Vignesh Anand Profile picture
Belongs to the Dravidian Stock || Views are strictly personal .

Sep 22, 2020, 7 tweets

ரயில், அஞ்சல் நிலையங்கள் பெயர்ப்பலகைகளில் மூன்றாவது வரிசையில் இருந்த இந்திய - முன்னுரிமை கொடுத்து மேலே முதல் வரிசையில் எழுத வேண்டும், என்பது அரசின் உத்தரவு
அதன் காரணமாக மேலே இருந்த தமிழ் மூன்றாவதாக கீழே எழுதப்பட்டது.
1/n

தடியைத் தட்டிய பெரியார், முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் இந்தி - தார் கொண்டு அழிக்கப்படும்.
மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நடுவண் அரசு அதை மாற்றும் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் நாள் தார் கொண்டு இந்தியை அழிக்கும் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து கொண்டால் வரவேற்போம் என்றார் பெரியார்.

துப்பாக்கியின் இரண்டு குழல்களும் வெடிக்கும் என்றார் அண்ணா . 1952 ஆகஸ்ட் 1 ஆம் நாள், அறிஞர் அண்ணா, ஈ.வெ கி.சம்பத் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி ஆகியோர், கோவை ரயில் சந்திப்பில் இந்திய அழித்தனர்.

திருச்சி ரயில் சந்திப்பில் ஒரு பக்கம் உள்ள பெயர்ப் பலகையில் இந்திய தார் கொண்டு அழித்து விட்டு பெரியார் சென்று விட்டார்.மறுபக்கம் உள்ள பெயர்ப் பலகையைத் தனயன் கலைஞருக்காக ஒதுக்கீடு செய்திருந்தார் அவர்.

மறுபக்கம் உள்ள பெயர்ப் பலகையில், இந்தியை அழித்து விட்டு தோழர்களுடன் ஊர்வலமாகச் செல்கிறார் கலைஞர், வழியில் பெரியார் கார்.

காரை நிறுத்திவிட்டு இறங்கிய பெரியார் கலைஞரை வாழ்த்துகிறார் இந்தக் காட்சியைக் கண்டவர்கள் இவர்கள் எதற்காக? இரண்டு கட்சிகளாக இருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்புகிறார்கள்.

கலைஞரின் முகத்திலும் புரிந்து கொள்ள முடியாத புன்னகை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling