TOM CRUISEッ Profile picture
Original Id ஓபன் பண்ணி Fake ah இருக்க புடிக்காம, Fake Id ஓபன் பண்ணி Original ah சுத்திக்கிட்டு இருக்கேன்🤗 Telegram_Id: https://t.co/gPprudE2Dl

Mar 7, 2021, 8 tweets

🔞🔞 திகில் பட ரசிகர்கள் தாராளமாக பார்க்கலாம் 🔥🔥

#TheGreenInferno என்பதை மொழிபெயர்த்தால் 'பச்சை நரகம்' என்று பொருள் வரும். பச்சை பசேல் என்றாலே சொர்க்கம் தானே.. ஏன் நரகம் என்கிறார்கள்??.. ஆம் உண்மையிலே இந்தப் படத்தில் வரும் இளைஞர்களுக்கு அந்த அமேசான் காடு நரகம் தான்.

பெரு' நாட்டில் இருக்கும் அமேசான் காட்டை அழித்து அங்குள்ள பூர்வகுடிகளையும் அப்புறப்படுத்த முனைகிறது ஒரு எரிபொருள் நிறுவனம்.அதை தடுக்கவும் கவன ஈர்ப்பு போராட்டம் பண்ணவும் அமெரிக்கவிலிருந்து
கிளம்புகிறார்கள் பசுமை ஆர்வ
இளைஞர்கள்.

உயிர பணயம் வைத்து அங்கு போய் சேரும் அந்தஇளைஞர் கூட்டம் திட்டமிட்டபடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வெற்றிகரமாக சிறிய விமானத்தில் திரும்புகின்றனர் அவர்கள் பயணம் செய்யும் அந்த சிறிய விமானம் விபத்துகுள்ளாகி அந்த அடர்ந்த அமேசான் காட்டுகுள் விழுந்துவிட சிலர் அங்கேயே இறந்துவிடுகிறார்கள்

உயிர்பிழைத்த மற்ற சில இளைஞர்களை சூழ்ந்து கொள்கின்றனர் அந்த காட்டின் பூர்வகுடிகள். அவர்கள் சாதாரண பூர்வகுடிகள் அல்ல நரமாமிசம் உண்பவர்கள்.
அந்த இளைஞர்களை தங்கள் இடத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த நரமாமிச ஆதிவாசிகள் அந்த கூட்டத்திலே உள்ள பருமனான ஒரு இளைஞனை சும்மா கூறுபோட்டு

உப்புக்கண்டமாக்கி உண்கிறார்கள்.
மற்ற இளைஞர்கள் சிறைப்படுத்தப் படுகிறார்கள். அடுத்தடுத்து நாம் தான் என்று எல்லோருக்கும் உயிர் பயம் தொற்றிக் கொள்ளுது. ஆனால் அந்த கொடூர ஆதிவாசிகள் இவர்களை எவ்வளவு வதைக்க முடியுமோ? அவ்வளவு வதைக்கிறார்கள் , அவர்களிடமிருந்து தப்பிக்க முயல்கிறார்கள்..

ஆனால் அந்த அடர்ந்த காட்டில் தப்பிப்பது அவ்வளவு எளிதா என்ன?.. இறுதியில் என்ன என்பதை திரையில் காண்க..
அந்த ஆதிவாசிகள் கூட்டத்திற்கு தலைவியாக ஒரு கிழவி இருக்கும் சும்மா எல்லோரையும் அலற விடும்.. அந்த கதாபாத்திரத்தில் நடித்து நம்மையும் அலற விட்ட அந்த நடிகை 'ஆன்டொனியட்டா பரி ' என்பவர்.

அந்த அடர்ந்த காடும் ஆதிவாசி கூட்டமும் அந்த இளைஞர்களை மட்டுமல்ல நம்மையும் மிரட்டுகிறது. Director Eli Roth தான் #CabinFever #hostel போன்ற திகில் பிரபல படங்களை இயக்கியவர்

#CannabalHolocaust என்ற பழைய இட்டாலி படம்தான் இன்ஸ்பிரேஷன் என்கிறார்கள்.

__ Sasikumar

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling