தமிழன் Profile picture
Your account has been withheld in India in response to a legal demand. https://t.co/g6zKNs0EAW.

Sep 20, 2020, 7 tweets

விடுதலை புலிகள் அமைப்பிலோ, தலைவர் நிறுவி நடத்திய தமிழீழ அரசிலோ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால், தலைவர் என்ன மாதிரியான தண்டனைகள் தருவார் என உலகமே அறிந்தது, குறிப்பாக சீமான் அண்ணன் தலைவரின் அந்த உறுதியை பலமுறை மேற்கோள் காட்டியே நமது கட்சியில் பெண்ணிய சமுத்துவத்தை கற்பித்து, 1/7

நாம் தமிழர் அரசு அமையும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியோடு பயணிக்கிறோம்.

இந்த நிலையில் நமது கட்சி சார்ந்த அறிமுகமான பொறுப்பாளரே, நமது கட்சியின் முன்னாள் உறவுகளை (ஏன் எதிரியாக கூட இருந்துவிட்டு போகட்டும்) தாக்க, 2/7

அவர்களது மனைவி, சகோதரி, தாய் என குடும்பத்தின் பெண் உறவுகளை அவ்வளவு கேவலமாக, வன்மத்தோடு பேசிய ஒலி பதிவு சமூக வலைதளங்களில் பரவி நமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதோடு, நமது பெண்ணிய பாதுகாப்பு கொள்கையை பொதுவெளியில் கேள்விக்கு உள்ளாக்கியது.

இந்த ஒலி பதிவு உண்மையா என பலர் கட்சி 3/7

பொறுப்பாளர் மீது நம்பிக்கையை விதைத்து வந்தாலும், தற்போது சம்மந்தப்பட்ட நபரே தான் பேசியது தவறு என்று சர்வ சாதரணமாக ஒரு கடிதத்தை எழுதி மன்னிப்பு கேட்டுவிட்டு, அடித்தட்டு கிராமத்திலிருந்து வந்தவன், என் மண்ணிற்கே உரிய கோபாவேசத்தில் பேசியதாக, தனது தவறுக்கு ஞாயம் கற்பிக்க.. 4/7

நமது மண்ணையும் கிராமத்தையும் காரணம் சொன்னது அருவருக்கத்தக்க செயல்.

தவிர, மன்னிப்பு கேட்பவருக்கு இது புதிதும் அல்ல, கம்மா நாயுடு சங்க எதிர்ப்பு பேச்சு, இராசீவ்காந்தி நினைவிட டிக்டாக் என பல மன்னிப்பு மடல் தந்து சாவர்கர் பெயர் வாங்கி கட்சியை தலைகுனிய செய்துள்ளார். 5/7

இப்போது இந்த குற்றம் நீரூபனமாகி விட்டதால், தலைவர் பிரபாகரனை தலைமையாக ஏற்று இயங்கும் நாம், பெண்ணியத்தை காக்கும் நம் கொள்கை நிலைப்பாட்டை உறுதி செய்து நம்மை நம்பி நிற்கும் அக்கா/தங்கைகளுக்கு நம்பிக்கையை விதைக்க, சம்பந்தப்பட்ட நபரை கட்சியை விட்டு நீக்கவதோடு, இனி எந்த காலத்திலும் 6/7

அவர் நாம் தமிழர் கட்சியில் அனுமதிக்க படமாட்டார் என்பதை சமீபத்திய "நான் இறந்தே போனாலும் இவர்களை கட்சியில் சேர்க்காதீர்கள்" எனும் நிலைப்பாட்டில் நிறைவேற்றி வெளியேற்ற வேண்டும்,

பெண்ணியம் காக்க, சீமான் அண்ணன் நிச்சயமாக இதை செய்வார் என உளமாற நம்புகிறேன்.💪 7/7
#நாம்_தமிழர்_கட்சி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling