P. Chidambaram Profile picture
Official account of P. Chidambaram | Member of Parliament, RajyaSabha | Former Finance Minister, GoI | Here for short but serious comment on contemporary issues

Sep 20, 2020, 5 tweets

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றிய இரண்டு விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது

விவசாயின் தேவை ஆயிரமாயிரம் சந்தைகள். ஊரகப் பகுதிகளில் சிறிய நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் சந்தைகளை அமைப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம்

அதனைச் செய்யாமல், இருக்கும் ஒரே ஒழுங்குமுறை சந்தையையும் ஒழிக்கும் முயற்சியை பாஜக அரசு செய்கிறது

விளைபொருள்களுக்கு ‘குறைந்த பட்ச விலை உத்தரவாதம்’ என்ற முறையையும் பாஜக அரசு ஒழிக்க முயலுகிறது

எனவேதான் பஞ்சாப், ஹரியான, உ.பி. மாநிலங்களின் விவசாயிகள் தெருக்களுக்கு வந்து போராடுகிறார்கள். அஇஅதிமுக அரசோ மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ1150. ஆனால் பல விவசாயிகள் ரூ850க்கு தனியார் வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். இது ஏன் என்று தமிழ்நாடு அரசு விளக்கவேண்டும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling