Kalaivani Profile picture
யாதும் ஊரே யாவரும் கேளிர் | Retweets are not Endorsements 👍 | 👉 #இப்பெல்லாம்_யாருங்க_சாதி_பாக்குறா 👎

Sep 30, 2020, 7 tweets

உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.
கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

#JusticeForManishaValmiki

தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள்.

உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.

தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்,

#JusticeForManishaValmiki

யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.

#JusticeForManishaValmiki

முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு.
கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால்,

#JusticeForManishaValmiki

முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.

இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட்பார வாழ்க்கை நடத்துபவர்கள்.

#JusticeForManishaValmiki

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக,

#JusticeForManishaValmiki

ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் அதை இடித்துத் தள்ளிய செய்தி வந்தது.

தமிழகத்தில் பெரியார் என்ன செய்தார் என்பதை இதிலிருந்து பொருத்திப் பார்க்கலாம்.

படத்தில் இருப்பது தான் முசாகர் வீடுகள்

எப்போதோ இருந்ததல்ல.
இப்போது இருப்பது.
SuryaXavier

#JusticeForManishaValmiki

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling