The People's Archive of Rural India - தினசரி மக்களின் தினசரி வாழ்க்கையை பற்றிய தளம். பி சாய்நாத் இதன் நிறுவனர் ஆசிரியர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில்.
Jun 16, 2021 • 15 tweets • 5 min read
பெரும்பாலான பெண்கள் தாங்கள் சிறு பெண்களாக இருந்தது முதலே கோரை வெட்டுவதாக கூறுகின்றனர்.
“நான் பிறந்தது முதலே கோரைக்காடு தான் உலகம். 10 வயதாக இருந்தபோதிலிருந்தே வயல்களில் வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.3 சம்பாதிப்பேன்“என்று 59 வயதான சௌபாக்கியம் கூறுகிறார்.
1/15 bit.ly/3q5YY7q
எம். மகேஸ்வரி (33). கணவனை இழந்த இவருக்கு பள்ளி செல்லும் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் தந்தை தன்னை மாடு மேய்க்கவும், கோரை வெட்டவும் அனுப்புவதை நினைவு கூறுகிறார். “நான் பள்ளி வாசலை கூட மிதித்ததில்லை“ என்று அவர் சோகமாக கூறுகிறார். “இந்த வயல்வெளிகளே எனது இரண்டாவது வீடு."
2/15
இது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களுடைய நம்பிக்கை நாயகனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்களுக்கான சுய மரியாதையைத் தேடியும் ஒன்று கூடும் அசரவைக்கும் சங்கமம்.
#PARITamil#RuralIndiaOnline#Ambedkar
"நாங்க இங்க பாபாசாகேப் மேலே உள்ள பாசத்தால வந்திருக்கோம். நாட்டுக்கு பல நல்ல காரியங்களை அவர் செய்ஞ்சாரு. வேறு யாரும் செய்ய முடியாததை எல்லாம் சாதிச்சு காமிச்சாரு." என்கிறார் லீலாபாய்.
Feb 7, 2021 • 8 tweets • 5 min read
வீட்டிற்கு திரும்பிய சோனிக்கு தனது 5 வயது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவருகிறது. ஊரடங்கினால் ஏற்கனவே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சோனி போன்ற மும்பையின் பாலியல் தொழிலாளர்களுக்கு தங்களின் குழந்தைகளை பாதுகாப்பதும் சவால் நிறைந்த பணி தான்.
+7 bit.ly/3oSoEC1
“இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. ஆனால் யாரும் வாய் திறப்பதில்லை,” என்கிறார் காமத்திப்புராவில் நம்மிடையே அமர்ந்து உரையாடிய பாலியல் தொழிலாளி ஒருவர்.
கடந்தாண்டு தசை அழுகல் நோயால் பிரதிபா ஹிலிம் தனது கைகளையும் கால்களையும் இழந்தார். அதனால் ஓய்ந்துவிடாமல், மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள ஆதிவாசி மாணவர்களின் ஆன்லைன் கல்வி வாய்ப்பு குறைவாக கிடைக்கும் மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே வகுப்பெடுத்து வருகிறார். bit.ly/2MW0o4O
“எனக்கு இவ்வாறு நேரும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. எனக்கு அதிக காய்ச்சல் வந்தபோது நான் இங்கே (கார்ஹே) இருந்தேன்“ என்று பிரதீபா கூறுகிறார்.