வள்ளுவர் வாசுகி ஒரு கற்பனை கதை. இப்ப வரை தநா மாநில பாடத்திட்டத்தில் பக்தி இலக்கியம்னு ஒரு பார்ட் வரும் அதுல இந்து மத பாடல்களுடன், திரு கிருட்டிணப்பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும், உமறுப்புலவரின் சீராப்புரணமும் கூடவே இருக்கும். வேறெந்த பாடத்திட்டத்திலும் இப்படி ஒரு
யுனிக்னெஸ் பார்க்க முடியாது. ஆனா இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்து மத கற்பனை கதைகள் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை பாடத்திட்டம். இத்தோடு மட்டும் இல்லை மெடிவல் இந்தியா வரலாறு முடிந்த வரை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் பட் இங்க அப்படி இல்லை. இத்தனைக்கும் ஒரு சமச்சீர்
கரிக்குலம் இங்கதான். சைன்ஸ் எடுத்தாலும் அப்படித்தான் கிட்டத்தட்ட 2004 க்கு பிறகு மேல்நிலை பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் சிபிஎஸ்இ செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு மூன்று முறை ரிவைஸ் பண்ணிட்டாங்க. இந்த கரிக்குலம் மாத்தாம இருக்கதுக்கு பின்னாடி பெரிய பெரிய நுழைவுத்தேர்வு
கோச்சிங் மையங்களின் தலையீடு உள்ளது. கிட்டத்தட்ட இனி பாடங்களை மாத்துனா கோட்டா(KOTA) பேக்டரி பலமா அடிவாங்கும். அவங்க தலையீடு நிறைய. இங்க பெஸ்ட் பாடத்திட்டம்னு பர்ஸ்ட் ப்ளேஸ்ல சிபிஎஸ்இ இருக்கு தமிழ்நாடு பாடத்திட்டம் மூன்றாமிடம். இரண்டாமிடத்தில் ஆந்திரா பாடத்திட்டம்.
என்னைக் கேட்டா தென்மாநிலங்களில் மட்டும்தான் கல்வித்திட்டம் சிறப்பா இருக்கு. டாப் 5 பாடத்திட்டத்துல சிபிஎஸ்இ, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா கர்நாடகா போர்டு மட்டும்தான். என்ன இங்க நம்மள மனப்பாட கல்வித்திட்டம்னு சொல்லியே வாய்ல தர்ராங்க. பட் பசங்களுக்கு அறிதல், புரிதல்,
பயன்படுத்துதல் , திறனறிதல் என்ற நான்கு நிலைப்படி வினாத்தாள் கட்டமைப்பு தமிழ்நாட்டுல மட்டும்தான். இந்த அளவு நம்மை வாய்ல தந்து உக்கார வைச்சதுக்கு முக்கிய காரணம் நாமக்கல் மண்டலம் தான். அவனுங்க தான் 11 ம் வகுப்பு பாடத்திட்டத்தை நடத்தாம 12 ம் வகுப்பு டைரக்டா நடத்தி
மொத்த சிஸ்டத்தையும் காலி பன்னது. அதனால்தான் இஞ்சினியரிங் அடிப்படையான கணிதபாடத்தில் செம்ம அடி வாங்குறாங்க பசங்க. சிபிஎஸ்இ மொழிப்பாட வினாத்தாள் கூட முழுசா நாலு பத்தியை படித்து விடையளி, ஒரு கட்டுரை இப்படி ரொம்ப மட்டமா இருக்கும். இதெல்லாம் ஒரு சிபிஎஸ்இ ஆசிரியராக உள்ளே
போன பிறகுதான் புரிந்தது. அவனுங்க வாசுகிய பத்தி கதை வைச்சு வள்ளுவருக்கு நூல் மட்டும் போட்டானுவ நல்ல வேலை கண்ணகிக்கு இதே மாதிரி பன்னாத வரை நல்லதுங்க விட்டா அதையும் பன்னுவானுங்க பிள்ளக்கா பயலுங்க. இந்த விளக்கத்தை பெற்றோர் எனும் சூதாடிகளிடம் சொன்னா என் பிள்ளை பெரியாள்
ஆகுறது தடுக்க முயற்சிக்கிறேனு என் மேலையே இது வரை நாலு மெயில் போட்டானுவ. சிபிஎஸ்இ மோகத்தை நம்மூர்ல வலுவா விதைச்சதுக்கு பிஎஸ்பிபி பள்ளிதான் காரணம். ஏன்னா டிஏவி குரூப் கூட இங்க ஸ்டேட் போர்டு ஸ்கூல் தான் நடத்தி வந்தான். பிஎஸ்பிபி விதைத்த முள் மரத்தால் தான் நாம் இப்பவும்
நல்ல கனிகளை இழந்து வருகிறோம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே AIEEE எனப்பட்ட JEE நடத்தப்பட்டு ஐஐடி எனும் மாயவலைக்குள் சிக்கி சிதைந்தே போன ஒரு கற்பழிக்கப்பட்ட கன்னிப்பெண் தான் பிற மாநில பாடத்திட்டங்கள். இதற்கு ஒரு முடிவு வரும் வரை வள்ளுவருக்கு பூநூல் இருந்து கொண்டேதான் போகும்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
