திவாண்ணா Profile picture

Sep 23, 2020, 7 tweets

#தினசரி_பூஜை -27
பஞ்சாயதன பூஜையில் ஆவாஹனம் ஆரம்பிக்கும் முன்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கரஆகச்சத்வம் மஹாதேவ ஸர்வாவரணை ஸஹ

என வரவேற்பதுண்டு, பூஜை முடிந்த இந்த தருணத்தில்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ ஶங்கர பிரவிஶத்வம் மஹாதேவ ஸர்வைராவணை: ஸஹ
1/7

{ஹ்ருத தாமரையின் மத்தியில் உமையுடன் வீற்றிருக்கும் ஶங்கரா, நீ எல்லா ஆவரணங்களுடன் மீண்டு செல்வாயாக.}

என சொல்லி நிர்யாண முத்திரையால் பூக்களை எடுத்து நுகர்ந்து, ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டு கீழே போடவும். {முத்திரை தெரியாவிட்டால் விட்டுவிடலாம்}
ஶிவ பஞ்சாயதனம் ஆனால் அபிஷேக
2/7

தீர்த்தத்தை கொஞ்சம் உத்தரணியில் எடுத்து நந்திக்கும் அபிஷேகம் செய்து, ஶிவனுக்கு இட்ட சந்தனத்திலேயே கொஞ்சம் எடுத்து இவருக்கும் இட்டு, ஶிவனுக்கு சாற்றிய மலர்களில் ஒன்றையாவது இவருக்கு எடுத்து சாற்றுவார்கள். அவருக்கு நிவேதனம் செய்ததில் கொஞ்சத்தை இவருக்கும் நிவேதனம் செய்வர்.
3/7

ஸ்லோகம்:

பாண ராவண சண்டேஶ நந்தி ப்ருங்கி ரிடாதயமஹாதேவ ப்ரஸாதோயம் ஸர்வே க்ருண்ஹந்து ஶாம்பவா:என்று சைவர்களும்,
பலிர் விபீஷண: ஶம்பு: கபலோ நாரதேர்ஜுன: மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா: என்று வைணவர்களும் சொல்வர்.

வேத மந்திரம் : ஈசான ஸர்வ....
என்று சொல்லி
4/7

நந்தியின் பின் பாகத்தை தொட வேண்டும்.
நந்திக்கு நிவேதனம் செய்ததை அப்புறம் காகத்துக்கு போட்டு அந்த கிண்ணத்தை கழுவி ஈசான திசையில் ஊற்றுவர்.
அபிஷேக நீரை மந்திரம் சொல்லி பிறருக்கும் கொடுத்து தானும் அருந்தலாம்.
5/7

அகால ம்ருத்யு ஹரணம்ஸர்வ வ்யாதி நிவாரணம்ஸமஸ்த பாப க்ஷயகரம்ஶிவ / விஷ்ணு பாதோதகம் ஶுபம்
அனயா பூஜயா ஸபரிவார ஶாம்பபரமேஶ்வர / நாராயண ப்ரீயதாம் என்று சிறிது நீரை கீழே விடலாம்.
இத்துடன் பூஜை முடிகிறது.
6/7

அடுத்த பதிவில் எல்லோரும் எந்த தெய்வத்துக்கும் பூஜை செய்ய பொதுவான முறை, ஸ்லோகங்கள் வரும்!
7/7

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling