நிவா 🦋 Profile picture
அன்பும் அறமும், தமிழும் சுவையும், எங்கும் எப்பொழுதும்..! ....but, Master of None

Sep 25, 2020, 16 tweets

#கொடுமை 🤔

இதைப் பார்த்தவுடனேயே சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை செய்தியாக படித்த ஒரு சமூக அவலம் என் மனதுக்குள் உடனே வந்தது..!😏

அதன் சுருக்கம்

மத்திய பிரதேசம் மற்றும் அந்த மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் உள்ள

ஒரு வினோத பழக்கம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது..!

அதாவது ஒருவருக்கு கல்யாணம் ஆகல அல்லது பெண் கிடைக்கல அப்படின்னா ரொம்ப எல்லாம் பெருசா வருத்தப்பட வேண்டாம்.
இவங்கள அணுகினால் போதும் அவருக்கு ஒரு பெண் மனைவியாக வாடகைக்கு கிடைப்பாள்.

இதை ஏற்பாடு செய்வதற்கென்று பிரத்யேகமான ஆட்கள் அங்கு உள்ளார்கள்.
அதுல சில கண்டீசன்ஸ் உண்டு.!
(எதுக்கும் Quoted Tweet ஐ ஒரு முறை முழுமையாக படிச்சுட்டு வந்துருங்க..!)😂

1.ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவளை மனைவி மாதிரி வைத்தக்கொள்வது

2.இதை செய்து கொடுப்பதற்கென்றே

தனியாக சில Broker கள் இருப்பார்கள்.

3. இந்த வாடகை மனைவி முறையில் அவங்கு பெண்களில் அவருக்கு பிடித்த பெண்ணை அவர் மனைவியாக தேர்ந்தெடுத்துக்கலாம்..!

4.தேர்தெடுக்கும் பெண் மனைவியாக எத்தனை ஆண்டு காலம் இருக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்து கொள்ளலாம்.

5.தேர்ந்தெடுக்கபடும் பெண்ணுக்கான மாதவாடகை மட்டும் 500 ல இருந்து துவங்குவது..

6. இது எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது பெண்களை பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடும்.

7. இதற்கென எளிய முறையில் ஒப்பந்தங்களும் போடப்படுகிறது. இந்த அவலத்தில் பெண் எத்தனை காலம், உடன் இருக்க வேண்டும்,

என்பதை அந்த ஆணே தீர்மானிக்கின்றான்..!

8. ஒப்பந்த காலம் முடிந்த பிறகு வேறு ஒரு பெண்ணை மனைவியாக தேர்ந்தெடுத்து கொள்ளை முடியும்.
அல்லது அவர் விருப்பப்பட்டால் அந்தப் பெண்ணையே நிஜ மனைவியாகவும் ஆக்கி கொள்ள முடியும்.

9. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்த

பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆன திருமணம் சட்ட பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது..!

10.இந்த வழக்கம் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மட்டுமல்ல மத்திய பிரதேசத்தை ஒட்டி உள்ள குஜராத்தின் சில பகுதிகளிலும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது..!

பெரும்பாலும் வறுமைச் சூழல் காரணமாக பெண்கள் இதற்கு உடன்படுகிறார்கள். மேலும் ஒரு பெண்ணுடன் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வாழும் பொழுது அந்த ஆண் அந்தப் பெண்ணை பெரும்பாலும் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். இதற்காக ஒரு சிறு தொகை அந்த பெண்ணின் வீட்டிற்கு கொடுக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக பெரும்பாலும் யாரும் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் தெரிவிக்காததால் சட்டபூர்வமான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை..!

ஆதாரம்: newsable.asianetnews.com/india/this-ind…

சரி நம்ம கதைக்கு வருவோம்.!
Monthly min 14,000 வச்சிகிட்டாலே 18% GST யோட சேர்த்து மாதம் 16520 கட்ட வேண்டி இருக்கும். ஏன்னா இது EMI கிடையாது, நம்ம Postpaid Bill மாதிரிதான் இதுவும். எனவே GST கண்டிப்பா இருக்கும்..!
அப்போ 48 Months னா 16520 x 48 ன்னு வச்சா 7.92 L (approx 8 L) வருது🙄

இந்த நாலு வருஷம் நீங்க கட்டின பணத்திலேயே காருக்கான விலை Cover ஆகியிருக்கும். ஒரு சாதாரண Middle Class , வர்க்கத்திற்கு இது பெரிய தொகை.
மேலும் அவர்களாலும் நீங்கள் நான்கு வருடம் பயன்படுத்திய காரை மீண்டும் உங்களிடம் இருந்து திரும்பப் பெற்று அதை சரி செய்து

வேறு ஒரு வகையில் விற்பனை செய்வது என்பது மிகப்பெரிய சிரமமான வேலை. மேலும் அதில் அவர்களுக்கு பெரிதாக லாபமும் இருக்காது..!

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளத்தான் Car நிறுவனங்கள் முயற்சி செய்யும்..!
எனவே Tenure முடியும் தருவாயில் உங்களுக்கான Offer தருவார்கள்.

அதாவது ஒரு குறைந்தபட்ச தொகையை கட்டினால் வண்டியை முழுவதுமாக உங்கள் பெயருக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்பார்கள்.நாமும் இவ்வளோ கட்டியாச்சு இன்னும் கொஞ்சம்தானே.., அதை கட்டின வண்டி நமக்குச் சொந்தமாகும் என்று சொல்லிவிட்டு அந்த தொகையை கட்டி வண்டியை சொந்தமாகக்க தான்
முயற்சி பண்ணுவோம்.!

அதுவுமில்லாமல் நாலு வருஷம் நம்மளே Own Hand ஆ பயன்படுத்தின வண்டி என்பதால் நமக்கும் அது ரொம்ப கரெக்டா Set ஆகி இருக்கும்..!😂

(என் அனுமானம் இந்த குறைந்தபட்ச தொகையானது 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை Car Models க்கு ஏற்ப இருக்க வாய்ப்புண்டு).

புது கார், Free இன்ஷுரன்ஸ், ஒரு குறிப்பிட்ட காலம் Free Maintenance, OnRoad Breakdown Maintenance என நம்மை உள்ளே இழுக்கவே இந்த சலுகை அறிவிப்புகள் எல்லாம்..!😂

மேலும் இந்த திட்டம் வெற்றியடைய மேலும் பல பல சலுகைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவங்க சொல்ற இந்த திட்டத்தில் மாசம் 14,000 கட்டுனா ஒரு 20லி, பெட்ரொல் இலவசமாக தந்தால் நமக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும்.!😂😂
என்ன நண்பா சரியா@Karthicktamil86
😊
@sarxsk @aram_Gj @gcybertron

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling