அதிக மாதம் அல்லது புருஷோத்தம மாதம் (17-09-2020 முதல் 16-10-2020 வரை). இவ்வாறான அதிக மாதத்தில் சுப காரியங்கள் செய்யும் வழக்கம் கிடையாது. புருஷோத்தமன் என்றால் ஒருவரே, அவரே நம் கிருஷ்ணன். அதிக மாதம் என்றால் என்ன? நம் பஞ்சாங்கம் சந்திரனின் கதியை அடிப்படையாகக் கொண்டது. வருடத்தில் ஒரு
மாதம் #அதிகமாதம் என்று பஞ்சாங்கம் கணிப்பவர்கள் தீர்மானித்து அதை அதிக மாதம், பீடை மாதம் என்று சொன்னார்கள். ஏன் இவ்வாறு இந்த மாதத்தை ஒதுக்கி வைக்கிறார்கள், நாம் அதை எடுத்து அதற்கு தனிப்பெருமை கொடுப்போம் என்று எற்றுக் கொண்டுவிட்டார் கிருஷ்ணன். பூமியை சுற்ற சந்திரன் 27.3 நாள் எடுத்து
கொள்கிறது. சூரியனைச் சுற்ற 365.2422 days (பூமியின் சுற்று வேகம் 29.79 km ஒரு வினாடிக்கு). எனவே பூமியும் சந்திரனும் 27.3 நாள் நகர்வதால் சூரியனை சுற்றுவதில் 1/12 மாசம் என்று ஆகிறது. அதாவது ஒரு பௌர்ணமியிலிருந்து மற்றொரு பௌர்ணமி வரை.சந்திரன் இன்னும் 2. 2 நாள் சுற்றினால் தான் அது
முழுமை பெரும். இது பூமி சூரியனை கொஞ்சம் வளைந்து சுற்றுவதால் ஏற்படும் வித்யாசம். சந்திரனோ தனது சுற்றை 27.3 நாளில் முடிக்கிறது. ஆனால் பூமி சூரிய கதியை சார்ந்து பௌர்ணமியாக சந்திரனுக்கு 29.531 நாள் தேவை. ஒரு சந்திர வருஷ கணக்கில் 29.531 நாள் சந்திர மாதங்கள் = 354.372 நாட்கள் ஒரு
சந்திர வருஷத்தில். நமது கணக்கில் (365.2422 - 354.372) =10.87 நாள் வித்தியாசம் வருகிறது. வசிஷ்ட சித்தாந்தம் ஒவ்வொரு 32 மாதம் 16நாள் 8 கடிக்கும் (1 கடி: 24 நிமிஷம்) ஒருமுறை அதிக மாசம் இவ்வாறு ஏற்படுகிறது. எளிமையாக சொன்னால் நமது சந்திரமான வருஷத்தில் ஒரு பிரதமை முதல் அடுத்த
அமாவாசை வரை ஒரு சந்திரமான மாதம். ஒரு சூரிய வருடத்தில் 13 அமாவாசை வந்தால் சந்திரமான மாசங்கள் 13 ஆகிவிடாதா? எந்த மாசத்தில் 2 அமாவாசை வருகிறதோ அந்த முதல் அமாவாசை வரும் மாதத்திற்கு அடுத்த மாதம் ''அதிக'' மாதம்! இந்த வருடம் ஆனி மாதத்தில் 2 அமாவாசை. முதலாவது அமாவாசைக்கு அப்புறம்
பிரதமையிலிருந்து ஆரம்பிக்கும் மாதம் ஆஷாட அதிக மாதம். இந்த மாதத்தில் கிருஷ்ணன் தனது கருணையை, அனுக்ரகத்தை அதிகரித்து அளிக்கிறார் என்று நம்பிக்கை. எப்படி அஷ்டமி, நவமி போன்றவை லௌகீகத்தில் ஏற்றவை அல்ல என்று புறக்கணிக்கப்பட்டாலும் இராமனும் கிருஷ்ணனும் அவற்றை ஏற்று புனித நாளாகச்
செய்தார்களோ அதுபோல் ஒரு மாதத்தை பீடை மாதம் என்று வைக்கப்பட்டது. அதை கிருஷ்ணன் தனதாக ஏற்றுக்கொண்டு அதை மிகச்சிறந்த மாதமாக செய்துவிட்டான். புருஷோத்தம மாதத்திற்கு ஒரு முன்னோடி மார்கழியே. பத்மா புராணமும் ஸ்கந்த புராணமும் இந்த புருஷோத்தம மாதத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
1) இந்த மாதத்தில் என் ஆசிர்வாதம் பூரண சக்தியோடு இதை அனுஷ்டிக்கிற பக்தனுக்கு உண்டு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். விரதமிருப்பவனின் சகல பாபங்களும் தீரும். பரிசுத்த பக்திக்கு இந்த மாதத்தில் அனுஷ்டிக்கும் விரதமே மூலம். வேதத்தில் சொன்ன சத் காரியங்களின் பலனை விட புருஷோத்தம மாத அனுஷ்டானம்
மேன்மையானது . அனுஷ்டிப்பவனுக்கு என் கோ லோகத்தில் ஒரு இடம் நிச்சயம்.
2) துர்வாசர், புருஷோத்தம மாதத்தில் எங்காவது பெரு புனித நதியில் நீராடு. கிருஷ்ண நாமாவளி தெரிந்ததை சொல்லி ஏதேனும் ஒரு சிறிய தானம் செய். பிறகு பார் உன் பாபங்கள் மறைவதை என்கிறார்.
3) ஒருபுருஷோத்தம மாத விரதம் 1000
கார்த்திகை விரதத்தைவிட மேலானது.
4)வால்மீகி: புருஷோத்தம மாத விரதம் மேற்கோள். 100 அஸ்வமேத யாகம் செய்த பலன் கைமேல் பெறுவாய். கோலோக ப்ரிந்தாவனம் அடைவாய். புருஷோத்தம விரதம் இருப்பவனின் உடலில் தான் சகல புண்ய க்ஷேத்ரங்களும் குடி கொண்டுள்ளது என்கிறார்.
5) நைமிசாரண்யம் ரிஷிகள்:
''புருஷோத்தம மாதம் ஒரு கற்பக வ்ருட்சம். இந்த மாதத்தில் பக்தன் கேட்டதெல்லாம் பெருகிறான்!''
6) ஆன்மீகத்தில் ஒருவன் முன்னேற இந்த மாதம் உகந்தது. கிருஷ்ணன் எல்லா அபராதங்களையும் புறக்கணித்துவிட்டார்.
இந்த புருஷோத்தம விரதம் எப்படி செய்வது?
1) சாத்வீகமாக இருக்கவேண்டும். பிரம்மச்சர்யம்
அனுஷ்டிக்க வேண்டும். தரையில் படுக்க முடிந்தால் படுக்கலாம்.
2) சூர்யோதயத்துக்கு முன் குளிக்வேண்டும். முடிந்தால் எங்காவது ஒரு புனித க்ஷேத்ரத்தில், குறைந்தது இந்த மாதத்தில் 3 நாளாவது தங்குதல்.
3) கிருஷ்ணனை நினைத்து அவன் சேஷ்டிதங்களை மனதில் அனுபவிகக்கவேண்டும், கேட்கவேண்டும். அவன்
நாமங்களை சொல்லி, ஹரே கிருஷ்ணா மூல மந்திரமும் சொல்ல வேண்டும். (24, 32, 64 என்ற எண்ணிக்கையில்).
4) ராதா கிருஷ்ணா படத்துக்கு சிறிய நெய் தீபம். ரோஜா, தாமரை மலர், துளசி மாலை சூட்டலாம்.
5) தினமும் ஸ்ரீமத் பாகவதம் சிறிது பாராயணம், படிக்கலாம். (10வது காண்டம், 14வது அத்தியாயம்,
பிரம்மா கிருஷ்ணனை பிரார்த்திப்பது விசேஷமானது). பகவத் கீதையில் 15வது அத்தியாயம்.
6) பூஜை அறையில் இருக்கும் புத்தகங்களில் ஸ்ரீ ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ நந்தனந்தனாஷ்டகம், கண்ணில் தென்பட்டால் நீங்கள் பாக்ய சாலிகள். அவற்றை படிக்கலாம். ராதாகிருஷ்ண பஜனையோ பிரார்த்தனையோ மிக விசேஷம்.
7) ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால் இந்த மாதம் எல்லோரிடமும் அமைதியாக இருப்பேன். பொய் பேசமாட்டேன் என்று உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8) எவர் சில்வர் தட்டு இல்லாமல் இந்த ஒரு மாதம் மட்டும் வாழை இலையில் சாப்பிடுவோம். (முடிந்தால் தரையில் அமர்ந்து).
9) பசுவுக்கு கீரையாவது தானம்
கொடுப்போம். முடிந்தால் பிராமணர்களுக்கு கொஞ்சம் தக்ஷிணை.
10) இந்த ஒரு மாதம் முடி திருத்தும் நிலையம் அணுகாமல் வேறுபக்கம் திரும்பி நடப்போம். நகத்தை வெட்டக்கூடாது.
11) கடுகு எண்ணெய் வேண்டாம்.
12) ஒரு வேளை ஆகாரம். மதியமோ சூரியன் மறைந்த பிறகோ பால் பழங்கள், சாதுர்மாச்யத்தில்
உபயோகிக்கும் காய் கறிகள் மட்டும் உபயோகிக்கலாம்.
13) கௌண்டின்ய முனி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச் சொல்வோமே:
கோவர்தன தரம் வந்தே,
கோபாலம் கோப ரூபினம்
கோகுலோத்சவம் ஈசானம்
கோவிந்தம் கோபிகா ப்ரியம்
கிருஷ்ணனை நினைக்க இதை பயன்படுத்திக் கொள்வோம் .
தகவல் நன்றி
sreekrishnarpanamsevasociety
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
