டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்கு தெரியல, எதோ எனக்கு தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க
புதுசா ஜெயிச்சு வர்ற MPக தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும்,
1/N
பழைய தோத்த MPக வீட்ட காலி பன்ன நேரம் எடுத்துக்குவாங்க, அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க.... மக்கள் சேவை செய்ய போரவங்கள
2/N
கண்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.
நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு,
3/N
ஹோட்டல்ல காலி பண்ணுங்கன்னு கவர்மன்ட் சொன்னா, வீட்ல வாஸ்து சரி இல்ல, அத மாத்தனும், இத மாத்தனும்னு சொல்லிட்டு ஹோட்டல்லயே மாச கனக்குல டேரா போட்டிருவாங்க....இப்படி 2014 வந்த ஹோட்டல் பில் மட்டும் 30 கோடிக்கும் மேல.
இந்த தடவ கவர்மென்ட் ஒரு பயலுக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் கிடையாது..
5/N
இஷ்டம்னா பார்லிமென்ட் ஹாஸ்டல்ல தங்கிகுங்க, இல்லேனா எந்த ஸ்டேட்ல இருந்து ஜெய்ச்சு வர்ரீங்களோ அந்த ஸ்டேட் ஹவுஸ் ஹாஸ்டல்ல தங்கிட்டு சத்தம் இல்லாம இருக்கனும்னு சொல்லீடிச்சு...மக்கள் பணம் சும்மா ஒரு 50 கோடி மிச்சம்.
6/N
இதை எல்லாம் இங்க இருக்கற எந்த ஊடகமும் சொல்லாது, மத்தியில ஆட்சில இருக்கற கட்சிகாரனும் சொல்லறது இல்ல... எப்படியா மக்களுக்கு தெரியும்.
N/N
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
