#banking
வங்கி சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. இது நான் பணிபுரியும் வங்கி / வேறா எந்த ஒரு நிறுவனத்தின் கருத்தோ அல்ல. இதை எந்தவித சட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்
👍🏼👍🏼👍🏼
புதிய தொழிலுக்கு வங்கிக் கடன் - Project Finance
பலருக்கு தொழில் துவங்கி சொந்த காலில் நிற்க ஆசை, வேட்கை, கனவு.. ஆனால் எல்லோரும் அது நடப்பதில்லை. அவர்கள் சொல்லும் முதல் குறை 'எந்த பேங்க் கடன் தரான்'
உங்கள் project உங்களுக்கு தான் கனவு. மற்றவருக்கு அது just ஒரு project தான்
உங்கள் project viability / visibility இல்லாமல் எந்த வங்கியும் கடன் தராது. ஏன், உங்கள் பெற்றோர் தருவது சந்தேகமே.
Related industry இல் அனுபவம் இல்லையா? கடன் இல்லை. MBA படித்துவிட்டு 5 வருடம் இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றி விட்டு garment unit போட project ready செய்தால் எந்த
வங்கியும் கடன் தராது. துறை சார்ந்த அனுபவம் இங்கே 0%. நீங்கள் வெற்றி பெருவீர்களா என வங்கி மதிப்பீடு செய்ய முடியாது
தாரளமாக சொந்த பணத்தில் சிறிய அளவில் துவங்கி 3 ஆண்டுகள் கழித்து விரிவாக்கம் செய்ய வங்கி கடன் பெற அணுகலாம்.
Forward / backward integration செய்ய விரும்புவர்களுக்கு
Project finance எளிதில் கிடைக்கும்.
Backward integration: நீங்கள் garment ஏற்றுமதி செய்கிறீர்கள். Dyeing வெளியே job work தருகிறீர்கள். உங்களுக்கு என ஒரு dyeing unit போட்டால் செலவு குறையும்
Forward integration: நீங்கள் spinning mill வைத்து உள்ளீர். அடுத்து weaving mill போட்டால்
மேலும் லாபம் ஈட்ட முடியும்.
இந்த இரு காரணங்களுக்கு project finance கிடைக்கும்.
யோவ்... சாதாரண தொழில் பண்ணுறவங்க பத்தி சொல்லு என்ற உங்கள் கேள்வி கேட்கிறது.
துறை அனுபவம் உள்ளவர்கள் project finance பெறும் வாய்ப்பு உள்ளது.
எ.கா.. ஒரு பெரிய garment factoryல் 10வருடம் வேலை பார்த்து
அந்த அனுபவத்தில் தொழில் துவங்கும் பொழுது கடன் பெற வாய்ப்பு உண்டு. உங்கள் projectன் SWOT analysis (Strengths, Weakness, Opportunity, Threat) செய்யப்படும். உங்கள் ஆர்டர் எடுக்கும் திறன், buyer உடனான உங்கள் உறவு, குறித்த நேரத்தில் டெலிவரி கொடுப்பது, தேவையான சக்திகளை
(man, material, infra) குறைந்த நேரத்தில் ஒருங்கிணைப்பது, அரசின் சட்டதிட்டங்களுக்கான compliance முதலியவை அடக்கம்.
நீங்கள் ஒரு ரூபாய் முதல் போட்டுவிட்டு வங்கியிடம் 4 / 5 ரூபாய் எதிர்பார்க்க முடியாது.
அதிக பட்சம் 2 ரூபாய் கிடைக்கும்
Collateral security உறுதியானதாக இருக்க வேண்டும்
உங்கள் தொழில் இன்னும் துவங்கப்படவில்லை. நீங்கள் வெற்றி பெற நம்பிக்கை கொண்டு உள்ளீர். ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே குறைந்தது 200% collateral தேவைப்படும். சில ஆண்டு கழித்து நீங்கள் விரிவாக்கம் செய்யும் பொழுது தொழில் நன்றாக தொடர்ந்தால் அதே collateral securityக்கு
கூடுதல் கடன் பெறலாம்.
எல்லா தொழிலிலும் உள்ள ரிஸ்க் 3 வகைப்படும்.
Credit risk
Market risk
Operational risk.
Basel norms ஒட்டியே இவற்றை வகைப்படுத்தி உள்ளேன்.
இது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
பின்குறிப்பு: என்னைப் போல் MSME Risk profileல் இருப்பவர்களுக்கு பல தொழில்களின் நுணுக்கங்கள் தெரியும்.
நீங்கள் இதுவரை கேள்விப்படாத பெட்ரோல் பங்கில் நடக்கும் evaporation loss முதல் woven fabricல் உள்ள warp / weft வரை தெரியும்.
Jack of all trade; master of none என்பார்கள்.
எங்களைப் போன்றவர்களுக்கு பல தொழில் பற்றி விஷய ஞானம் இருக்கும். அது தெரியாமல் கடன் தேவையை புரிந்து கொள்ள முடியாது.
அதே சமயம், நாங்கள் தொழில் துவங்கினால இது மட்டும் எங்களை தொழில் முனைவோராக மாற்றிவிடாது.
ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக பிரகாசிக்க தேவைப்படும் passion வேற லெவல்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
