PARINetworkTamil Profile picture
The People's Archive of Rural India - தினசரி மக்களின் தினசரி வாழ்க்கையை பற்றிய தளம். பி சாய்நாத் இதன் நிறுவனர் ஆசிரியர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில்.

Apr 14, 2021, 9 tweets

#AmbedkarJayanti
#Ambedkar
#DalitHistoryMonth

இது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களுடைய நம்பிக்கை நாயகனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்களுக்கான சுய மரியாதையைத் தேடியும் ஒன்று கூடும் அசரவைக்கும் சங்கமம்.

bit.ly/3gE6iRG

#PARITamil #RuralIndiaOnline #Ambedkar

"நாங்க இங்க பாபாசாகேப் மேலே உள்ள பாசத்தால வந்திருக்கோம். நாட்டுக்கு பல நல்ல காரியங்களை அவர் செய்ஞ்சாரு. வேறு யாரும் செய்ய முடியாததை எல்லாம் சாதிச்சு காமிச்சாரு." என்கிறார் லீலாபாய்.

'இந்தத் திருவிழாவை பாக்க தான் ஊரில இருந்து வந்தேன்' என்கிறவர், அங்கே நிலவும் பரபரப்பை சுட்டிக்காட்டி, ' இங்க நான் பாபாசாகேப் அம்பேத்கரை நினைச்சிக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கேன்' என்கிறார்.

சக்குபாய் கையில் இருக்கும் சிவப்புப் பையில் ஒரே ஒரு புடவையும், ஒரு ஜோடி ரப்பர் செருப்பும் மட்டுமே இருக்கிறது. "நான் தனியாத்தான் வந்திருக்கேன். ரொம்பக் காலமாவே இந்த நாளன்னிக்கு இங்க நான் எல்லா வருசமும் வந்திருவேன். இங்க வந்தாதான் மனசு நிறைவா இருக்கு." என்று உற்சாகமாகிறார்.

சாந்தாபாயை போலக் கொடிய வறுமையில் சிக்குண்டிருக்கும் மக்கள் பலர் டிசம்பர் 6 அன்று தாதர்-சிவாஜி பூங்காவிற்கு வருகிறார்கள். அவர்கள் கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு வருவதுண்டு. பலர் வெறுங்கையோடு வருவதும் நிகழ்கிறது.

ஆனந்தா வாக்மரே, நந்தேத் மாவட்டத்தின் அம்புல்கா கிராமத்தில் இருந்து பன்னிரெண்டு வயது மகள் நேஹாவோடு வந்திருக்கிறார். "நான் இங்க பாபாசாகேப்பை பார்க்க ஓடோடி வந்திருக்கேன். அவரால தான் எங்களுக்கு இவ்வளவு நல்லது நடந்திருக்கு. அவர் மக்களின் மகாத்மா'" என்று மெய்சிலிர்க்கிறார் ஆனந்தா.

"எங்களுடைய ஷ்ரதாஞ்சலியை செலுத்த வந்திருக்கோம். நான் விடாம இங்க வந்த எங்க பசங்களும் வருவாங்கன்னு நம்புறோம். இந்த வழக்கம் தொடர்ந்துக்கிட்டே இருக்கணும்." என்கிறார் நிதின்.

"இங்க இப்போதான் முதல் முறை வந்திருக்கேன். என் பொண்டாட்டி, புள்ளைங்களையும் கூட்டிகிட்டு வந்திருக்கேன். இந்த முறை அவங்க எல்லாருக்கும் டிசம்பர் 6 இங்க எப்படி இருக்குனு காட்டணும்னு நினைச்சேன்.' என்கிறார் அந்த விவசாயக் கூலித்தொழிலாளி.

இன்னொரு சிறுமி ஒரு கூடாரத்துக்குள் ஓடுகிறாள். அதன் உள்ளே இருக்கும், டாக்டர் அம்பேத்கரின் மாலையிட்ட புகைப்படத்தின் முன் சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி, வெகுநேரம் அமைதியாக நிற்கிறாள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling