அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்
தினமும் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். தானே பஞ்சாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது உரியவர்கள் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
திதியை அறிவதனால் ஐஶ்வர்யங்கள் கிடைக்கும், கிழமையை அறிவதனால் ஆயுசு அதிகரிக்கும், நட்சத்திரத்தை அறிவதனால் பாவம் விலகும், யோகத்தை அறிவதனால்
நோய் நீங்கும், கரணத்தை அறிவதனால் செயல்கள் வெற்றிபெறும். பஞ்சாங்கத்தை தினமும் படிப்பதனால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. #பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவை
1.வாரம் 2.நட்சத்திரம்
3.திதி 4.யோகம் 5.கரணம்
1.வாரம்-ஞாயிறு முதல் சனி வரையான ஏழு கிழமைகள்.
2.நட்சத்திரம்-அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.
3.திதி-ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
4.யோகம்-வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும்,
சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
5.கரணம்-திதியில் பாதியாகும்.
நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக்
காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே பஞ்சாங்கமாகும்.
#அர்த்தமுள்ளஇந்துமதம்
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9நட்சத்திரங்களும் மேல் நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களே மேல் நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்க சிறந்த நாள்
உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.
கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட
நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. (உம்) கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.
ராசியை போல #கரணம் முக்கியம். சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று கணக்கிடப்படுகிறது. சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள். இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளின் அரைப் பகுதியாகும்.
மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள் குறியீடு.
திதி இரண்டு கர்ணங்களைக் கொண்டது. விஷ்டி கர்ணன் இருப்பது பத்ரா என்று அழைக்கப்படுகிறது. பத்ரா ஒரு மாதத்தில் ஒரு பக்ஷத்தில் நான்கு முறை ஏற்படுகிறது. பத்ரா பூர்ணிமாவின் கிழக்குப் பாதியிலும், சுக்ல பக்ஷத்தில் அஷ்டமியிலும் ஏற்படுகிறது. அதே போல சதுர்த்தி மற்றும் ஏகாதசியின் வடபாதியில்
நிகழ்கிறது.எந்த நல்ல காரியத்தைத் தொடங்கவும் முகூர்த்த நேரத்தை கணிக்க பத்ரா மிக முக்கியம். பத்ரா பூலோகம், பாதாள லோகம், சுவர்க்க லோகம் மூன்றிலும் முக்கியமானது. பத்ர மாதா என்பவள் சூரிய பகவான் மகள், சனி பகவான் சகோதரி, அவர் உதித்த போது உலகையே தன் உணவாகக் கொள்ள இருந்தார். அதனால் சுப
காரியங்கள் தடைபட ஆரம்பித்தன. அதனால் பிரம்மா அவளுக்கு என்று ஓர் இடத்தை 11 காரணங்களில் 7வது கரணத்தை அளித்தார். கால பத்ரா மூவுலகங்களிலும் உலவி வருபவள். சந்திரன் மேஷம், ரிஷபம், மிதுனம், விருச்சிகம் இவற்றில் இருக்கையில் பத்ரா சுவர்கலோகத்தில் இருக்கிறார். சந்திரன் கன்னி, துலாம், தனுஷு,
மகர ராசிகளில் இருந்தால் பத்ரா பாதாள லோகத்தில் சஞ்சரிக்கிறாள். சந்திரன் கடகம், சிம்மம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் இருக்கும்போது பூலோகத்தில் இருக்கிறாள். பத்ரா சுவர்கலோகத்தில் சஞ்சரிக்கும்போது அவர் பார்வை மேல் நோக்கி இருக்கும். பாதாள லோகத்தில் இருக்கும்போது கீழ் நோக்கி இருக்கும
.பூலோகத்தில் பார்வையை செலுத்தும் போது பத்ரா பத்ராகால் என்று அழைக்கப்படுகிறார். இந்த சமயத்தில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவதில்லை. ஜோதிஷ சாஸ்த்திரப்படி பத்ராவின் வாய், தொண்டை, இதயம், ஆகியவை பூமியில் இருக்கும்போது திருமணம், கிரஹப்பிரவேசம், காத்து குத்து போன்ற சுபகாரியங்கள்
நிச்சயம் செய்யக் கூடாது. தவறி செய்து விட்டால் சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறலாம். பத்ரகால் சமயத்தில் போர், நெருப்பு வைத்து செய்யும் யாகம், கத்தி வைத்து செய்யும் அறுவை சிகிச்சைகள் போன்றவை தொடங்கலாம். பத்ராவின் அருளைப் பெற அவரின் 12 நாமங்களை உச்சரித்து ஆசி பெறலாம். அவை தன்ய
ததிமுகி, பத்ரா, மகாமாரி, கரன்னா, கல்ராத்ரி, மகாருத்ரா, விஸ்தி, கல்பத்ரிகா, பைரவி, மகாகாளி, அசுரஷகாரி ஆகியவை.
#பத்ரயோகம் - நம் ஜாதகத்தில் புதனின் இருப்பைப பொருத்து இந்த யோகம் அமைகிறது. பஞ்ச மகாபுருஷ யோகங்கள் எனப்படும் 5 மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும்.
ஹரே கிருஷ்ணா!
@threadreaderapp unroll
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
