Rajaram Periyasamy Profile picture
தீதும் நன்றும் பிறர் தர வாரா✨தமிழ்தேசியவாதி💓 Stock Market Franchisee Proprietor💰 Belongs To Thamizhian Stock💪 Great things takes time👍

Sep 22, 2020, 6 tweets

#AgricultureBills2020
இது விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கையில் கொடுக்கும் சட்டம்.

இந்த சட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளது.

1.Essential Commodities Act 2020

2.Farming Produce trade and Commerce Act 2020

3.The farmers Agreement on Price Assurance and Farm service Act 2020

1.Essential commodities Act 2020 இந்த பிரிவு, பதுக்கலை சட்டப்பூர்வமாக்குகிறது. அதாவது நாட்டில் வேளான் பொருள் பெரும் விலை ஏற்றம் ஏற்பட்டால் ஏற்றுமதியையும், தனியார் சேமிப்பையும் தடை செய்யும் அரசு, ஆனால் இனி உணவுப் பஞ்சமே ஏற்பட்டாலும் ஏற்றுமதியை, பதுக்கலை நிறுத்த முடியாது.

2.Farming Produce trade and Commerce Act 2020
இந்த பிரிவு மாநிலப் பட்டியலில் இருக்கும் விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு எடுத்து செல்கிறது. விவசாயப் பொருளை மொத்தமாக விற்பனை செய்ய மாநில அரசு கட்டுப்பாடு வைத்துள்ளது, ஏன் என்றால் மாநிலத் தேவையை மீறி விடக் கூடாது என்று.

இது மொத்தமாக வாங்க நினைக்கும் பெரும் முதலாளிகளுக்கு தடையாய் இருந்தது. இனி அது இல்லை, ஒரு விவசாயி தன் பொருளை மாநிலத் தேவையையும் மீறி நாட்டின் எந்த மூலைக்கும் தன் பொருளை விற்கலாம். இனி பெரும் முதலாளிகள் தன் இஷ்டத்திற்கு வாங்கிப் பதுக்கி விலையை ஏற்றுவான்.

3.The farmers Agreement on Price Assurance and Farm service Act 2020
இந்த பிரிவு விவசாயிகளை அடிமையாக்கும். அதாவது ஒரு விவசாயி பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தன் விலை பொருள்கள் அனைத்தையும் அவருக்கே வழங்குவது. விலையை அந்த நிறுவனம் தான் நிர்ணயம் செய்யும்

அந்த நிறுவனம் சொல்லும் விதையை உரத்தைப் போட்டு தான் பயிரிட வேண்டும் என்று கூறுவான். உன் பொருள் நான் கூறியதைப் போல் வரவில்லை என்று சொல்லி ஒப்பத்தத்தை முறிக்கவும் முடியும்.

ஆக இனி கார்ப்பரேட் விவசாயிகள் தான் நாம் சாப்பிட வேண்டுமா பட்டினியா இருக்க வேண்டுமா என்று முடிவு செய்வார்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling