Kalai Vani Profile picture
யாதும் ஊரே யாவரும் கேளிர் | Retweet is are not Endorsement 👍 | 👉 #இப்பெல்லாம்_யாருங்க_சாதி_பாக்குறா 👎
Sep 30, 2020 7 tweets 3 min read
உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.
கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

#JusticeForManishaValmiki Image தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள்.

உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.

தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்,

#JusticeForManishaValmiki
Sep 29, 2020 12 tweets 4 min read
செப்டம்பர் 29 தந்தை என்.சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் “தலைவர்” என அழைக்கப்பட்ட தந்தை என்.சிவராஜ் அவர்கள், சென்னையில் 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர நமச்சிவாயம். சென்னை மாநிலக்கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் கல்விக்கற்று தேர்ந்த சிவராஜ் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும், சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
Sep 15, 2020 4 tweets 1 min read
பெண்ணை அடிமைபடுத்த, தாலி உரிமம் வழங்குகிறது..

தாலியற்ற திருமணங்களை அங்கீகரிப்பதன் மூலம் தாலியின் மீதான புனித பிம்பத்தை நொறுக்க சுயமரியாதை திருமணங்களை அங்கிகரீக்கும் சட்டம் கொண்டு வந்த #பேரறிஞர்_அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

#HBD_PerarignarAnna நடுரோட்ல மனைவிய தூக்கிப்போட்டு மிதிக்குறான், யாராவது எதிர்த்து கேள்வி கேட்டா என் பொன்டாட்டி நா அடிப்பேன் ன்னு தாலியை கை காட்றான்..

தினமும் குடிச்சிட்டு வரான், சந்தேக படுறான் மிகப்பெரிய கொடுமைக்காரனா இருக்கான் கணவன் , ஆனாலும் அவனை விட்டு விலகமுடியாதவளாக பெண் இருக்கிறாள்,
Aug 4, 2020 5 tweets 5 min read
நல்லா பாத்துக்கோங்க மக்களே.. 10th ல 80% மார்க் கீழ எடுத்தாலே பெரும்பாலும் எந்த ஸ்கூல்லயும் Science Group கிடைக்காது, 430 மார்க் Minimum எடுத்தா தான் Science group எடுக்க முடியும்.

மெடிக்கல் கவுன்சிலிங் ஒரு தடவை அட்டண்ட் பண்ணவங்களுக்கு கூட தெரியும்...

#பார்ப்பன_கொழுப்பு Thread ImageImage 12th ல 194க்கு கீழ கட் ஆஃப் இருந்தா சீட்டே கிடைக்காதுன்னு கவுன்சிலிங் அட்டண்ட் கூட பண்ண மாட்டாங்க, எந்த Category யா இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி Minimum 194.75 கட் ஆஃப் வாங்கி டாக்டரானவங்களை Just pass போற போக்குல சொல்லிட்டு போறான் இந்த தினமலம்.

#பார்ப்பன_கொழுப்பு ImageImage
Jul 30, 2020 4 tweets 3 min read
ஏழை எளிய மலைவாழ் மாணவர்களின் கல்வியின் வெளிச்சமாக விளங்கும் நிஜ ராட்ச்சசி அக்கா மகாலட்சுமி அவர்களின் முகநூல் பதிவு.!

எம்புள்ள அரசுப்பள்ளியில தான் படிக்குது. எம்புள்ளையோட கல்வி உரிமையைப் பறிக்க ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டிடிச்சி. சென்ற ஆண்டு எத்தனையோ முறை கதறி அழுதிருக்கேன். ImageImageImageImage ஆனால் என் கண்ணீரெல்லாம் வீணாவே போயிடிச்சி. எம்புள்ளையோட எதிர்காலத்தை நெனைக்கும்போ'து 'பக்' ங்கிது.
ஏக்கர் கணக்குல நெலமும் இல்ல!
ஏய்ச்சிப் பொழைக்க மனசும் இல்ல.! என் கல்விக்காகப் பாடுபட்ட பெரியவங்க மாதிரி
எம்புள்ளையோட கல்விக்காகப் பாடுபட யாராவது வருவாங்களானு..

#NewEducationPolicy Image
Jul 24, 2020 6 tweets 1 min read
- பாரதி தம்பி (எழுத்தாளர்

நேற்று ஒரு பேக்கரியில் இருந்து வெளியே வந்தேன். கையில் ஒரு பிரெட் பாக்கெட். பைக் எடுக்கப் போகும்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண், ‘’புள்ளைங்க பசியோட கிடக்குது. நாலு பிரெட் குடுங்களேன்’’ என்றார். மனம் நடுங்கிப்போனது. பாக்கெட்டை கொடுத்தேன். பதறி மறுத்தார் Image . ‘’நாலு போதும். உங்க பிள்ளைங்களுக்கு குடுங்க..’’ என்றார். கையில் கொடுத்துவிட்டு, இருந்த கொஞ்ச காசை கொடுத்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார்.

முகக் கவசம் தாண்டி அவரது விழிகளில் தெரிந்த கையறு நிலை உலுக்கியது. பேக்கரி மூடும் நேரம் என்பதால்,
Jul 24, 2020 7 tweets 1 min read
வங்கி மேலாளரிம் அன்று ஒரு குடியானவர் லோன் கேட்டு வந்தார்.

மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த குடியானவர் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?” குடியானவர் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன.?”

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

குடியானவர் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு…
Jul 7, 2020 4 tweets 2 min read
நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஜீவசகாப்தன் என்பவர் பணிபுரிகிறார். அவரது பின்ணணி பற்றி விசாரிப்போம் என்று காவிப்படை கிளம்புகிறது!

அவர்களது தீவிர துப்பறிதலில் ஜீவசகாப்தன் மனைவி திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் திருமதி.ஓவியா என்பவரோடு 👇

#SaveJournalists
#StandWithNews18TN Image அடிக்கடி வெளியில் ஷாப்பிங், சினிமா, ஹோட்டல் என்று சுற்றுவதைக் கண்டு பிடிக்கிறது!!

இந்த தேச விரோதச் செயலைக் கண்டு பிடித்தக் காவிப்படை இந்தத் தகவலை திரு.மாரிதாஸ் அவர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

விஷயத்தை "ஆதாரப்பூர்வமாகக்" கேள்விப்பட்ட மாரிதாஸ் "
Jun 9, 2020 13 tweets 3 min read
நீங்கதானே இன்ஸ்பெக்டர் #அம்பேத்கார் ..?' - பண்ருட்டி சிறுமியின் புகாரால் மனம் திருந்திய தந்தை...

பண்ருட்டி காவல் நிலையம்
உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்த அப்பா மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையம் சென்றிருக்கிறார் சிறுமி ஒருவர்.

#Thread இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்த இவர், கடந்த சில மாதங்களாக பண்ருட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு பயமும் பதற்றமும் இருக்கக்கூடாது என்று கூறும் இவர்,