Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

Sep 30, 2020, 20 tweets

வணக்கம்.
ஈழத்தில் புலிகளின் முதல் வானூர்தியும்,உலகத் தமிழர்களின் முதல் வானூர்தியும் உருவான வரலாறு!மீண்டு(ம்)வரலாற்றை உண்மையாக்க இளைய தலைமுறையினரே நம் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டிய காலகட்டம் மீண்டு(ம்)வந்திருக்கிறது.
பதிவில்,87-ல் புலிகளால் பறந்த விமானம்.
wix.to/yUA1BvM

ஈழத்தில் புலிகளின்-2/20
உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி!இருப்பு எண்ணிகை - 2
இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது.

ஈழத்தில் புலிகளின்-3/20
இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தியாகும். மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி...

ஈழத்தில் புலிகளின்-4/20
போன்றுள்ளது.இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும்(indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஈழத்தில் புலிகளின்-5/20
உருவான வரலாறு:
1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப்...

ஈழத்தில் புலிகளின்-6/20
மிகுதிப் பகுதியெல்லாம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
(ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு

ஈழத்தில் புலிகளின்-7/20
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த ..

ஈழத்தில் புலிகளின்-8/20
உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) ..

ஈழத்தில் புலிகளின்-9/20
எல்லாம் இங்கு தயாரிக்கப்படும்.அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்..

ஈழத்தில் புலிகளின்-10/10
அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள்.

ஈழத்தில் புலிகளின்-11/20
அந்த தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்புகுட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக

ஈழத்தில் புலிகளின்-12/20
இருந்தார்.ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை..

ஈழத்தில் புலிகளின்-13/20
பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி..

ஈழத்தில் புலிகளின்-14/20
இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில்..

ஈழத்தில் புலிகளின்-15/20
விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை.

ஈழத்தில் புலிகளின்-16/20
இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு..

ஈழத்தில் புலிகளின்-17/20
இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக..

ஈழத்தில் புலிகளின்-18/20
ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி..

ஈழத்தில் புலிகளின்-19/20
பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும்.

ஈழத்தில் புலிகளின்-20/20

வரலாறு!
புலிகளின் முயற்சி!
இதுவே,உலகம் தமிழர்களை திரும்பி பார்க்க வைத்தது....

wix.to/yUA1BvM

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling