*"ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம்!”*
========================
சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில்
தெய்வத் தமிழ்ப் பேரவை
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! - 1/6
========================
“ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை - 2/6
சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா *பெ. மணியரசன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்) - 3/6
குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சத்தியபாமா (நிறுவனர் - சத்தியபாமா அறக்கட்டளை), வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் (சென்னை உயர் நீதிமன்றம்), மோகனசுந்தரம் சுவாமிகள் (திருவில்லிப்புத்தூர் தெய்வத்தமிழ் ஆன்மீகர்), இறைநெறி இமயவன் - 4/6
(தெய்வத்தமிழ்க் கூடல், குடந்தை), கலையரசி நடராசன் (தலைவர், சைவத் தமிழ்ப் பேரவை, ஆவடி), வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன் (கரூர் சித்தர் ஆன்மிகக் கூட்டமைப்பு), ஆசீவக சுடரொளி (ஆசீவகம் – சமய நிறுவனம்), பொன்னுச்சாமி அடிகளார் (தேனி மாவட்டம்), கி. வெங்கட்ராமன் - 5/6
(தமிழ்த்தேசியப் பேரியக்கம்), அரங்கநாதன் (அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்), முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (வள்ளலார் ஆய்வாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
#Save_TNTemples_From_Isha_Jakki
#Save_Elephants_From_Isha_Jakki - 6/6
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.