Vignesh Anand Profile picture
Belongs to the Dravidian Stock || Views are strictly personal .

Sep 29, 2020, 8 tweets

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் மட்டுமல்ல கலைஞர் . இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய நினைத்த போது அதை போராடி மீட்டவர் கலைஞர் .

சட்டமன்ற விவாதம் : 06-05-1998 அன்று கலைஞர் பேசியது. 1/n

டெல்லியில் மாநாட்டு நிரலில் உள்ள பல பிரச்சினைகளில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது. உதாரணத்திற்கு மின் திட்டங்களைச் சீர்படுத்துதல், நவீனப்படுத்துதல், கணிசமான அளவுக்கு மின் இழப்புகளைத் தவிர்த்தல், மின் உற்பத்திக்கு ஊக்கம் அளித்தல் போன்றவைகளில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் சில பிரச்சினைகளில் எங்களுக்கு மாறுபாடு உண்டு. ஒன்று, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் விவசாயி களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை இரத்து செய்ய முடியாது. விவசாயப் பம்பு செட்டுக்குக் கட்டணம் விதிப்பதை எங்கள் மக்கள் எதிர்க்கிறார்கள்.

1972ஆம் ஆண்டு விவசாய பம்பு செட்டுக்குக் கட்டணம் யூனிட்டுக்கு 11 காசு என்று இருந் கதை ஒரு காசு அதிகமாக உயர்த்தி, 12 காசாக ஆக்கியபோது அந்த ஒரு காசு உயர்த்தியதைக்கூட விவசாயிகள் ஏற்கவில்லை எதிர்த்தார்கள். போராடினார்கள்.

அதற்குப் பின்னர் எல்லா விவசாய பம்புசெட்டுகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இலவச மின்சாரம் அளிப்பதால் உணவு உற்பத்தி அதிகரித்தது. இலவச மின்சாரம் அளிப்பதைத் திரும்பப் பெற்றால் உணவு உற்பத்தியும் பாதிக்கும், சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் ஏற்படும் எனவே,

விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்க இயலாது.

இதுபோன்ற பிரச்சினைகளில் மாநில அரசுகளே சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ள அனுமதியுங்கள், இந்தப் பிரச்சினைகளை மத்திய அரசின் அரிய ஆலோசனைகளை வரவேற்கிறோம் அலோசனைகளை வழங்குங்கள், ஆணையிடாதீர்கள் . மாநில சுயாட்சியினுடைய தத்துவமே அதிலேதான் அடங்கியிருக்கிறது.

இதில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது .
மத்திய அரசு கூட்டணியில் இருந்தாலும் நீட் / இலவச மின்சாரம் ரத்து போன்ற மக்களுக்கு எதிரான எது இருந்தாலும் தமிழ்நாட்டை காத்தவர் கலைஞர் . அதனால் கலைஞர் சொன்னார் “உரிமைக்கு குரல் கொடுப்போம் ; உறவுக்கு கை கொடுப்போம் “ என்று .

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling