Ramakrishnan T Profile picture
Journalist, Chennai. Views are my own. #Identitypolitics #Indianpolitics #SriLankapolitics #water #energy #environment #culture

Sep 22, 2020, 15 tweets

இன்றைக்கு அப்பாவின் 89வது பிறந்த நாள்.
அப்பாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், இரண்டு காரணங்களுக்குகாக எனக்கு குற்ற உணர்வு உண்டு.
இந்த குற்ற உணர்வு எனக்கு மட்டுமே பொருந்தும். என்னுடைய சகோதரர்களுக்கு அல்ல!
ஒன்று, அவர் ஆசைப்பட்டபடி அவருடைய இறுதிச்சடங்குகள் நடக்கவில்லை. 1/14

பாரம்பரியமுறைப்படி தனக்கு சடங்குகள் செய்யவேண்டாம் என குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - அவருடைய 60வது மற்றும் 80வது பிறந்த நாட்கள் சமயத்தில் - என்னிடம் கூறியிருந்தார். க.நா.சுவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தினர் நடந்துகொண்டவிதம் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.2/14

க.நா.சுவின் இறுதி ஊர்வலம் முடிந்தபிறகு, ஒரு நாள், சிலரை அழைத்து சாப்பாடு போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். இம்முறையை பின்பற்றவேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம்.
இரண்டாவது, 2014-இறுதியில், 2015-ஆரம்பத்தில் நான் எடுத்த முடிவு. அப்போது, என்னுடனுமும் என் மனைவியுடனும் 3/14

பெற்றோர்கள் கிட்டதட்ட 20 வருடங்கள் இருந்து பழகிவிட்டனர். அந்த சமயத்தில் என்னுடைய சகோதரர், தி, நகரில் வீடு வாங்கியபொழுது, பெற்றோர்களை தன்னுடன் வைத்து கொள்ளவேண்டும் என்ற கேட்டுக்கொண்ட பொழுது, நான் அவர்களுடைய - அதாவது மூத்த குடிமகன்களின் மன நிலையை - அறிந்து அந்த வேண்டுகோளை 4/14

நிராகரித்திருக்கவேண்டும். ஆனால், ஏற்றுகொண்டுவிட்டேன்.
அந்த சமயத்தில் நானும் தற்போது இருக்கும் வீட்டை ஒன்று வாங்கி தயார்படுத்தி கொண்டிருந்தேன். இன்னம் சொல்லப்போனால், பெற்றோர்களுக்கு ஒரு அறை தயாராகிக் கொண்டிருந்தது. என்னுடைய சகோதரரின் வேண்டுகோள் கடைசி நேரத்தில்தான் வந்தது. 5/14

இருவரும் ஒரே மாதத்தில்தான் கிரஹபிரவேசமும் செய்தோம்
ஆனால், நான் செய்து கொடுத்திருக்கக்கூடிய வசதிகளை விட பலமடங்கு என்னுடைய சகோதரர் அவரது புதிய வீட்டில் அப்பாவிற்கு செய்து கொடுத்திருந்தார். பல விடயங்களைப்பற்றி யோசித்தும் அவ்வசதிகளை செய்திருந்தார். மன நிலை என்று குறிப்பது 6/14

பெற்றோர்களின் வயதை சம்பந்தப்படுத்தி பார்க்கவேண்டிய ஒன்று. அந்த வயதில் - அப்பாவிற்கு 83 வயது. அம்மாவிற்கு 76-77 வயது - வயதானவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒர் இடம் பழக்கப்பட்டு விட்டால், அந்த இடத்திலிருந்து அவர்களை அகற்றி இன்னொரு இடத்தில் வசிக்கக் கூறுவது மிகவும் தவறானது 7/14

மட்டுமல்ல. கொடுமையானதும் கூட.
அப்பா பன்முகத்தன்மை கொண்டவர் என்பது எனக்கு தெரிந்தாலும் அப்பாவை அப்பா என்று காணும் தன்மையே எனக்கு மேலோங்கிவிட்டது. அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதையும் எழுத்தாளர்களுக்கு "displacement" என்பது மிகப் பெரிய தண்டனை என்பதும் 8/14

என்னுடைய சிந்தனையில் அப்போது இல்லை.
தி நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு வாழ்ந்து விட்டு வேளச்சேரியில் குடி பெயர்ந்தபோது, அப்பாவிற்கு (அம்மாவிற்கும் கூட) முதலில் கடினமாக இருந்தாலும் மிக விரைவில் வேளச்சேரி அவருக்கு (அவர்களுக்கு) பிடித்து விட்டது. அதே மாதிரி, 9/14

"தி நகரில் இரண்டாவது வாசம்" அப்பாவிற்கு பிடித்துவிடும் என்றே நான் நினைத்தேன். ஆனால், அச்சமயத்தில் அவருக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்டது என்பதை நான் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை. அந்த வயதில் அந்த "displacement"-ஐ ஏற்றுகொள்ளும் மன நிலையில் அவர் இல்லை. பதினாறு மாதங்கள் நான் 10/14

மட்டுமே கொழும்புவில் வசித்த கொண்டிருந்த பொழுது. அவரிடமிருந்து ஒரு நாள் காலையில் "போன் கால்." ஒரே வார்த்தைதான். "At this stage of my life, I should not be suffering this kind of displacement." படைப்பு உலகத்தில் உள்ளோருக்கு அவர்கள் வசிக்கின்ற இடம் மிகவும் முக்கியமானது. 11/14

மேற்கத்திய எழுத்தாளர்கள் எவ்வாறேல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பலமுறை என்னிடம் அவர் விவாதித்திருந்தாலும் இதைப்பற்றியெல்லாம் யோசித்து, முடிவு எடுக்கவேண்டிய சமயத்தில் நான் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. என்னுடைய குற்ற உணர்வு நான் இறக்கும் வரையில் இருக்கும். 12/14

அதிலிருந்து நான் மீள முடியாது. வயதான தாய், தந்தையோரை கவனித்து கொள்ளும் எவரும் நான் செய்த தவறை செய்து விடாதீர்கள் என்பதை மட்டுமே நான் கூறமுடியும்.
---------------------------------------------------------
படம்: ஜனவரி 26, 2014-அன்று அன்றைய முதல்வரான ஜெயலலிதாவிடமிருந்து .. 13/14

அப்பா திரு.வி.க. விருதை புனித ஜார்ஜ் கோட்டையில் பெற்ற பொழுது. அன்றைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், சுலோசனா சம்பத் மற்றும் பலருக்கு விருதுகளை வழங்கிய ஜெயலலிதா, அப்பாவிடம் மட்டும்தான் சிரிது நேரம் பேசினார்.
(இப்படத்தை வழங்கியதற்காக தமிழக அரசிற்கு நன்றி) 14/14

*அப்பாவிடம் மட்டும்தான் சிறிது நேரம் பேசினார்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling