SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi

Sep 25, 2020, 6 tweets

#SPbalasubramanyam
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,

35000 பாடல்கள் பாடியிருக்கார்”
அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,
“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.

இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?

Did you really sung 30 thousand songs so far? என்றார். நான் பதிலுக்கு No Sir., My President was wrong on that fact. I actually cross 35 thousand last week என்றேன். அவர் திகைத்தபடி, என்னை இறுகப் பற்றி, oh god! I have never heard about a singer sung more than 1000 songs! you are

just impossible என்று சொல்லிவிட்டு, எதையோ முணுமுணுத்தபடியே விலகிச் சென்றார். இப்போது நான் 40 ஆயிரம் பாடல்களை பாடி முடித்ததை இங்கிருந்தே அமெரிக்காவுக்கு கேட்கும்படி உரக்க கத்த வேண்டும் போலிருக்கு” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதியை விடுங்க! நமக்கு அடுத்த தலைமுறையே இப்படியொரு பாடகர்

இருந்தார்! அவர் 11 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடினார். ஒரே நாளில் 7 மொழிகளில் 15 பாடல்களும், ஒரே நாளில் 22 பாடல்களும் பாடினார் என படித்தால் நம்பவா போகிறார்கள்? இவைகளை கேட்டு, பார்த்து வாழ்ந்த நமது வாழ்க்கை அல்லவா முழுமை பெற்ற வாழ்வு! 🙏
#SPBalasubrahmanyam

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling