#தினசரி_பூஜை -28
எல்லோருக்கும் பொதுவான பூஜை :
முன்னே பஞ்சாயதன பூஜையை பார்த்தோம். இப்போது எல்லா தெய்வங்களுக்கும் யாரும் செய்யக்கூடிய பொதுவான பூஜை முறையை பார்க்கலாம்.
1.ஆசமனம். கேசவாய நமஹ, நாராயணாய நமஹ, மாதவாய நமஹ என்று மும்முறை நீரை உள்ளங்கையில் உளுந்து முழுகும் அளவு எடுத்து
1/8
அருந்தவும்.
மங்களாக்ஷதை + நீர் எடுத்துக்கொண்டு…
2.சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம்…ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும். உ-ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி
2/8
ப்ரஸாத3 சித்தயர்த்த2ம்) இஷ்ட காம்யார்த்த2 சித்யர்த்த2ம்…………. ஆராதனம் கரிஷ்யே. (முன்போல உ-ம்: ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ஆராதனம் கரிஷ்யே.) யாவத் சக்தி த்3யான ஆவாஹனாதி ஷோடோபசார பூஜாம் கரிஷ்யே.
அக்ஷதை நீரை கீழே விட்டுவிடவும்.
3.த்3யான ஆவாஹனம்:
ஆக3ச்ச2 தே3வ தே3வேஶ மர்த்யலோக
3/8
ஹிதேச்ச2யா
பூஜயாமி விதா4னேன ப்ரஸான்னஸுமுகோ2 ப4வ
4.ஆசனம்:
பாதா3ஸனம் குரு ப்ராஞ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம்
பூ4ஷிதம் விவிதை4ர் ரத்னை: குரு பாதுகாஸனம்
ஆஸனம் சமர்ப்பயாமி
5.பாத்யம்
க3ங்காதிப்4ய: ஸுதீர்தே2ப்4யோ மயா ப்ரார்த்த2னயா ஹ்ருதம்
தோயமே தத் ஸுக2 ஸ்பர்சம் பாத்3யார்த்த2ம்
4/8
ப்ரதி க்ருஹ்யதாம்.
6.அர்க்யம்
க3ந்தோ4த3கேன புஷ்பேண சந்த3னேன ஸுக3ந்தி4னா
அர்க்4யம் க்ருஹான தே3வேச ப4க்திம் மே அசலாம் குரு
7.ஆசமனம்:
கர்பூரோஶீர ஸுரபி4 சீதலம் விமலம் ஜலம்
க3ங்கா3யாஸ்து ஸமானீதம் க்ருஹாண ஆசமனீயகம்
8.ஸ்நாநம்
மந்தா3கின்யாஸ் ஸமானீதாம் ஹேமாம்போ4ருஹ வாஸிதம்
5/8
ஸ்னானாய தே மயா ப4க்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4
ஸ்நாநம் சமர்ப்பயாமி
இங்கே அபிஷேகம் செய்யலாம். சந்தன நீர், பால், தேன், தயிர், பழ ரசங்கள், பஞ்சகவ்யம் முதலானவை
படத்தை பூஜித்தால் இவற்றை ப்ரோக்ஷணம் செய்தால் போதுமானது.
6/8
9.ஆடை அணிவித்தல்:
வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலம் ச தேவானாமபி துர்லப4ம்
க்ருஹாண த்வம் ப்ரபோ4 தேவ ப்ரஸன்னோ ப4வ ஸர்வதா3
வஸ்த்ரம் சமர்ப்பயாமி
10.பூணூல் அணிவித்தல்
யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரம்ஹணா நிர்மிதம் புரா
ஆயுஷ்யம் தே3வ வர்சஸ்யம் உபவீதம் க்3ருஹாண போ4
யக்ஞோபவீதம் சமர்ப்பயாமி
7/8
11. சந்தனம் இடுதல்:
ஶ்ரீக2ண்ட4ம் சந்தனம் தி3வ்யம் க3ந்தா4ட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரச்ரேஷ்ட மத்3த4த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
கந்தாந்தாரயாமி
8/8
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
