ரோஸ் அக்கா Profile picture
Mum of 2, வல்வெட்டித்துறையில் பிறந்து சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, MH First Aider, MENSAN, Londoner, கமல் ரசிகை,Entrepreneur, ஆட்டு பண்ணை முதலாளி,Proud Lion

Sep 30, 2020, 6 tweets

எப்படியெல்லாம் தமிழை சமஸ்கிருதத்துக்குமாற்றி எம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தமிழ் வாழ்க!

குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
#அறிவோம்தமிழ்

வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி

வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
#அறிவோம்தமிழ்

திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
#அறிவோம்தமிழ்

அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
அவையை சபையாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
இசையை சங்கீதமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
ஆடலை நடனமாக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
அழகை சுந்தராக்கி
முகத்தை வதனமாக்கி
முடியை கேசமாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
#அறிவோம்தமிழ்

உண்மையை சத்தியமாக்கி
நல்லதை புண்ணியமாக்கி
கெட்டதை பாவமாக்கி
கொடையை தர்மமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
நஞ்சை விஷமாக்கி
சான்றை ஆதாரமாக்கி
பெரியதை மஹாவாக்கி

செருப்பை பாதரட்ஷையாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
உலகத்தை லோகமாக்கி
#அறிவோம்தமிழ்

எப்படி எப்படி எல்லாம் அழகு தமிழ்ச் சொற்களை அழிக்க முயன்றிருக்கிறார்கள்!

விழித்திடு தமிழா...

#அறிவோம்தமிழ்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling