Yuvaraj Soundararajan Profile picture
【Humans First, 🐶 later】 【Banking 💴】【 Nature ❤️】 【Road Safety🚸】 #CricketAfghan

Sep 26, 2020, 11 tweets

சென்ற வார தொடர்ச்சி
1.எதற்கு கடன் தேவை?
2.வாங்கிய கடனை எப்படி அடைப்பேன்?

இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது?

நீங்கள் சில ஆண்டுகளாக தொழில் செய்பவர்களாக இருந்தால் கடந்த 3 ஆண்டுகள் பேலன்ஷீட் வைத்து உங்கள் தொழிலின் நிதிநிலையைப் பற்றி வங்கி அறிந்துகொள்ளும்

பேலன்ஷீட் இல் என்ன பார்ப்பார்கள்?

1. உங்கள் விற்பனை வருடாவருடம் வளர்க்கிறதா?
(விற்பனை தேய்ந்து கொண்டே போனால் கடன் பெறும் வாய்ப்பு குறைவு)

2.லாபம் ஈட்டுகிறதா?
(நட்டத்தில் உள்ள தொழிலுக்கு கடன் கிடையாது)

3.முறையாக அரசுக்கு வருமானவரி மற்றும் PF/ESI/GST செலுத்தப்படுகிறதா?

(அரசுக்கு வரி பாக்கி இருந்தால் வாய்ப்பு குறைவு)

4. இதுவரை வாங்கிய கடன் (தனிநபர் கடன் உட்பட) முறையாக திருப்பி செலுத்தப்பட்டதா?

(இல்லை என்றால் கடன் கிடையாது)

5. உங்கள் முதலீடு எவ்வுளவு?

(உங்கள் முதலீடு 1ரூபாய் என்றால் மற்ற எல்லா கடன்களும் 3 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்)

6.உங்கள் liquidity position (உங்களுக்கு வர வேண்டியது vs. நீங்கள் தர வேண்டியது) எப்படி உள்ளது?

(சாதகமாக இல்லை என்றால் வாய்ப்பு குறைவு)

7.உங்களின் வசூல் நிலை, ஸ்டாக் தேங்கி இருக்கும் காலம் எவ்வுளவு?

(சாதகமாக இல்லை என்றால் வாய்ப்பு குறைவு)

8. வங்கியின் தொழில்கடன் மூலம் தொழில்சாரா முதலீடு செய்து உள்ளீரா?

(ஆம் என்றால் வாய்ப்பு குறைவு)

9. உங்கள் முதலீட்டை பகுதியாக வெளியே எடுத்து உள்ளீரா?

(ஆம் என்றால் வாய்ப்பு குறைவு)

மேற்கொண்டு தகவல்களை உங்கள் பேலன்ஷீட் தந்துவிடும். உங்கள் cashflow பற்றியும் வங்கி அறிந்து கொள்ளும்

அடுத்து உங்கள் தனிநபர் சிபில் ஸ்கோர் பார்க்கப்படும். 760 மேல் இருத்தல் நலம். 700 கீழ் வாய்ப்பு குறைவு. ஏதுனும் பாதகமான விஷயம் இருந்தால் (Npa / writeoff) நீங்கள் முறையாக விளக்க வேண்டும். இல்லை என்றால் வாய்ப்பு குறைவு.

அடுத்து வங்கி அதிகாரி உங்கள் தொழிற்கூடத்தை பார்வையிட்டு தொழில் நடக்கும் விதம், இருக்கும் வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வார். அவரின் சந்தேகங்களை நீங்கள் தீர்க்க வேண்டும். உங்கள் அனுபவத்தை வங்கி அதிகாரியும் தயக்கமின்றி பகிருங்கள்.

அடுத்து அடமானம் / பிணை.

நீங்கள் தரும் சொத்து குறைந்தது கடனை 100% கவர் செய்ய வேண்டும். இது கட்டாயமில்லை. தோராயமாக மட்டுமே. Risk குறைவு என்றால் 100ரூபாய் பிணைக்கு 150 ரூபாய் கூட வங்கி தரலாம்.

விவசாய நிலமாக வகைப்படுத்தப்பட்ட சொத்தை தொழில் கடனுக்கு அடமானம் வைக்க முடியாது.

நகர்புறத்தில் கட்டிடமாக இருத்தல் நல்லது. காலி நிலம் / ப்ளாட் என்றால் குறைவாக கடன் கிடைக்கும்.

அடமானம் வைக்கப்படும் சொத்தின் marketability (எளிதில் விற்குமா என) வங்கி பார்க்கும்

சொத்து ஆவணங்களை பார்த்து வங்கியின் வக்கீல் அது அடமானம் செய்ய உகந்தது என சான்று அளிக்க வேண்டும்.

இதெல்லாம் நல்லபடியாக முடிந்தால் கடன் எளிதில் கிடைக்கும்.

அதெல்லாம் சரி, நான் புதுசா தொழில் ஆரம்பிக்கப் போறேன். Project Report இருக்கும். வங்கி கடன் தருமா?

தரும் 👍👍👍.

அடுத்த வாரம் விரிவாக பார்க்கலாம்.

கூடுதல் தகவல்: தனிநபர் போலவே தொழில் நிறுவனத்திற்கும் சிபில் ஸ்கோர் ரேங்க் முறையில் உண்டு.

CMR (cibil msme rank) 1முதல் 10 வரை வழங்கப்படும். 1 என்றால் ரிஸ்க் மிக குறைவாகவும், 10 என்றால் ரிஸ்க் மிக அதிகம் எனவும் அறிக.

transunioncibil.com/press-release/…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling