அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.
Shrivathsa. B Profile picture KN Ramesh Profile picture sundaram ramaswamy Profile picture BALASUBRAMANIAN.K. Profile picture Subbu Profile picture 23 subscribed
Mar 19 16 tweets 5 min read
சிறு நீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்
#சுத்தரத்தினேஸ்வரர்_திருக்கோயில்
ஊட்டத்தூர், திருச்சி.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இக்கோவில்.

நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூா் நாகேச்சரம் நல்லூா் நல்ல
துறையூா் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரம் துருத்தி சோமீச் சரம்
உறையூா் கடலொற்றியூா் ஊற்றத்தூா்
ஓமாம் புலியூா் ஓா் ஏடகத்தும்
கறையூா் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாய நாதனையே காண லாமேImage என்று அப்பா் பெருமான் திருவாக்கில் பாடிய இந்த பாடலில் இடம்பெற்றுள்ள ஊற்றத்தூா் என்ற ஊர் தற்போது மருவி ஊட்டத்தூா் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழன் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரா் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு அடிக்கடி Image
Mar 18 10 tweets 4 min read
நம் இல்லத்தில் இருக்க வேண்டியவை, கடைபிடிக்க வேண்டியவை.
#நெல்ல்லி_மரம்
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக் கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லஷ்மி குபேரருக்குImage உரிய மரமாகவும் திகழ்கிறது‌. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்து இருக்கும் எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது.

நாள் தோறும் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வர வேண்டும்.

வீடுகளில் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும் மாலை வேளைகளில் விஷ்ணுImage
Mar 18 8 tweets 2 min read
#மகாபாரதம்
என்னிடம் சரணாகதி அடைந்தவன் உயிரை இறுதிவரை காப்பேன் - பரந்தாமன் பார்த்தசாரதி

யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து, தர்மர் “வீரர்களே! விரைவில் தர்மயுத்தம் தொடங்க இருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் படுகிறது. எங்கள் அணியிலிருந்துImage யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம். துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம். வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள
Mar 17 17 tweets 3 min read
கர்ம வியாதியும் காயத்ரி மந்திரமும்
சுமார், 600வருடங்கள் முன்னால் திருவனந்தபுரத்திலிருந்து கொண்டு ஆட்சி செய்த ஒரு கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்தியம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. எவ்வளவோ சிகிச்சை செய்தும் குணமாகாமல் கஷ்டப்பட்டான். ஒரு நாள் இரவுImage பகவானையே ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டு கண்ணயர்ந்து விட்டான். அப்போது ஒரு ஸ்வப்னம் வந்தது. ஸ்வப்னத்தில் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக ஒரு பெரிய ரூபம் தோன்றி அவனிடம், “ராஜாவே! உனக்கு ஏற்பட்டிருப்பது கர்ம வியாதி. அதாவது, ஜன்மாந்தரத்தில் நீ செய்த பாபத்தில் தீராமல் மீதமிருந்ததே ரோகமாகி
Mar 17 6 tweets 2 min read
சுவாமி வேதாந்த தேசிகன் இயற்றியது யாதவாத்புதயம் என்ற வடமொழிக் காவியம்! இதன் முதல் வெகு அழகான ஸ்லோகம்:
வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்

கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர்.Image
Image
அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்!
பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்! அடுத்த
Mar 17 17 tweets 4 min read
#கரிக்ககம்_சாமுண்டிதேவி கேரளா
ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. அதன்படி சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக இத்தல அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் Image சித்திரங்களாக உள்ளனர். இவர்களின் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை. ஆலய கருவறையில் சாமுண்டி தேவியை விக்கிரகமாக வழிபாடு செய்கின்றனர். மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர், ஒரு மலைப் பிரதேசத்தில் 108 சிவன் கோவில்களையும், 108 அம்பாள் கோவில்களையும் நிறுவினார். அந்த தேசம் தான் கேரளம்Image
Mar 17 4 tweets 1 min read
பிபரே இராமரஸம்
சதாசிவ பிரம்மேந்திரர் கிருதி

பிபரே ராமரசம் ரசனே..
பிபரே ராமரசம்
அருந்துவாய் ராமரஸம் என்னும்
பக்தி ரசம் நாவே!
விருந்திது அமுதமயம்!-நாவே!
அருந்துவாய் ராமரஸம்

தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம்
பூரித நானாவித பல வர்க்கம்
புன்மையைப் போக்கும்
புனித நன்னாமம்
நன்மைகளனைத்தும்Image நல்கும் சுநாதம்.

ஜனனமரணபய சோக விதூரம்
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்
பிறவிமரணபயம்
மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை
ஞானத்தின் சாரம்.

பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம்
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்
நான்முகன் படைப்பினைக்
காத்திடும் கவசம்.
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம்
Mar 16 15 tweets 3 min read
கரிவரதராஜப் பெருமாள் கோவில் ஆறகளூர்
சேலம் மாவட்டம்
ஆறகளூர் சோழர் ஆட்சிக்காலத்தில் மகதை மண்டலம் என்னும் சிற்றரசின் தலைநகர். இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி மகதை நாட்டில் அடங்கி இருந்தது.Image வரலாறு
பொ.யு. 12-ம் நூற்றாண்டில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதி ஆகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார். இவர் காலத்தில்தான் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரி வரதராஜ பெருமாள் கோவிலும்Image
Mar 14 21 tweets 4 min read
#இந்துமதத்தில்_ஏழு
சப்த கோடி மந்திரங்கள்
பொதுவாக கடவுளின் மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும். கோடி - கடைசி, இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது.
“நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, லம், வஷட், வௌஷட்”Image ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள் தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை
Mar 13 15 tweets 2 min read
#கர்மயோகம்_என்றால்_என்ன
ஒரு பக்தர் #ரமண_மஹரிஷியிடம் கேட்டார். மஹரிஷி புன்முறுவலுடன் மெளனம் காத்தார். ஒருவேளை அவர்களுக்குத் தான் சொன்னது காதில் விழவில்லையோ? இன்னும் சற்றே நெருங்கிப் போய் மீண்டும் “கர்மயோகம் என்றால் என்ன?"என்றார்.
இந்த முறை மஹரிஷி திரும்பிப் பார்த்து, தான் அந்தக் Image கேள்வியை மனதில் வாங்கிக் கொண்டதை முக பாவத்தாலேயே காட்டினார். மீண்டும் மெளன‌மே அங்கு நிலவியது. சரி! மஹரிஷிக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை போல என்று எண்ணிக் கொண்டார் பக்தர். காலை உணவு முடிந்தவுடன் மலை மீது உள்ள ஸ்கந்த ஆஸ்ரமத்திற்குச் செல்லும் பாதைக்கு மஹரிஷி வந்தார். பக்தர்களும்
Mar 12 16 tweets 2 min read
புனிதமான கிருஹம்
வட இலுப்பை
27 தலைமுறைகளாக அக்னிஹோத்ரிகள், தீக்ஷிதர்கள், கனபாடிகள், ஸ்ரீவித்யா உபாசகர்களாக ஒரு கிராமத்தில், ஒரே கிருஹத்தில் தொடர்ந்து வசித்து வந்து இருக்கிறார்கள். 27 வது தலைமுறையைச் சேர்ந்தவர் ப்ருஹ்மஸ்ரீ சுதாகர் தீக்ஷிதர் வட இலுப்பை கிராமத்தில், இந்த 2,500Image வருடப் பழமையான கிருஹத்தில் வசித்தும், பராமரித்தும் வருகிறார். காஞ்சிபுரம் ஆற்காடு வழித்தடத்தில், காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் வட இலுப்பை உள்ளது. அந்தக் கிருஹம் பல மகான்கள் விஜயம் செய்த புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. காஞ்சி மடாதிபதி #மகாபெரியவா காஞ்சிபுரத்தில்
Mar 12 9 tweets 3 min read
#மதுராஷ்டகம்
வல்லபாச்சாரியார் அருளிய ஸ்லோகம்.
கண்ணனின் அனைத்து அசைவுகளும் அனைத்துச் செயல்களும் அவனது
உருவமும் அங்கங்களும் ஆடை அணிகலன்களும் இன்னும் பிறவும் இனிமையானவை (மதுரம்) என்று
பாடும் பாடல்.

1. அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் Image மதுரம்
மதுரதிபதே ரகிலம் மதுரம்

கனியிதழ் அழகு
தண்முகம் அழகு
கருவிழி அழகு
குறுநகை அழகு
அழகு உன்னுள்ளம்
அழகு உன்நடையும்
அழகின் அரசே
அழகே எல்லாம்!(1)

2. வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வசனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுரதிபதே ரகிலம் மதுரம்.

சொல்மொழி அழகு Image
Mar 11 17 tweets 3 min read
#காரடையான்_நோன்பு
மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. 14.03.2024 காலை 11.00 A.M மணி முதல் 11.55 AM மணிக்குள் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்து கொள்கிற மஞ்சள் Image கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். தீர்க்க சுமங்கலி வரம் அருள்கிறது காரடையான் நோன்பு. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு Image
Mar 11 17 tweets 6 min read
#ஆறு_முக்கிய_கிருஷ்ண_ஸ்தலங்கள்
மதுரா
கம்சனால் சிறைவைக்கப் பட்ட காலத்தில் அவர் பெற்றோருக்கு சிறையில் பிறந்தவர் கிருஷ்ண பகவான். பிறந்தவுடனே வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணரை கோகுலத்திற்கு கொண்டு சென்று விட்டார். ஜென்மாஷ்டமி நாளன்று மதுரா நகர் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும்Image அலங்கரிப்பட்டிருக்கும். ஜஹாங்கிஸ் மற்றும் தபேலா வாசிப்போர் வாகனங்களில் கிருஷ்ண பகவானின் வாழ்க்கை வரலாற்று கதையை கூறும் விதமாக சித்திர கதைகள் மற்றும் கச்சேரிகள் செய்தபடி செல்வார்கள். ஜகுலன் உற்ஸவ எனப்படும் ஊஞ்சலாட்டும் உத்சவம் மதுராவில் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி விழாவின் சிறப்பு Image
Mar 10 14 tweets 2 min read
#ஸ்ரீராகவேந்திர_சுவாமி
மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி, தனது 76-வது வயதில் (C.1595 - C.1671) பிருந்தாவனம் பிரவேசித்தார். ராகவேந்திர ஸ்வாமி கிரகஸ்தராக இருக்கும் போது அவர் பெயர் வேங்கடநாதன். ஒரு வேளை சாப்பாட்டிற்கே மிகவும் அவதிப்பட்டார். அத்தகைய கொடூர வறுமை அவரை வாட்டியது. இருப்பினும் Image பிரபலமான பண்டிதர். ஆகையால் விசேஷம், நாள்கிழமை, என்றால் மடத்திற்கு சென்று தீர்த்த பிரசாதங்களை (சாப்பாடு) உண்ணுவது வேங்கடநாதனின் வாடிக்கை. ஒருநாள், விசேஷம் ஒன்று வந்தது. வேங்கடநாதன், தன் குடும்பத்தோடு மடத்திற்குச் சென்றார். நாம் முன்பே சொன்னோமல்லவா வறுமை, அதன் காரணமாக முகத்தில்
Mar 9 9 tweets 3 min read
#கற்கடேஸ்வரர்_திருக்கோவில் திருப்பனந்தாள்
ஒரு சமயம் துர்வாச மகரிஷி, சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜை கலையும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. Image கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்து விட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் Image
Mar 9 18 tweets 3 min read
#கர்மவினைகளை_ஒருவன்_அனுபவித்துத்தான்_தீர்க்க_வேண்டுமா?
விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்த போதிலும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக் காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும்
Image
Image
கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் அவனுக்கு குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன்
Mar 9 13 tweets 5 min read
திருநீற்றுப்பதிகம்
(திருஞானசம்பந்தர்)
தீராத நோய்களையும் தீர்க்கும் பதிகம்(9)
நன்றி D.V. ரமணி

மந்திரம் ஆவது நீறு;
வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு;
துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு;
சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன்
திரு ஆலவாயான் திருநீறே.

பொ-ரை: சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு. மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப் படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து
சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்து உள்ளது.Image வேதத்தில் உள்ளது நீறு;
வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு;
புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு;
உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த
திரு ஆலவாயான் திருநீறே

பொ-ரை: குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள்
சூழ்ந்த திரு ஆலவாயிலில் விளங்கும் சிவ பிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப் பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமையைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது.
உண்மையாக நிலைபெற்றிருப்பது.Image
Mar 9 8 tweets 3 min read
#எட்டு_திக்குகளை_ஆளும்_சக்திகள்
1. கிழக்கு - பிராம்மி
2. தென்கிழக்கு - கௌமாரி
3. தெற்கு - வராஹி
4. தென்மேற்கு - சியாமளா
5. மேற்கு - வைஷ்ணவி
6. வடமேற்கு - இந்திராணி
7. வடக்கு - சாமுண்டி
8. வடகிழக்கு - மகேஸ்வரி

பிராம்மி: பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்றுImage அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி: சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப் படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில்Image
Image
Mar 8 23 tweets 5 min read
#பஞ்சநரசிம்ம_திருத்தலங்கள்
நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில், பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்கள் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் உள்ள இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால், எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும், விடுபட்டு மன நிம்மதியை அடையலாம். இந்த 5 கோவில்களும் அமைய Image முக்கிய காரணம் திருமங்கை ஆழ்வாராவார். திருமங்கையாழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண வேண்டுதல் மேற்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் 5 தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி அவர் தோற்றம்
Mar 7 16 tweets 3 min read
#மகாசிவராத்திரி_ஸ்பெஷல்
300 வருடங்களுக்குப் பிறகு அபூர்வ மகா சிவராத்திரி! 2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. விரதங்களிலேயே சிறந்தது மகாImage சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. மகா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர், சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை