அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 20, 2020, 22 tweets

#Farmbill2020 #வேளாண்துறை_சட்ட_மசோதா_திருத்தங்கள்
உண்மை என்ன என்று தெரியாமல் எதிர்ப்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஒரு நல்ல விஷயம் கண் முன்னே நடந்தாலும் அதை வரவேற்றுப் பாராட்டத் தெரியாமல் இருப்பது இரண்டாவது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதா முழுக்க

முழுக்க விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாயத்தில் புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது தங்கள் தயாரிப்புகளை விற்க கூடுதல் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க, கூடுதல் நன்மை

அவர்களுக்குக் கிடைக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்கள்:
* விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் வசதி) மசோதா 2020
* விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு)மசோதா 2020
* அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா 2020

1. இதற்கு முன்னால் விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தங்கள் உற்பத்தியை விற்க முடியாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மண்டியில் தான் இவர்கள் ஒரு குழுவாக போய் விற்க முடியும். இதற்குப் பெயர் Agricultural Produce Marketing Committee or APFC. இங்கு தான் விவசாயிகள் லைசன்ஸ் பெற்ற கமிஷன் ஏஜன்ட்

மூலம் விற்க முடியும். அதனால் லஞ்சம் லாவண்யம் பெருகி தலை விரித்தாடியது. மாபியா கைகளில் விவசாயிகள் அகப்பட்டுக் கொண்டு திண்டாடினர். நம் நாட்டின் 50% விவசாயிகள் ஆனால் அவர்கள் உற்பத்தி ஜீடிபியின் பங்கில் வெறும் 17% தான். இந்த சீர்திருத்த மசோதாவினால் நம் நாட்டு ஜீடிபியில் விவசாயிகளின்

உற்பத்திப் பங்கு பெருகும்.
2. இச்சட்டம் வேளாண் விளை பொருட்களை வணிகப் பகுதி என அறிவிக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்க அனுமதிக்கிறது. இதனால் விவசாயிகள் விற்பதற்காக முழுக்க சுதந்திரம் வழங்கப்படுகிறது.
3. விவசாயிகள் தங்கள் விருப்பம் போல எவ்வித தடையும் இன்றி ஒழுங்குமுறை

விற்பனை கூடங்களுக்கு வெளியிலும் விளை பொருட்களை விற்கலாம். இதற்காக எந்தக் கட்டணமும் கொடுக்கத் தேவையில்லை. மின்னணு வர்த்தக முறையில் நாட்டில் எந்தப் பகுதியில் உள்ள வணிகர்களும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய சட்டத்தில் வழி உள்ளது.
4. தானியங்கள், பருப்பு வகைகள், உருளை, வெங்காயம், சமையல்

எண்ணெய் ஆகியவற்றுக்குப் போர், பஞ்சம், பேரிடர் காலங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் முறைப்படுத்தவும் இந்தத் திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
5. தோட்டக்கலை விளை பொருட்களின் விலை 100%க்கு மேலும் வேளாண் விளை பொருட்களின் விலை 50%க்கு மேலும் அதிகரிக்கும்போது அவற்றின் இருப்பு அளவை

நெறிபடுத்த முடியும். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பயன் பெறுவர்.
6. இந்த புது மசோதாவினால் விவசாயிகளை நசுக்கி வரும் ஊழல் முற்றிலும் அகற்றபடும்.
7. விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப் படுவதால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு எந்த

பாதிப்பும் வராது.
8. அதேபோல் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துக்களை நசுக்காது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும்.
9. சந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை

யாருக்கும் விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது.
10. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. சந்தை கட்டணமாக இதுவரை 8.5% செலுத்தப்படவேண்டியிருந்தது. அது இனி இருக்காது. இது உற்பத்தியாளருக்கும் வாங்கி விற்பவருக்கும்

பெரும் இலாபத்தை கொடுக்கும்.
11. இந்த மசோதா மூலம் விவசாயத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும்.
12. இதனால் விவசயாத் துறையின் உள்கட்டமைப்பு வலுப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகளுக்கு பெரிய வர்த்தக நிறுவனங்களுடன்

நேரடி தொடர்பு கிடைக்கும்.
13. முன்பு தரகர்கள் கை ஓங்கி இருந்தது. இந்த மசோதா மாற்றத்தால்
சந்தை சமன் நிலைக்கு வருகிறது. (Level playing field).
14. ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் இச்சட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் வகையிலான ஷரத்துகள் எதுவும் இல்லை.

விவசாயிகளுக்கு ஒப்பந்த விலை மூலம் உறுதியான விலை கிடைக்கும்.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் நலனுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? இலவச மின்சாரம், இலவச தண்ணீர் கடன் தள்ளுபடி என்று கொடுத்தும் விவசாயிகள்

இலாபகரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் தான் வைத்திருந்தார்கள். கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தால் விவசாயத் துறை நவினமயமாக்கப்படும். உலகம் முழுதும் முன்னேறிய நாடுகள் விவசாயத் துறையை எவ்வாறு நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கி விவசாயிகளை செல்வந்தர்களாக மாற்றியுள்ளனவோ அதைத் தான் இந்தியா

இப்போ செயல்படுத்துகிறது. இந்த நல்ல மாற்றத்தை எதிர்க்கின்றது யார் என்று பார்த்தால் இதுவரை விவசாயிகளின் வளத்தைப் பெருக்காமல் வாளாவிருந்த எதிர்க்கட்சிகள் தாம்! மீடியாக்களும் எதிர்க்கட்சிகளும் பொய்யுரைத்து விவசாயிகளை பீதியடையவைத்து தங்கள் பிடிக்குள் மக்களை வைக்கப் பார்க்கின்றனர்.

விவசாயியாக இருந்து தமிழக முதல்வர் ஆகியிருக்கும் திரு @EPSTamilNadu , இன்றும் தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படும் ஒருவர், இந்த சட்டத் திருத்த மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்காகவே என்று ஆதரவு தனது வரவேற்பு அளித்திருப்பது இச்சட்டத்திற்கான அங்கீகாரம்.
#FarmBill2020

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling