#தினசரி_பூஜை -25
அடுத்து தாம்பூலம் சமர்பிப்பது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. சும்மா அக்கறையில்லாமல் வைக்கக்கூடாது. நாம் போட்டுக்கொள்வதானால் எப்படி அது இருக்குமோ அப்படி இருக்க வேண்டும்.
மந்திரம்:
பூகீ3 ப2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம்
1/7
ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி
அடுத்து கர்ப்பூர ஹாரத்தி - மும்முறை சுற்றி, கண்களில் ஒத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
மந்திரம்:
ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம் ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர
வேத மந்திரம்:
2/7
ஸோமோ வா ஏதஸ்ய....
அடுத்து ஸ்தோத்திரங்கள்:
நம ஶிவாப்4யாம் நமயௌவனாப்4யாம்
பரஸ்பராஶ்லிஷ்ட வபுர்த4ராப்4யாம்
நாகேந்த3ர கன்யா வ்ருஷகேதனாப்4யாம்
நமோ நமஶ் ஶங்கர பார்வதீப்4யாம்
ஶாந்தாஹாரம் பு4ஜக ஶயனம் பத்மநாப4ம் ஸுரேஶம்
விஶ்வாஹாரம் க3க3ன சது3ர்ஷம் மேக4 வர்ணம் சுபா4ங்கம்
3/7
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி3 ஹ்ருத்த்4யான கம்யம்
வந்தே3 விஷ்ணும் ப4வப4யஹரம் ஸர்வ லோகைக நாத2ம்
ஸர்வமங்க³ல மாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே
ஶரண்யே த்ரயம்ப³கே கௌ³ரீ நாராயணீ நமோஸ்துதே
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வர
4/7
அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ரிபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்
{ஹே ஶம்போ! இறக்கும் போது கஷ்டமில்லாத இறப்பும், வாழும் போது வறுமை இல்லாத வாழ்வும் உன்னிடம் எப்போதும் சஞ்சலமில்லாத பக்தியும் அருள்வாய்.}
இப்படி ஸ்லோகங்களை சொல்லி , ஸ்வர்ண புஷ்பம் சாற்றி,
5/7
மந்த்ர புஷ்பம் தெரிந்தால் சொல்லி பிரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பூஜை அறை அனுமதிக்குமானால் வலமாக சுற்றி வந்து (ப்ரதக்ஷிணம்) நமஸ்கரிக்க வேண்டும். மும்முறையோ மேலோ.
6/7
ஸ்லோகம்:
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருʼதானி ச|தானி தானி விநஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³
{பிறப்பு முதல் எந்தெந்த பாபங்களை செய்தோமோ அவை அடி அடியாக வலம் வரும்போது விலகுகின்றன.}
7/7
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
