Sadhguru Profile picture
Yogi, Mystic, Visionary & Founder, @ishafoundation. Tweets from Sadhguru himself are signed -Sg. #SaveSoil #ConsciousPlanet | #MiracleOfMind

Feb 27, 2021, 52 tweets

11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg

கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர். -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும். -Sg #கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

உங்களுக்குத் தெரியுமா? ஜனநாயக, மதசார்பற்ற இந்தியாவில், ஒரு சமூகம் அதன் வழிபாட்டுத்தலங்களை தானே நிர்வகிக்கும் சுதந்திரமின்றி இருக்கிறது - கடந்தகாலத்தின் கிழக்கிந்திய கம்பெனியை பின்பற்றி அடுத்தடுத்த அரசுகளுக்கு அடிமையாக இருக்கிறது. -Sg
#கோவில்அடிமைநிறுத்து

தமிழ்நாட்டில் கோவில்கள்தான் தமிழ் சமூகத்தின் ஆன்மா. நகரங்கள், கோவில்களை பிரதான அம்சமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டன. இன்று அரசு பிடியில் ஆன்மாக்கள் உள்ளன - படிப்படியாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

தமிழக கோவில்கள், நமது ஊர்களின் அடிப்படையாகவும், விழிப்புணர்விற்கான மையமாகவும் உருவாக்கப்பட்டன. கோவில்களை நிர்வகிக்கவும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் சமூகத்திற்கு முழு சுதந்திரம் இருக்கவேண்டும். -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து வருவது, அவை கவனிப்பின்றி அக்கறையின்றி நடத்தப்படுவதை காட்டுகிறது, பக்தியையும் தியாகத்தையும் உணர்த்தவில்லை. யுனெஸ்கோ அறிக்கையின்படி, "வரலாற்று சிறப்புமிக்க தமிழக கோவில்கள் சிதைந்து வருகின்றன." அவமானம். -Sg
#கோவில்அடிமைநிறுத்து

தமிழ் கலாச்சாரத்தின் மையம் கோவில். தமிழ்நாட்டின் சின்னம் கோவில். தமிழ் மக்களின் இதயமே கோவில்தான். கோவில்களை நிச்சயமாக விடுவிக்க வேண்டும். -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

கோவில் என்று நான் சொன்னால் பலரும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் பற்றி பேசுகிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் தோய்ந்த இம்மண்ணை, தீராத பொருளாசை கொண்டதாக நாம் மாற்றிவிட்டோமா? -Sg #கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

அறநிலையத்துறை கணக்காய்வு அறிக்கை ஒன்றின்படி, "கடந்த 25 ஆண்டுகளில் 1200 தொன்மையான சிலைகள் திருடப்பட்டுள்ளன". கோவில்களை பேராசையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். இதயம் முழுக்க பக்தி நிறைந்தவர்களே கோவில்களை நிர்வகிக்க வேண்டும். -Sg.
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

கோவில் நிலம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம்: "கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது". ஆணித்தரமான ஆதாரம். தமிழக கோவில்களை விடுவிப்பதுதான் அவற்றை காப்பாற்ற ஒரே வழி. -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

#தமிழ் கலாச்சாரம், பக்தியில் தோய்ந்த ஒரு கலாச்சாரம். இலக்கியம், கலை, இசை & நடனம் முதற்கொண்டு, கோவில்கள் பக்தியின் வெளிப்பாடாக விளங்கின. கோவில்களை சிதைந்துப் போக‌விட்டால், தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையே சிதைந்துபோக விட்டுவிடுவோம். -Sg
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

#கோவில்கள் ஆற்றலும், வல்லமையும், ஞானமும் வழங்கும் சக்திவாய்ந்த தலங்கள். அவை சாதி, இனம் & வர்க்கம் தாண்டி அனைவருக்குமானதாய் இருக்க வேண்டும். -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

#கோவில்பூசாரிகள் சம்பளம் சொர்ப்பமாக இருப்பதால், வேறு வழிகளில் வருவாய் ஏற்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வறுமையில் வாடுதல் பக்திக்கான தகுதியில்லை. இந்த மனப்பான்மை மாறிட வேண்டும். -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

வலியும் அவமானமும் தருகிறது. சுயமாக தங்களை பாதுகாவலர்களாக நியமித்து கொண்டுள்ளவர்களை விட, திருடர்களுக்கு இச்சிலைகளின் மதிப்பு தெரிகிறது போலும். தனக்கு அர்ப்பமாய் தெரியும் ஒன்றினை, அரசு தன்வசம் வைத்திருக்கக் கூடாது. -Sg
#கோவில்அடிமைநிறுத்து @CMOTamilNadu @mkstalin @rajinikanth

கோவில் கட்டுவதும் புணரமைப்பதும் ஒரு கலை மட்டுமல்ல, நுட்பமான ஒரு அறிவியலும்கூட. மிகக்குறைந்த செலவில் செய்வதாகக் கூறும் காண்டிராக்டர்கள் கைகளில், தொன்மையான கோவில் கட்டிடவியல், சுவர்சித்திரங்கள் மற்றும் கல்வெட்டுகள் மீட்கமுடியாதபடி சிதைக்கப்படுகின்றன. -Sg #கோவில்அடிமைநிறுத்து

முதல்வரிடமும் எதிர்கட்சி தலைவரிடமும் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது பற்றிய அவர்களது நோக்கத்தை அறிவிக்குமாறு கோரியுள்ளேன்.பல்லாண்டு கவனிப்பின்றி பராமரிப்பின்றி இருப்பதை நாம் பார்த்துகொண்டு இருக்கலாகாது. சமூகத்திற்கு இது ஆன்மீக தற்கொலை.-Sg @EPSTamilNadu @mkstalin

#ஆழ்வார்கள் தீவிர வழிபாட்டுணர்வை இம்மண்ணில் நிலைநிறுத்தியுள்ளனர், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவம் இது.
அரசின் தலையீட்டால், இந்த தனிச்சிறப்பு குலைக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

#கோவில்கள் களவாடப்படுவதை இன்னொரு சகாப்தம் வரை நாம் பொறுத்துக்கொள்ளப் போகிறோமா? கொள்கைகள்,‌ கோட்பாடுகள், தத்துவங்களை புறந்தள்ளி, தங்கள் உயிரினும்‌ மேலாக கோவில்களை பக்தர்கள் காப்பர்! #கோவில்அடிமைநிறுத்து -Sg @CMOTamilNadu @mkstalin @rajinikanth

ஞானிகளையும் நாயான்மார்களைப் போன்ற பக்த கவிகளையும் வளர்த்து வணங்கிய இந்த நாகரிகம், இன்று அந்த நாகரித்தின் செழுமையை போற்றிப் பாராட்டாத நிர்வாகிகளின் பிடியில் சிக்கியிருப்பதை நம்பமுடியவில்லை. -Sg #கோவில்அடிமைநிறுத்து @CMOTamilNadu @mkstalin @rajinikanth

பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான பழம்பெரும் #கோவில்கள், மற்ற கட்டிடங்களுக்கு பயன்படுத்தவோ கலைப்பொருட்களாக விற்கவோ கற்கள் உடைக்கப்படுவதால், சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. கோவில்கள் இதயமில்லாமல் நிர்வகிக்கப்படும் விதம் நெஞ்சை நெருடுகிறது. தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg

தமிழ்நாடு, கோவில்களின் நாடாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. நாம் தமிழ்நாட்டு கோவில்களை விடுவிக்காவிட்டால், விரைவில் இறந்த கோவில்களின் நாடாக அழைக்கப்படுவோம். -Sg
#கோவில்அடிமைநிறுத்து
#FreeTNTemples
@CMOTamilNadu @mkstalin @rajinikanth

கோவில்கள் நலனை பாதுகாக்க எந்த படியும் எடுக்கவில்லை"" என அறநிலையத் துறையின் "அக்கறையின்மையை" சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. #கோவில்அடிமைநிறுத்து. பக்தர்களால் மட்டுமே கோவில்களை பேணிவளர்த்து மீண்டும் உயிரோட்டமானதாக மாற்றமுடியும். -Sg @EPSTamilNadu @mkstalin @rajinikanth

இந்திய தலைமை நீதிபதி ஒருவர், "கோவில்களை ஏன் அரசு அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டும்" என கேள்வி எழுப்புவதும், தமிழகத்தில் நிகழும் "சிலை திருட்டு" பற்றி பேசுவதும், புறந்தள்ள முடியாத கண்டனங்கள். #கோவில்அடிமைநிறுத்து. இது மாநில அரசின் வேலையில்லை. -Sg

கிழக்கிந்திய கம்பெனி கோவில்களை கையகப்படுத்திய போது, வருவாய்க் குழு மூலமாக அவற்றை நிர்வகித்தார்கள். "வருவாய்" என்ற சொல்லே எல்லாம் சொல்கிறது! ஆங்கிலேய அடக்குமுறையின் சுவடுகளை முடிவுக்கு கொண்டுவந்து தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples

மெல்ல சாகவிடுவது, கோவில்களுக்கு மரணச் சங்கினை நிச்சயம் ஊதும். கடந்தகாலத்தில் கோவில்கள் அழிக்கப்பட்ட போது, அவற்றை மீண்டும் எழுப்ப மக்கள் உயிரையும் பணயம் வைக்க உறுதியாய் இருந்தனர். #கோவில்அடிமைநிறுத்து. ஆன்மாவிலிருந்து உயிர்பிரிவதை சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. -Sg

அரசியலமைப்பில் ஒவ்வொரு பிரஜைக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வாசித்துவிட்டு அதனை அறநிலைத்துறையின் சட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இது இனவெறிக்கு இணையானது. #கோவில்அடிமைநிறுத்து. கோவில்கள் அரசிற்கு சொந்தமல்ல, சமூகத்திற்கு சொந்தமானவை. -Sg

பெரும்பான்மை சமூகத்தில், மக்கள்தொகையில் 87% இருப்பவர்களில், நம் வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க தேவையான நேர்மையும் திறமையும் கொண்ட கையளவு மக்களை நம்மால் கண்டறிய முடியாது என்று கருதுவது மோசமான அவமதிப்பு. -Sg #FreeTNTemples @CMOTamilNadu @mkstalin @rajinikanth
#கோவில்அடிமைநிறுத்து

#கோவில் மூர்த்திகளின் சிலைதிருட்டு உங்களுக்கு அதிர்ச்சி தராவிட்டால், சில கோவில்களில் திருடிய சிலைக்கு பதிலாக போலி சிலையை வைத்துள்ளார்களே! அரசின் பார்வையிலேயே இது நடக்கிறது. #கோவில்அடிமைநிறுத்து.‌ கோவில்களை நிர்வகிக்க அரசுக்கு எந்த காரணமும் உரிமையும் வசதியும் இல்லை. -Sg

பல இடங்களில் செய்யப்படுவது போல, #கோவில்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னங்கள் அல்ல. சமூகம் அவற்றை உயிரோட்டமாகவும் துடிப்புடனும் வைத்து, நாகரிகத்தில் பெருமைக்குரிய அவற்றின் இடத்தையும் மீட்டுக்கொடுக்கும். -Sg #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples

குருத்வாராக்கள், தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுவழங்கும் லங்கார் முதல், பேரிடர் சமயங்களில் செய்யும் உதவிகள் வரை, சமூகங்கள் எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். #கோவில்கள் இன்னும் எவ்வளவோ செய்யமுடியும். -Sg #கோவில்அடிமைநிறுத்து

75வது சுதந்திர தினத்திற்கு முன், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் கோவில்களை சமூகத்திடம் ஒப்படைக்க உறுதியேற்க வேண்டும். இது ஒரே நகர்வில் நிகழத் தேவையில்லை. அந்த நோக்கத்தையாவது வெளிப்படுத்தி, இந்த மாற்றத்திற்கான வழிமுறையை உருவாக்கத் துவங்குங்கள். -Sg #கோவில்அடிமைநிறுத்து

இந்து சமூகத்திற்கு யாத்திரை செல்ல சொற்பமான நிதியுதவி தேவையில்லை. நம் மகத்தான கோவில்களுக்கு நித்தமும் செல்வதுதான் நமக்கு யாத்திரை. நமக்குத் தேவை, நம் கோவில்களின் பிரம்மாண்டத்தை மீட்டெடுப்பது தான், பணம் இல்லை. -Sg #கோவில்அடிமைநிறுத்து @CMOTamilNadu @mkstalin

75 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் ஒருவருக்கு தான் விரும்பும் மதத்தை விரும்பும் வழியில் பின்பற்றும் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் இல்லாவிட்டால், இது எப்படிப்பட்ட சுதந்திரம்? #கோவில்அடிமைநிறுத்து -Sg @CMOTamilNadu @mkstalin @rajinikanth
#FreeTNTemples

கோவில்களை சமூகத்திடம் ஒப்படைக்கும் சட்டங்களை நாம் இயற்றுவது அவசியம். இது நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல. சட்டப்படி, ஒரு சமூகத்திற்கு நியாயமாக சொந்தமானது அவர்கள் வசம்தான் இருக்கவேண்டும். #கோவில்அடிமைநிறுத்து - Sg @CMOTamilNadu @mkstalin @rajinikanth

பக்தர்கள் கோவில்களை சரியாக நிர்வகிக்க மாட்டார்கள் என பயப்படுவது அடிப்படையற்றது உண்மைக்கு புறம்பானது. எல்லா சமூகங்களிலும், பக்தர்கள் நிர்வாகம் செய்யும் எல்லா வழிபாட்டு தலங்களிலும், வளர்ச்சியும் வளமும் தழைக்கிறது. கோவில்கள் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுமா? #கோவில்அடிமைநிறுத்து -Sg

கிட்டத்தட்ட 12,000 கோவில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதே நிலைமை நீடித்தால், கோவில்கள் அருங்காட்சியகங்களாக & நினைவுச் சின்னங்களாக மாறிவிடும். #கோவில்அடிமைநிறுத்து. கோவில்களின் தனிச்சிறப்பே வளர்ச்சிதான், பதப்படுத்தி வைக்கப்படுவது அல்ல. -Sg

வாழ்த்துகள் திரு. ஜி.கே. வாசன் அவர்களே. பக்திசார்ந்த கலாச்சார வாழ்வு வாழும் தமிழ் மக்களிடம் கோவில்களை ஒப்படைப்பேன் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளீர்கள். கோவில் மாநிலமான தமிழ்நாட்டின் பெருமையை நாம் மீட்டெடுப்போம். ஆசிகள். -Sg @TMCforTN #FreeTNTemples

ஸ்ரீரங்கம் - 14ம் நூற்றாண்டு கோவில்; ஒரு தீவிர பக்தை அன்னிய படையெடுப்பின் போது தன் உயிரைத் தியாகம் செய்து தெய்வச்சிலையை காத்தாள். அதே கோவிலில் சிலை திருட்டுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது மிகுந்த அவமானத்திற்குரியது. #கோவில்அடிமைநிறுத்து -Sg

ஸ்ரீ அர்தநாரீசுவரர் கோவில், கள்ளக்குறிச்சி - கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு தடைவிதிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, நம்மை அவமானத்தில் தலைகுனியச் செய்கிறது. #கோவில்அடிமைநிறுத்து. கோவில்களில் பக்திதான் ஒரே அதிகாரமாய் இருக்கவேண்டும். -Sg

#தமிழ்கலாச்சாரம், பக்தியில் தோய்ந்த ஒரு கலாச்சாரம். இலக்கியம், கலை, இசை & நடனம் முதற்கொண்டு, கோவில்கள் பக்தியின் வெளிப்பாடாக விளங்கின. கோவில்களை சிதைந்துப் போக‌விட்டால், தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையே சிதைந்துபோக விட்டுவிடுவோம். -Sg
#கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples

பாரதத்திலுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன; கவனமும் திறமையும் இல்லாமல் செய்யப்படும் புணரமைப்பால் இவை படிப்படியாக சிதைந்து வருகின்றன. பூமியில் மிக தொன்மையான நாகரிகத்தின் பல்லாயிரமாண்டு பழமையான பதிவுகளை இழக்கும் நிலையில் உள்ளோம். #கோவில்அடிமைநிறுத்து -Sg

"கோவில் செழித்தால் நாடு செழிக்கும்" - தொன்மையான தமிழ் பொன்மொழி இது. #கோவில்அடிமைநிறுத்து. இது செல்வச் செழிப்பு பற்றியல்ல, செழுமையான கலாச்சாரத்தை பேணி வளர்க்கையில், செல்வச்செழிப்பு அதன் இயல்பான விளைவாய் நிகழும். -Sg @CMOTamilNadu @mkstalin @rajinikanth

#யுனெஸ்கோ வெறும் 10 கோவில்களைத்தான் பார்வையிட தேவையிருந்தது, அறநிலையத்துறை மீது தன் பகிரங்கமான குற்றச்சாட்டை சமர்ப்பிக்க: அப்பட்டமான விதிமீறல்கள், தவறான புணரமைப்பு பணி & தொன்மையான கோவில்களை "படுகொலை" செய்தல். #கோவில்அடிமைநிறுத்து - இது சமுதாயத்திற்கு சுமையல்ல, வரம். -Sg

அரசின் இந்தச் செயலை புரிந்துகொள்ள இயலவில்லை: அதாவது, 2019 ஆண்டில், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமே அந்நிலத்தை வழங்க அரசாணை பிறப்பித்த அரசு, தற்சமயம்‌ கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க மறுக்கிறது. #கோவில்அடிமைநிறுத்து. - Sg @CMOTamilNadu @mkstalin

சென்னை உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை அதன் பணியை செய்யத் தவறியதால் சிறப்பு நீதிமன்றம் அமைத்து வெளியிலிருந்து தணிக்கையாளர்களை பணியமர்த்தச் சொன்னது. #கோவில்அடிமைநிறுத்து. இந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டியிருப்பது சமுதாயத்திற்கு அவமானம். -Sg @CMOTamilNadu @mkstalin

ஒரு கோவில் அழிந்துபோனாலும் அதன் சொத்துக்கள் அறநிலையத் துறைக்கே சொந்தம். அறநிலையத் துறையின் ஆர்வம் கோவில் மீது இல்லை என்பதை இதுவே தெளிவாக்குகிறது. #கோவில்அடிமைநிறுத்து. - Sg @CMOTamilNadu @mkstalin

யுனெஸ்கோவின் உண்மையறியும் குழு, தமிழக #கோவில்களின் அவலநிலை குறித்து வருந்தி, கோவில்கள் சிதைவதும் அழிவதும் "படுகொலை" என சுட்டிக்காட்டியது. 4 ஆண்டுகளாகியும் அரசின் நடவடிக்கைக்காக இந்த சமுதாயம் காத்துக்கொண்டிருக்கிறது. சமுதாயத்திற்கு பொறுப்பு, வலிமை & வல்லமையை வழங்குங்கள். -Sg

#தமிழ் சார்ந்த அனைத்துமே பக்தியில் வேரூன்றியிருக்கிறது. இந்த மண், கலாச்சாரம், மொழி, கலை - அனைத்துமே பக்தியில் தோய்ந்திருக்கிறது. அந்த பக்தியின் ஆதாரமே கோவில்தான். #கோவில் இல்லாவிட்டால் இது திசைகாட்டி அற்ற நாகரீகம் ஆகிவிடும். #கோவில்அடிமைநிறுத்து. -Sg @CMOTamilNadu @mkstalin

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling