கொஞ்சம் நிதானமாக கவனித்தால் கடந்த வாரத்தில் நீட் தொடர்பான மரணங்கள் பேசு பொருளாகாமல் போனதெப்படி, அதுவல்லமால் எது எந்த ஹீரோworship தூக்கி பிடிக்கப்பட்டது, அதன்பின் திசைமாறி ஏமாற்றும் ஏழரை சத ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எப்படி பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டது என்பது குறித்த உண்மைபுரியும்.1/5
இங்கு யாரும் நீட் எதிர்பாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தொடர்ந்து 4 மரணங்கள் நிகழ்ந்தும், நம் மாணவர்கள் சொல்லொணா மனதுயர் அடைந்தும் அது ஒரு கொந்தளிக்கும் பிரச்சனை ஆகாமல் போனது குறித்த ஆதங்கம் எனக்குள்ளது போல் உங்களுக்கும் உள்ளதா?2/5
இருந்தால் இதனை புரிந்து கொள்ள முயலுங்கள். எந்த ஒரு திடீர் குபீர் நீட் எதிர்பாளர்களின் இன்றைய மனமாற்ற வீராவேசத்தை விடவும் ஆயிரம் மடங்கு அர்ப்பணிப்புடன் திமுக ஆரம்பம் முதலே போராடி வருக்கிறது. நீட்டுக்கு அரசியல் தீர்வு காண, நாம் நிற்க வேண்டியது திமுக பின்னால் தானே ஒழிய 3/5
எந்த ஒரு நடிகர் பின்னோ, திடீரென கிளம்பும் உண்ணா விரத கும்பல் பின்னோ அல்ல. அவ்வாறு சென்றால் இது மீண்டும் மீண்டும் முனை மழுங்கடிக்கப்பட்ட கத்தியாக கூர்மை மழுங்குமே அன்றி தீர்வு கிடைக்காது.
ஆகவே யாரேனும் புதிதாக நீட் எதிர்ப்பு என்று வந்தால் நன்றி மட்டும் சொல்லி நகர்ந்திடுங்கள்.4/5
போராட்டத்தை கூர்மை.படுத்த திமுக, இடதுசாரி, விசிக, மக்கள் வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகளின் பின் நில்லுங்கள்.. அதுவே நீட்டை ஒழிக்கும். 5/5
#BanNEETSaveStudents #BanNEET_SaveTNStudents #BanNeet
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
