Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

Oct 4, 2020, 15 tweets

வணக்கம்
ஆதித்ய கரிகாலன் கொலைக்கு காரணமான பாண்டிய ஆபத்துதவிகளுக்கு தண்டனை கொடுத்தது உத்தம சோழனா அல்லது ராஜராஜனா?பிற்காலச் சோழர் வம்சத்தில் இன்று வரை விளக்க முடியாத புதிராக இருப்பது, பார்த்திவேந்திர கரிகாலன் என்ற 2 ஆம் ஆதித்தனுடைய படுகொலை ஆகும்!

wix.to/qkAPBvo

ஆதீத்திய-2/15
இவன் ராஜ ராஜ சோழனின் அண்ணன்.
இவனது படுகொலையைப் பற்றி ' திருவேலங்காட்டு செப்பேடு மற்றும் உடையார் குடி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன
சோழ மன்னன் கண்டராதித்தன் ஓராண்டு ஆட்சியில் இருந்து விட்டு பதவி விலகினார்.இவரது மகன் உத்தமச் சோழன் சிறுவன் எனவே ,

ஆதீத்திய-3/15
இவரது தம்பி அரிஞ்சயன் பட்டம் சூட்டப்பட்டார். இவர் ஓர் ஆண்டு ஆட்சி செய்துவிட்டு 'ஆற்றூர்' என்ற இடத்தில் ராஷ்டிரஹூடர்களுடன் நடந்த போரில் மரணம் அடையவே இவரது மகன் இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழர் ஆட்சிக்கு வந்தார்.(படங்களை அழுத்தி பார்த்து படிக்கவும்)

ஆதீத்திய-4/15
அரிஞ்சயனுடைய அண்ணன் கண்டராதித்தன் மகன் உத்தமச் சோழன் இன்னும் சிறுவன் .)சுந்தரச் சோழனுக்கு இரண்டு மகன்கள். பார்த்திவேந்திர கரிகாலன் ( இரண்டாம் ஆதித்தன்.) ராஜராஜன் ( அருள் பொழிந்தேவன் )மகள் குந்தவை.
சுந்தரச்சோழனுடைய காலத்தில் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு ..

ஆதீத்த-5/15
இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.( முறைப்படி மூத்தவனுடைய வாரிசு வரிசையில் உத்தமச்சோழன் பட்டத்துக்கு ரியவன் ) சுந்தரச்சோழனுக்கும் பாண்டிய மன்னன் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் ஆதித்த கரிகாலனும் கலந்து கொண்டு வீரத்தை நிலைநாட்டினான்.

wix.to/qkAPBvo

ஆதீத்த-6/15
கிபி966 புதுக்கோட்டையின் தென் எல்லையிலுள்ள சேவலி மலைகளுக்கு தெற்கே சேவூர் இடத்தில் நடைபெற்ற போரில், ஆதித்த கரிகாலன் முதலாம் வீரபாண்டியனைத் தோற்கடித்து, அவனது தலையைக் கொய்து,அழுகும் வரை உயரமான தூணில் மாட்டி வைத்திருந்தான் என்று திருவேலங்காட்டு பட்டயம் குறிப்பிடுகிறது.

ஆதீத்த-7/15
இவ்வேளையில் தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான்.இவனைக் கொன்றவர்கள் யார்?எனவும்இது குறிப்பிடுகிறது.இந்தக் கொலையின் பின்னணியில் இருந்தது யார்?இதில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் ரவி தாசன் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.என்றால் அவனை எய்தது யார்?

ஆதீத்திய-8/15
சுந்தரச்சோழன் இறந்த பின் ராஜராஜன் என்னும் அருள் மொழி வர்மன் ஆட்சியை உத்தமச்சோழனிடம் ஒப்படைத்தான்.உத்தமச்சோழன் பதவிக்கு வந்த வேளையில் , சுந்தரச் சோழனின் அமைச்சர் அனிருத்த பிரம்மராயர் ஓய்வுக்குப் பின் ரவிதாஸனுக்கு ' பஞ்சவர்மன் பிரும்மாதிராயன் என்ற பட்டத்துடன் பெரும்..

ஆதீத்திய-9/15
பதவி அளிக்கப்பட்டது.மேலும் கொலைகாரர்களைக் கண்டு பிடித்து தண்டனையும் விதிக்கப்பட வில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து 'வந்தியத்தேவன்' (ராஜராஜனின் தமக்கை குந்தவை யின் கணவன் ) இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
உத்தமச்சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு

ஆதீத்திய-10/15
வந்த அருள் மொழி வர்மன் என்ற ராஜராஜன்,முதன் முதலில் சிறையில் இருந்த நந்தி வர்மனை விடுவித்தான்.அடுத்தது தனது தமையனைக் கொன்ற ரவி தாஸன் மற்றும் அவனது உறவினர்கள் அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை விற்கும் பொறுப்பை திருவீர நாராயண சதுர்வேதி மங்கல சபையின் வசம்

ஆதீத்திய-11/15
ஒப்படைக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட்டனர்.
இக்கொலை யில் தொடர்புள்ளோர் பலர் ரவிதாஸனும் அவனுடைய கூட்டாளிகளுமான அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து உடையார் குடி கல்வெட்டில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
wix.to/qkAPBvo

ஆதீத்திய-12/15
காந்தளூர் படையெடுப்பு:
மற்ற பிற நாடுகளின் மீது படையெடுக்கும் முன் ராஜராஜன் காந்தளூரில் இயங்கி வந்த கடிகையின் மீது படையெடுத்தான்.அது ஒரு கல்விக்கூடம்.அதன் நிர்வாகி ஆதித்தனைக் கொலை செய்ததாக கூறப்பட்ட ரவிதாஸனின் குரு..ரவிதாஸன் யார்?:

wix.to/qkAPBvo

ஆதீத்திய-13/15
பிற்காலச் சோழப்பேரரசை நிறுவிய விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த கரிகாலனுக்கு இரு புதல்வர்கள்.மூத்தவனது இறப்பு சர்ச்சைக்குரிய நிலையில் அவனுக்கு இளையவனான முதலாம் பராந்தகன் அரியணை ஏறினார்.மூத்தவன் கன்னரத்தேவனுக்கு பட்டம் மறுக்கப்பட்டதாககவும் கூறப்படுகிறது.

ஆதீத்திய-14/15
இந்த கன்னரத்தேவன் வம்சத்தைச் சேர்ந்தவன் ரவிதாஸன் என்று கூறப்படுகிறது.
ரவிதாஸன் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளில் ஒருவன் என்று பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி குறிப்பிடுகிறார்.மாவீரனான வீரபாண்டியனைப் போரில் தோற்கடித்ததோடு ,

ஆதீத்திய-15/15

அவனது தலையைக் கொய்து உயரமான கம்பத்தில் நட்டு வைத்து அவனை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கவே பாண்டியநாடு ரவிதாஸனின் உதவியுடன் இனப்படுகொலையை நடத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நன்றி

wix.to/qkAPBvo

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling