்டுவது. தேவதைகளுக்கு உண்ண வேண்டிய தேவையில்லை. பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள்.
5/6
மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள். இதற்காகவே நிவேதனம்.
மந்திரம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்
வேத மந்திரம்: மதுவாதா ருதாயதே....
..... சால்யன்னம் நிவேதயாமி.
6/6
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
