𒆜மான்𒆜 Profile picture
அறிவியல் கடலில் ஆனந்த குளியல் போடும் ஆராய்ச்சியாளன்..! ꧁𓊈𒆜🅱🅴🅻🅾🅽🅶🆂 🆃🅾 🆃🅷🅴 🅳🆁🅰🆅🅸🅳🅸🅰🅽 🆂🆃🅾🅲🅺𒆜𓊉꧂

Oct 2, 2020, 21 tweets

#Thread #Read_full
அத்வானி, அத்வானி எனும் ஒரு நிலக்கடலை வியாபாரி....

இந்தியாவில் நிலக்கடலைக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது காங்கிரஸ் அரசு நிலக்கடைலையை தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இப்படி இறக்குமதி செய்வதை பார்த்து மிகவும் ரெளத்திரம் கொண்டார் ஒருவர், (1/19)

அவர் தான் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழும் அத்வானி, அத்வானி என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடலை வியாபாரி.

நிலக்கடலைக்களை இறக்குமதி செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், (2/19)

விதேசி கடலைகளை எல்லாம் அருகில் இருக்கும் குளத்தில் குப்பை மேட்டில் கொட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். உடன் இதற்கு மாற்றாக சுதேசி நிலக்கடலை சாகுபடி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

விதைக்கடலைகளுடம் இந்தியா முழுவதும் ஒரு ஏசி ரத யாத்திரை மேற்கொண்டார், (3/19)

ஒவ்வொரு ஊரிலும் விதைக்கடலைகளை மக்களிடம் விநியோகித்து விட்டு ” நிலக்கடலையும் இந்து மதமும்” என்று சொற்பொழிவு நிகழ்த்துவார். நிலக்கடலையை சிலர் மணிலா கொட்டை என்று அழைக்கிறார்கள் அது ஒரு பெரும் வாட்டீகன் சதி, நிலக்கடலையை பற்றி வேதங்களிலேயே உள்ளது, (4/19)

நிலக்கடலையை வேத காலத்தில் தீயில் சுட்டு உண்பார்கள் என்று விரிவாக பல ஆச்சாரமான தகவல்களை சொல்வார். இறுதியாக அவர் நிலக்கடலையை எப்படி வெல்லப்பாகில் போட்டு கடலை பர்பி செய்வது என்று வகுப்பு எடுப்பார். (5/19)

அவர் அடுத்த ஊருக்கு சென்றதும் அவரது கம்பேனி ஆட்கள் அந்த ஊரில் நிலக்கடலையை மலலாட்டை என்றோ மணிலா கொட்டை என்றோ அழைப்பவர்களை கொன்று நிலத்திற்கும் அடியில் நிலக்கடைலையை போலவே புதைப்பார்கள். (6/19)

இப்படி இந்த யாத்திரை முடியும் போது நூற்றுக்கணக்கானவர்கள் நிலக்கடலை வேள்வியில் குதித்து உயிரை இந்த நாட்டுக்கு கொடுத்தார்கள். (7/19)

ஒவ்வொரு ஊரில் இருந்தும் நிலக்கடைலையை வெல்லத்தில் போட்டு பெரிய தட்டில் ஊற்று அது சூடாக இருக்கும் போதே கத்தியால் கீறி அதை அயோத்தியில் அவர்கள் இந்த யாத்திரையின் இறுதியில் கட்டப்போகும் நிலக்கடலை கோவிலுக்கு அனுப்பி வைப்பார்கள். (8/19)

ஒவ்வொரு ஊரில் இருந்தும் அயோத்தி நோக்கி கொண்டு செல்லப்படும் கடலை பர்ப்பிகள் அங்கு மலைப்போல் குவிந்திருந்ததை பல புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் அன்றைய காலத்தில் அச்சிடப்பட்டன.

இது தவிர ஊர் ஊராக விதை கடலைக்கு வசூல செய்யபப்ட்ட தொகை கணக்கில் அடங்காமல் சென்றது, (9/19)

இந்த தொகையை பற்றி கேள்வி கேட்ட வருமானவரி துறையை சேர்ந்த பல ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு அவர்களும் விதை கடலை உடைத்தல், கடலை நடவு, களை எடுத்தல் என SKILL INDIA வின் கீழ் பல அற்புதமான கை தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. (10/19)

இறுதியாக அவர்கள் அயோத்திக்கு சென்ற போது இவர்கள் கடலைக்கு கோவில் கட்ட வேண்டிய இடத்தில் எந்த வட இந்திய நாதாரியோ பாணி பூரிக்கு அங்கே கோவில் கட்டி வைத்திருந்தான். லட்சக்கணக்கில் மக்களை திரட்டி அயோத்திச் சென்ற அத்வானி அங்கே பொறுமையாக காத்திருந்தார். (11/19)

இந்தியா முழுமையில் இருந்தும் அயோத்தியில் கொண்டு வந்த லாரி லாரியாக குவிக்கப்பட்ட கடலை முட்டாய் என்னும் நிலக்கடலை பர்பியின் எடை நாளுக்கு நாள் அதிகரித்தது. (12/19)

அப்படி ஒரே இடத்தில் இவ்வளவு மல்லாட்ட பர்பி குவிக்கப்பட்ட போது அயோத்தி வழியாக செல்லும் டெக்டோனிக் தகடுகளில் ஒரு அதிர்வு ஏற்பட்டதில் அந்த பாணி பூரி கோவில் இடிந்து விழுந்தது. (13/19)

ஆனால் அத்வானியோ இதை பார்த்த் அதிர்ச்சியில் இது எல்லாம் அவன் செயல் என அன்றில் இருந்து இனி வாழ்வில் நிலக்கடலையை உண்பதில்லை என்று அங்கேயே சபதம் எடுத்தார், (14/19)

டெக்டானிக் தகடுகளில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அன்று அயோத்தியில் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நீதிபதி ஒருவர் அன்று முதல் காட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பமிடும் வழக்கத்திற்கு வந்தார். (15/19)

இந்த கையொப்பமிடும் நோயில் இருந்து விடுபட அவரை தனி விமானத்தில் அமெரிக்கா அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அன்று முதல் உலகில் அயோத்தி நிலக்கடலை எனும் புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டது, (16/19)

நிலக்கடலை இந்தியாவில் தான் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று வரலாறு தன்னைத்தானே மாற்றி எழுதிக் கொண்டது. (17/19)

2014ல் அத்வானியின் புதிய டாக்டர் அவருக்கும் நிலக்கடலைக்கும் இனி சம்பந்தம் இல்லை அவருக்கு வயதாகி விட்டதால் இனி அவர் நிலக்கடலை சாப்பிட கூடாது மனதில் கூட நினைக்க கூடாது என்று செல்லமாக மிரட்டு உதாசீனப்படுத்தி ஆலோசனை கூறினார். (18/19)

இன்று பாணி பூரி கோவில் இடிந்து விழுந்ததற்கும் நிலக்கடலைக்கும் தொடர்பு இல்லை என தீர்ப்பு வெளிவந்த போது அத்வானிக்கு இது எது குறித்த தீர்ப்பு என்றே தெரியவில்லை, அவர் நிலக்கடலையின் வடிவத்தை, வாசனைய, பயண்களை கூட முற்றிலும் மறந்து போயி இருந்தார்,

ஏதோ தன்னை நோக்கி கேமிராக்கள் நீண்ட நாள் கழித்து வருகிறது என்பதை மட்டுமே அவரால் உணர முடிந்தது.....

~ Muthu Krishnan (19/19)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling