Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

Apr 11, 2021, 10 tweets

வணக்கம்.
1000 வருடங்களுக்கு முன்பே 2020-21 வருடத்தின் நிலையை கணித்த தமிழன்.

சர்வாரி வருடத்தில் சாதிகள் பதினேட்டும் தீராத நோயினால் திரிவார்கள். மழையில்லாமல் பூமி விளையாது.புத்திரர்களும் மற்றவர்களும் எமனின்றி சாவார்கள்.
-இடைக்காடர் சித்தர்.
காலம்:சங்ககாலம்.
m.facebook.com/story.php?stor…

1000 வருடங்களுக்கு-2
சார்வரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறந்திருந்தது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு,

1000 வருடங்களுக்கு-3
மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,சனி,தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர்

ஐீவசமாதி.

1000 வருடங்களுக்கு-4
தனது நூலில் வெண்பாவாக சொல்லியிருக்கிறார்.

"சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை

பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமின்றி சாவார் இயம்பு"

சார்வரி ஆண்டில்...

m.facebook.com/story.php?stor…

1000 வருடங்களுக்கு-5
பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர்.

1000 வருடங்களுக்கு-6
மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது.

இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார்.

1000 வருடங்களுக்கு-7

இடைக்காடு-முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை.
m.facebook.com/story.php?stor…

1000 வருடங்களுக்கு-8
இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன.

m.facebook.com/story.php?stor…

1000 வருடங்களுக்கு-9

இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.

1000 வருடங்களுக்கு-10

அடுத்து பிலவ ஆண்டு பலனை இடைக்காடர் சங்க பாடலுடன் நாளை பதிவு செய்கிறேன் .நன்றி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling