டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்

Sep 25, 2020, 11 tweets

1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும்

2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு

3. யுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர்.

ஆனால் இந்த நுழைவுத் தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி

4. மட்டுமே பள்ளியில் சேர்ந்தாள். அச்சிறுமியின் தாய், தன் மகள் படித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 1960ல் நவம்பர் 14 அன்று பள்ளிக்கு நான்கு காவல்துறையினரின் உதவியோடு, நிமிர்ந்த தலையோடு வகுப்புக்குச் சென்றாள் அச்சிறுமி. அவள் பள்ளிக்கு சென்ற முதல்நாளே நூற்றுக்கணக்கான

5. வெள்ளையர்கள் பள்ளியின் வாசலில் அச்சிறுமிக்கு ஏதிராக முழுக்கமிட்டு எதிர்த்தனர்.

அச்சிறுமியோ, அது குறித்து அச்சமோ கவலையோ கொள்ளாமல் தன் தாயின் வாக்கின்படி நிமிர்ந்த தலையோடு பள்ளிக்கு சென்றாள். ஒரு ஆசிரியர் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சிறுமிக்கு பாடம் எடுக்க மறுத்தனர்.

6. எதிர்ப்பைக் காட்டும் வகையில் வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினார்கள். அச்சிறுமி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தாள். ஆனால், சில நாட்களிலேயே வேறு வழியின்றி பிற பெற்றோரும் ஒவ்வொருவராக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தனர்.

7. பலரின் மிரட்டலுக்கு பயப்படாமல் ஐந்தே வயதான அச்சிறுமி பள்ளிக்கு தினமும் சென்று வந்தாள். இதன் காரணமாக சிறுமியின் தந்தை அவர் பணி செய்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்கள் குடும்பத்தினருக்கான பொருட்கள் தருவது கூட கடைகளில் நிறுத்தப்பட்டன. பள்ளிக்கு சீருடை வாங்கக்

8. கூட அவளுக்கு வசதியில்லை. ஆனாலும், கல்விதான் தன்னை விடுவிக்கும் என்ற சிந்தனையை அச்சிறுமியின் மனதில் ஆழமாக பதியவைத்தார் அவரது தாய்.

ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் கல்வி கற்றே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் அச்சிறுமி. அப்படி உறுதியுடன் இருந்து கல்வி பயின்றதுதான் அவளின்

9. சாதனை. எந்த பள்ளி அவரை வேண்டாம் என்று ஒதுக்கியதோ, அந்த பள்ளியிலேயே அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பெயர்
ரூபி பிரிட்ஜஸ்.

அவள் இப்போது ஒரு இனத்தின் அடையாளம்.

10. "எவ்வளவு மோசமான சூழலிலும் ரூபி அழுது நாங்கள் பார்த்ததில்லை. எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்து வருவாள்" என்கிறார் அவளை அழைத்துச் சென்ற மார்ஷல் சார்லஸ் பர்க்ஸ்.

வரலாற்றை படைப்பவர்கள் அப்படித்தானே இருப்பார்கள்.! 😍

பிறகு:

கட்டுரை வாட்சப்பில் வந்தது. உண்மைதானா என்று தேடும்போது இவர் வாழ்க்கை திரைப்படமாகவும் வந்திருப்பது தெரிந்தது. விருப்பம் இருப்பவர்கள் பார்க்கலாம்.!

😍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling