அடிவாங்கட்டும், புத்தி வரட்டும், திராணி இருந்தால் திறமையாய் செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திருப்பி அடிக்கட்டும்!!!
இந்த காட்சியையும், வீடியோவையும் பார்த்து பரிதாபமோ, ஆதங்கமோ ஏற்படவில்லை மாறாக வீணாய்போன @INCIndia இனியாவது ,,
சூடு சொரனையோடு நடக்குமா என்ற கேள்வியே எழுகிறது மனதிற்க்குள்!!!
@RahulGandhi நல்ல மனிதனாக இருந்துவிட்டால் போதுமா??? அதுமட்டுமே நாட்டு மக்களின் நலனுக்கு உதவிடுமா???
அவர் தலைமையேற்றிர்க்கும் கட்சியும்,,
அதன் சித்தாந்தமும் சரியாக இருந்தால் மட்டுமே மக்கள் நலன்பயக்கும் என்பதை மறுக்க முடியுமா???
பல ஆண்டுகள் இந்நாட்டை ஆண்ட கட்சி, அடுத்து பாசிச மிருகங்களுக்கு பிறகு நாட்டை ஆள காத்திருக்கும் ஒரே கட்சியின் தலைவன், முன்னாள் பிரதம மந்திரியின் பேரன்,,
முன்னாள் பிரதம மந்திரியின் மகன், இந்த நாட்டிற்க்காக இரண்டு உயிர்களை இழந்த குடும்பத்தின் வாரிசு என இத்தனை அந்தஸ்த்துகளோடும், வருங்கால பிரதம மந்திரியென்ற நகர்வோடும் பயணிக்கக்கூடிய ஒரு தலைவன் சிதைந்துப்போன தனது கட்சியை,,
எப்படி கட்டமைத்திருக்க வேண்டும்??? எப்படி சீரமைத்திருக்க வேண்டும்???!!!!
செய்தாரா??? இல்லைதானே!!! காங்கிரஸில் உள்ள பல அயோக்கியனும் பாஜக போடக்கூடிய எலும்புத்துண்டுக்களை கவ்விக்கொண்டு அங்குபோய் இணைகிறானே,,
அதற்க்காக ராகுல் எடுத்த, எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? கட்சியின் பாதியே பாசிச சித்தாந்தில் பயணிக்கும்பொழுது அதன் தலைவனும், தலைவனின் தங்கையும் @priyankagandhi மட்டும் மக்களுக்கானவர்களாக இருந்து என்ன பயன்?
இனியும் இரைக்கவில்லையென்றால் காங்கிரஸ் என்ற பெயரே,,
இருந்த தடையமில்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி. அந்தளவிற்கு பாசிசம் தனது அராஜக வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது!
அதனால் அடிவாங்கட்டும், புத்தி வரட்டும், திராணி இருந்தால் திறமையாய் செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திருப்பி அடிக்கட்டும்!
#Rahul_gandhi
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
