Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

Oct 1, 2020, 15 tweets

வணக்கம்.
ராஜேந்திர சோழனின் ஆட்சிப்பகுதிகள் எவை?ஆனால்,அதைவிட சுவாரசியம் இது!அவன் காலத்தில் தலைநகரான'கங்கைகொண்ட சோழபுரம்'எப்படியிருந்திருக்கும்!ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும்.

wix.to/6ED9B

இராஜேந்திர சோழனின்-2/15
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன்..

இராஜேந்திர சோழனின்-3/15
முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன்".ஆனால் அதை விட சுவாரசியம் இது !!!
மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது சாளரம் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும்,

இராஜேந்திர சோழனின்-4/15
ஐம்பது வீடுகளும் கொண்ட "கங்கை கொண்ட சோழபுரம்" என்றசிறிய கிராமத்தின் பெயர் பலகை நம் கண்ணில் தென்படும்.
அந்த ஊரை தலைநகராய் கொண்டு சுமார் 254 வருடங்கள் சோழர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்,பல தேசங்களைதனக்கு கீழாக கொண்ட தலைநகர் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்?

இராஜேந்திர சோழனின்-5/15
எத்தனை அரண்மனைகள்? எத்தனை தெருக்கள்? எத்தனை அங்காடிகள்?எத்தனை படை வீரர்கள்? எத்தனை யானைகள்? எத்தனை குதிரைகள்?கண்களை மூடிக் கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் அந்த சோழத் தலைநகரின் நிலையை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்,பிரம்மிப்பு!.

இராஜேந்திர சோழனின்-6/15
அகழ்வாய்வு செய்யும் போது அங்கு கிடைத்த கல்வெட்டைக் குறித்து திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறியது "அந்த நகரில் ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், சோழ கேரளாந்தகன் திருவாயில், ராஜ ராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி,

இராஜேந்திர சோழனின்-7/15
கூடைஆழ்வன்யன் போன பெருவழி, வேம்புக்குடி வாசல், குலோத்துங்க சோழன் திருமதில், குலோத்துங்க சோழன் பெருவழி போன்ற எண்ணற்ற பெயர்களை தாங்கிய வீதிகளும், வாயில்களும், அரண்மனைகளும் நிறைந்த அற்புதமான தலைநகராக ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்துள்ளது இந்த கிராமம்",

இராஜேந்திர சோழனின்-8/15
ஒரு சிறிய விஷயத்தை மனதில் நிலை நிறுத்துக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள்,நடனமும், நாட்டியமும்,இசையும்,கணிதமும், மருத்துவமும், விவசாயமும், வணிகமும் உச்சத்தை தொட்டிருந்த நேரம் அது,தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அதே சோழர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் இது,

இராஜேந்திர சோழனின்-9/15
ஒரு கோயிலையே இத்தனை பிரம்மாண்டமாய் அமைத்தவர்கள், தாங்கள் புதியதாக குடியேரப்போகும் நகரை எப்படி வடிவமைத்திருப்பார்கள், நகரின் நடுவே கோயில் இருக்க வேண்டும், எங்கிருந்து பார்த்தாலும் அந்த பிரம்மாண்ட விமானம் தெரிய வேண்டும், யாருக்கு வீடு எங்கே ஒதுக்க வேண்டும்?

இராஜேந்திர சோழனின்-10/10
தெருக்கள் எப்படி அமைய வேண்டும், போர் வீர்கள் எங்கே இருக்க வேண்டும்? அரண்மனை எந்த திசையில் இருக்க வேண்டும்? திடீரென படை எடுப்பு வந்தால் அதை சமாளிக்க படைகளை அந்த நகரில் எப்படி நிலைநிறுத்தி இருக்க வேண்டும்?
அப்படி அமைக்கப்பட்ட அவர்களின் நகரில் திசைக்கு..

இராஜேந்திர சோழனின்-11/15
ஒன்றாக நகரின் எல்லையில் காவல் தெய்வங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, அந்த தெய்வங்கள் அனைத்தும் சோழர்கள் கங்கை வரை போருக்கு சென்ற போது வழியில் கடந்து சென்ற ஊர்களில் இருந்து எல்லாம் கொண்டுவரப்பட்ட தெய்வங்கள்!!

wix.to/6ED9BvQ

இராஜேந்திர சோழனின்-12/15
அனைத்தையும் ஒவ்வொரு திசையிலும் பிரத்திட்டை செய்திருக்கிறார்கள். இந்த தெய்வங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது, அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் போது ஒவ்வொரு திசைக்கும் சென்று இந்த தெய்வங்களை காணுங்கள், இவை அனைத்தும் பல ஆயிரம் கிலோமீட்டர்..

இராஜேந்திர சோழனின்-13/15
தொலைவில் இருந்து வெற்றிச் சின்னங்களாக சோழர்களால் கொண்டுவரப்பட்டவை.
கங்கைகொண்ட சோழபுரத்தின் வடக்கே "சளுப்பை" என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊரில் (அன்று சாளுக்கிய குலநாசினி மண்டலம்) வட எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

இராஜேந்திர சோழனால்-14/15
கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கே வானதாராயண் குப்பத்தில்; வீர ரெட்டித் தெருவில், தென் திசை எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கே செங்கல் மேடு என்ற இடத்தில் கிழக்கு திசை எல்லை..

இராஜேந்திர சோழனால்-15/15

தெய்வமாக கலிங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.
நாம் எல்லாம் நம் ஊரில் செய்த தெய்வ சிலைகள் என்று கண்ணை மூடிக் கொண்டு வழிபட்டு வந்து விடுகிறோம். இது போன்ற சிறப்பான உண்மை படித்தால் தான் தெரிகிறது.

நன்றி

wix.to/6ED9BvQ

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling