Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. #BelongsToThamizhanStock

Apr 10, 2021, 26 tweets

#செந்தமிழன்_சீமான் - #வரலாறு_தந்த_வாய்ப்பு

சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்? இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்? கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய - 1/31

முன்னவர்களால் ஏன் தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?

தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு நாம் தமிழரை எதிர்ப்போர் அனைவரும் உங்கள் காதுகளையும் விழிகளையும் - 2/31

நன்றாகத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனசாட்சியுடன் பேச விரும்புகிறேன்.

இந்தியம் ஒழித்து திராவிடம் நிலைநாட்ட வந்த அறிஞர் அண்ணாதுரை, பெரியார் நடத்திய தி.க.வை உடைத்து திமுகவை 1947 ல் தொடங்கினார். 1967 ல் அக்கட்சியை அரியணையில் ஏற்றினார். அன்றைக்கு எதிரில் - 3/31

ஒரே ஒரு காங்கிரசு கட்சி ஆளுங்கட்சியாக. அதற்கே அண்ணாவுக்கு ஆட்சியைப் பிடிக்க 20 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சீமான் திராவிடம் ஒழித்து தமிழியம் நாட்ட புறப்பட்டவர். பெயரைத்தவிர அமைப்பென்று ஒன்று இல்லாத நாம் தமிழரை அமைப்பாக்கினார்.
இன்றைக்குச் சீமான் எதிரில் இரண்டு திராவிட - 4/31

கட்சிகள், இரண்டு இந்தியக் கட்சிகள் என நான்கு பெரிய கட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான துணைக்கட்சிகள் களத்தில் நிற்கின்றன.

அன்றைக்கு திரைத்துறையைத் தவிர வேறு பெரிய ஊடகம் இல்லை. அதற்கே அண்ணாவுக்கு எம்ஜிஆர் தேவைப்பட்டார். இன்றைக்கு இலட்சக்கணக்கான சமூக வலைத்தளங்கள் - 5/31

எதிரிகளின் கையில் உள்ளன. முன்னணி திரைநட்சத்திரங்களோ எதிராகக் களத்திலேயே நிற்கின்றனர்.

அன்றைக்குத் திராவிடர் என்றவுடன் பிராமணர் அல்லாத அத்தனை பேரின் ஆதரவும் எளிதாக அண்ணாவுக்குக் கிடைத்தது.

ஆனால் தமிழ்த்தேசியம் என்றவுடன் யாரெல்லாம் தமிழர் என்று கேட்டு, தமிழர்களே - 6/31

கேள்விகளால் கேலிகளாக்கின்றனர்.

அத்தனை ஆதரவு இருந்தும் ஒரு காங்கிரசை எதிர்க்க குலக்கல்வி கொண்டுவந்த இராஜாஜியுன் கூட்டணி வைத்தார் அண்ணா.

இத்தனை எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இன்றுவரை தத்துவத்திலிருந்து நழுவாது, தமிழ்த்தேசியத்திலிருந்து வழுவாது, வெற்றி தோல்வி - 7/31

குறித்துக் கலங்காது, கூட்டணி பேரங்களுக்கு மயங்காது தனித்தே போட்டியிடுகிறார் சீமான்.

பிரிவினைவாதி, தீவிரவாதி, சாதியவாதி, மதவாதி, இனவாதி, மொழி வெறியர், கிறித்துவ கைக்கூலி, இஸ்லாமிய அடிமை, இந்துத்துவ ஏஜண்ட், மலையாளி, ஆமக்கறி என்று எத்தனை எத்தனை வசைச்சொற்கள் - 8/31

அத்தனைக்கும் அத்தனைக்கும் அசராமல் சீமான் தமிழ்த்தேசியத்தை தமிழ் தெருவெங்கும் கொண்டு சென்றார். எப்படி?

திராவிட சுபவீ ஒருமுறை இப்படிச் சொன்னார்.. திமுகவின் இருவர்ண கொடியை எதிர்த்த கட்சிகளின் கொடிகள் கூட என்ன வண்ணத்திலிருந்தது என்று இன்று யாருக்குமே தெரியாது. திமுகவை - 9/31

அழிக்கத் தொடங்கப்பட்ட அத்தனை கட்சிகளும் அழிந்துபோயின என்று மேடையில் எக்காளமிட்டார். அந்த ஏளனத்தில் இருக்கும் ஆணவம் உங்களின் யாருடைய மனதிலாவது எதிரொலிக்கிறதா? தமிழ்தேசியர்கள் இந்த மண்ணில் வீழ்ந்த வேதனை வரலாறு உங்கள் விழிகளை நனைக்கவில்லையா?

அந்த துரோக வரலாற்றை உடைத்து - 10/31

ஈழத்தில் வீழ்ந்த புலிக்கொடியை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பட்டொளி வீசி பறக்கவிட்டாரே சீமான் அதெப்படி?

மணியரசனை விட தமிழ்த்தேசியத்தைத் தெளிவாகப் பேச யாரால் முடியும்? தியாகுவை விட தர்க்க வாதத்தில் சிறந்தவர் உண்டா? மாபொசியை விடப் போராட்ட குணம் கொண்டவர் யார்? - 11/31

இத்தனை பேரும் தோற்றதெப்படி?

சீமான் எப்படி தமிழ்த்தேசியத்தை வலுவான அமைப்பாகக் கட்டமைத்தார்.? சீமான் அரசியல்வாதி, கொள்கைவாதி என்பதால் மட்டும் சாத்தியமானதல்ல அது. அடிப்படையில் அவன் ஒரு படைப்பாளி.

தரவுகளின் தகவல்களாகப் புத்தக வரிக்குள் புதைந்து கிடந்த - 12/31

தமிழ்த்தேசியத்தை தமிழ்தெருக்களில் கொட்டி முழங்கியவன். முதுநிலை மூளைக்குள் வெதும்பிய நிலையிலிருந்த தமிழ்த்தேசியத்தை, மூடிய அரங்குகளில் முடங்கிய நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்த தமிழ்த்தேசியத்தை வெட்டவெளியில் பேசிப்பேசி பட்டிதொட்டி எங்கும் பரவிடச் செய்தவன் சீமான் - 13/31

உற்றுநோக்கும் கண்களுக்கிடையில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாய் உச்சத்தில் உறுமிக்கொண்டிருக்கும் பேச்சை, அப்படியே அடிவாரத்திற்கு அழைத்து வந்து வீரிய சிரிப்புகளை விதைத்துவிட்டுச் செல்லுவான். பார்த்துக்கொண்டிருப்பர் மனங்களில் வரலாறும் தத்துவமும் வார்த்துக்கொண்டிருப்பான் - 14/31

ஒருநொடி கூட்டத்தில் வாட்டத்தைக் கண்டுவிட்டால் இயல்பான அரசியலை எள்ளி நகையாடி கொஞ்சம் இளைப்பாற செய்திடுவான். பசியறிந்து உணவூட்டும் தாய்போல், தம்பிகளுக்குதமிழ்த்தேசிய உணர்வூட்டியவன் அவன்.

அறிக்கைகள் யாவிலும் வார்த்தை அமைவு முதல் பொருள் புரிதல் வரை, எழுத்துப்பிழை முதல் - 15/31

இலக்கணப்பிழை வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி. மேடை பதாகையின் அளவு முதல், என்ன வாசகம், என்ன படங்கள், என்ன வண்ணம் என்பதுவரை அவரின் படைப்பாற்றல் மிளிரும். வீடியோ எடிட்டிங், கேமிரா ஆங்கிள், மைக் வால்யூம் என ஒவ்வொன்றிலும் அவரின் தொழில்நுட்பத்திறன் ஒளிரும் - 16/31

பின்னால் கேமிரா வைத்ததைத் தவிர என்ன புரட்சியைச் செய்தது நாம் தமிழர் கட்சி என்று பிரசன்னா ஒரு முறை அண்ணன் சீமானை பார்த்து கேட்டான். பின்னால் வைத்த கேமிராதான் அத்தனை புரட்சிக்கும் ஆரம்பப்புள்ளி என்பதை அவன் அறியவில்லை. கீழே உள்ள படம் அதை உங்களுக்கு உணர்த்தும் - 17/31

காலியான இருக்கைகளோடுதான் அவன் பேசத் தொடங்குவான். பேசி முடிக்கும்போது தெருக்கள் முழுதும் இருகைகளாக மாறியிருக்கும். அதன்மூலம்தான் ஸ்மார்ட்போன்களில் சோசியல்மீடியாக்களை பார்த்துக்கொண்டிருந்த இளையோர் உள்ளத்திற்குள் ஊடுருவி அவற்றைத் தமிழ்த்தேசிய ஆயுத களங்களாக அவனால் - 17/31

உருமாற்ற முடிந்தது.

அவன் வரும்வரை படித்தவர் சிலர் மட்டுமே பிடித்துக்கொண்டு தத்துவ சிகரங்களில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ்த்தேசியத்தை, பாமர மக்களின் பாதாள மனங்களில் ஜனரஞ்சக பேச்சு நதிகொண்டு பாயச்செய்தவன்.

அதனால்தான் தமிழ்த்தேசியத்தைத் தமிழ்த் தெருக்களில் தடம் - 18/31

பதித்திட மட்டுமன்றி, தமிழர் இதயங்களில் இடம் பிடித்திடச் செய்யவும் அவனால் முடிந்தது.

இதற்குமுன் தமிழ்த்தேசியம் பேசியவர்கள், இப்போது பேசிக் கொண்டிருப்பவர்கள், நாம் தமிழரிலிருந்து விலகியவர்கள், ஏன் நாம் தமிழரில் இப்போது இருக்கின்றவர்கள் என அத்தனைப்பேரும் ஒற்றை - 19/31

மேடையில் பேசட்டும். அதற்கு எதிர்த்திசையில் சீமான் ஒருவர் மட்டும் பேசட்டும். அவர்கள் அத்தனைப்பேரும் மூன்று நாட்களில் சேன்று சேரும் பார்வைகளைச் சீமான் பேச்சு வெறும் மூன்று மணி நேரத்தில் சென்றடைந்திருக்கும்.

சீமான் சராசரி அரசியல்வாதி அல்ல - 20/31

அவரிடம் போராட்ட குணம் இருந்தது. தத்துவ தெளிவு இருந்தது. வரலாற்று புரிதல் இருந்தது. வாதத்திறமை இருந்தது. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் அவனிடம் இருந்தது. மக்களை கவரும் வகையில் பாடி வைக்கவும் முடியும், கேள்வி கேட்போரைத் தெறித்து ஓட வைக்கவும் அவரால் முடிந்தது - 21/31

இவையனைத்தையும் விட தத்துவ நிலைப்பாட்டில் உறுதிப்பாடு என்ற உயர்ந்த குணமும் இருந்தது. இவையாவும் ஒருங்கமைந்த படைப்பாளி என்பதாலேயே மக்களை ஈர்த்து தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மண்ணில் அமைப்பாக்க அவரால் முடிந்தது - 22/31

அனைத்தையும்விட அமைப்புதான் இங்கு முக்கியம். நாம் எதிர்த்துப் போரிடுவது வெறும் தத்துவமா, தலைவர்களையோ மட்டுமல்ல. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரசு என்ற வலிமை வாய்ந்த அமைப்புகளை எதிர்த்துப் போரிடுகிறோம். தமிழ்த்தேசியம் அறம் சார்ந்த தத்துவத்துவமாகவும், அறிவார்ந்த - 23/31

தலைவர்களையும் கொண்டிருந்த போதிலும் அமைப்பாகவில்லை என்பதால் எதிர்த்துப் போரிடும் வலிமையற்று இருந்தது.

தத்துவம், தலைவன், அமைப்பும் ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் போன்றது.

வலிமையான அமைப்புதான் தத்துவத்தைச் செழுமையாக்கும். தலைவனை வலிமையாக்கும் - 24/31

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling